சங்கீதம்
நகரத்துக்கு ஏறிப்போகிறவர்கள் பாடுகிற பாடல்.
129 “என் சிறுவயதிலிருந்தே எதிரிகள் என்னைத் தாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்”+
—இஸ்ரவேலர்களே, எல்லாரும் சொல்லுங்கள்—
2 “என் சிறுவயதிலிருந்தே எதிரிகள் என்னைத் தாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.+
ஆனாலும், அவர்களால் என்னைத் தோற்கடிக்க முடியவில்லை.+
6 அவர்கள் கூரையில் முளைக்கிற புல்லைப் போல ஆவார்கள்.
அது பிடுங்கப்படுவதற்கு முன்பே காய்ந்துபோகும்.
7 அறுக்கிறவனின் கைக்கு ஒரு பிடிகூட கிடைக்காது.
கதிர்க்கட்டுகளைச் சேகரிக்கிறவனின் கைக்கு ஒரு கட்டுகூட சேராது.
8 வருவோர் போவோர் யாருமே,
“யெகோவா உங்களை ஆசீர்வதிக்கட்டும்;
யெகோவாவின் பெயரில் உங்களை ஆசீர்வதிக்கிறோம்” என்று சொல்ல மாட்டார்கள்.