சங்கீதம்
96 யெகோவாவுக்காகப் புதிய பாடல் பாடுங்கள்.+
பூமியெங்கும் உள்ளவர்களே, யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்!+
2 யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்; அவருடைய பெயரைப் புகழுங்கள்.
அவர் தரும் மீட்பைப் பற்றிய நல்ல செய்தியைத் தினம் தினம் அறிவியுங்கள்!+
3 அவருடைய மகிமையைப் பற்றித் தேசங்களுக்குச் சொல்லுங்கள்.
அவருடைய அற்புதமான செயல்களைப் பற்றி எல்லா மக்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.+
4 யெகோவா மகத்தானவர், எல்லா புகழையும் பெறத் தகுதியானவர்.
மற்ற எல்லா தெய்வங்களையும்விட அதிக பயபக்திக்குரியவர்.
5 மக்கள் வணங்கும் தெய்வங்களெல்லாம் ஒன்றுக்குமே உதவாத தெய்வங்கள்.+
ஆனால், யெகோவாதான் வானத்தைப் படைத்தவர்.+
6 மகத்துவமும் மேன்மையும் அவருடைய சன்னிதியில் இருக்கின்றன.+
பலமும் அழகும் அவருடைய ஆலயத்தில் இருக்கின்றன.+
7 ஜனங்களின் வம்சங்களே, யெகோவாவுக்குச் செலுத்த வேண்டிய புகழைச் செலுத்துங்கள்.*
யெகோவாவின் மகிமைக்கும் பலத்துக்கும் செலுத்த வேண்டிய புகழைச் செலுத்துங்கள்.+
8 யெகோவாவின் பெயருக்குக் கொடுக்க வேண்டிய மகிமையைக் கொடுங்கள்.+
காணிக்கையோடு அவருடைய பிரகாரங்களுக்கு வாருங்கள்.
பூமி உறுதியாக நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது, அதை அசைக்கவே முடியாது.
மக்களுக்கு அவர் நியாயமாகத் தீர்ப்பு கொடுப்பார்”+ என்று தேசங்களுக்குச் சொல்லுங்கள்.
11 வானம் சந்தோஷப்படட்டும், பூமி பூரித்துப்போகட்டும்.
கடலும் அதில் நிறைந்திருப்பவையும் முழக்கம் செய்யட்டும்.+