சங்கீதம்
நகரத்துக்கு ஏறிப்போகிறவர்கள் பாடுகிற பாடல்.
125 யெகோவாமேல் நம்பிக்கை வைத்திருக்கிறவர்கள்+
அசைக்க முடியாத சீயோன் மலைபோல் இருக்கிறார்கள்.
என்றென்றும் நிலைத்திருக்கிற அந்த மலைபோல் இருக்கிறார்கள்.+
2 எருசலேமைச் சுற்றிலும் மலைகள் இருப்பது போல,+
யெகோவா தன்னுடைய மக்களைச் சுற்றிலும் இருக்கிறார்.+
இன்றும் என்றும் அவர்களைப் பாதுகாப்பார்.
3 நீதிமான்களுக்கு ஒதுக்கப்பட்ட தேசத்தில் பொல்லாதவர்களின் கொடுங்கோல் நிலைக்காது.+
இல்லாவிட்டால், நீதிமான்களும் தவறு செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.+
5 குறுக்கு வழியில் போகிறவர்களை யெகோவா அழித்துவிடுவார்.
பொல்லாதவர்களோடு சேர்த்து அவர்களை அழித்துவிடுவார்.+
இஸ்ரவேலுக்குச் சமாதானம் கிடைக்கட்டும்.