சங்கீதம்
இசைக் குழுவின் தலைவனுக்கு; தாவீதின் சங்கீதம்.
140 யெகோவாவே, அக்கிரமம் செய்கிற ஆட்களிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்.
வன்முறையில் இறங்குகிற ஆட்களிடமிருந்து எனக்குப் பாதுகாப்பு கொடுங்கள்.+
2 அவர்கள் தங்களுடைய உள்ளத்தில் சதி செய்கிறார்கள்.+
நாள் முழுவதும் சண்டையைக் கிளப்பிக்கொண்டே இருக்கிறார்கள்.
3 பாம்பின் நாக்கைப் போலத் தங்களுடைய நாக்கைக் கூர்மையாக்குகிறார்கள்.+
அவர்களுடைய உதடுகளின் பின்னால் விரியன் பாம்பின் விஷம் இருக்கிறது.+ (சேலா)
4 யெகோவாவே, பொல்லாதவர்களின் கையிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்.+
வன்முறையில் இறங்குகிற ஆட்களிடமிருந்து எனக்குப் பாதுகாப்பு கொடுங்கள்.
என்னை விழ வைக்க அவர்கள் திட்டம் போடுகிறார்கள்.
என்னைப் பிடிக்க கண்ணிகளை வைக்கிறார்கள்.+ (சேலா)
6 நான் யெகோவாவிடம், “நீங்கள்தான் என் கடவுள்.
யெகோவாவே, உதவிக்காக நான் கெஞ்சுவதைக் கேளுங்கள்”+ என்று வேண்டுகிறேன்.
8 யெகோவாவே, பொல்லாதவர்களின் ஆசைகளை நிறைவேற்றாதீர்கள்.
கர்வம் அவர்களுடைய தலைக்கேறாதபடி, அவர்களுடைய சதித்திட்டங்களை முறியடியுங்கள்.+ (சேலா)
9 என்னைச் சுற்றியிருக்கிறவர்கள் என்னைப் பற்றி மோசமாகப் பேசினார்கள்.
அவர்கள் பேசியதெல்லாம் அவர்கள் தலையிலேயே வந்து விடியட்டும்.+
10 நெருப்புத் தணல்கள் அவர்கள்மேல் விழட்டும்.+
அவர்கள் நெருப்பில் வீசப்படட்டும்.
மறுபடியும் எழுந்துவர முடியாதபடி
ஆழ்கிணற்றுக்குள்+ தள்ளப்படட்டும்.
11 இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவர்கள் இந்தப் பூமியிலிருந்து அடியோடு அழிந்துபோகட்டும்.+
வன்முறைக்காரர்களைத் தீமை துரத்திப்பிடித்து, அழித்துப்போடட்டும்.