நகரத்துக்கு ஏறிப்போகிறவர்கள் பாடுகிற பாடல்.
134 யெகோவாவின் ஊழியர்களே,
ராத்திரி நேரங்களில் யெகோவாவின் ஆலயத்தில் சேவை செய்கிற ஊழியர்களே,+
நீங்கள் எல்லாரும் யெகோவாவைப் புகழுங்கள்.+
2 பரிசுத்தத்தோடு உங்கள் கைகளை உயர்த்தி,+
யெகோவாவைப் புகழுங்கள்.
3 வானத்தையும் பூமியையும் படைத்த யெகோவா
சீயோனிலிருந்து உங்களை ஆசீர்வதிக்கட்டும்.