உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g01 8/8 பக். 32
  • உலக ஒற்றுமை—வெறும் கனவல்ல

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலக ஒற்றுமை—வெறும் கனவல்ல
  • விழித்தெழு!—2001
விழித்தெழு!—2001
g01 8/8 பக். 32

உலக ஒற்றுமை—வெறும் கனவல்ல

இந்தியாவில் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் இந்தப் பத்திரிகையை பிரசுரிப்போருக்கு இவ்வாறு எழுதினார்: “உங்கள் விழித்தெழு! பத்திரிகை மற்ற எல்லா பத்திரிகைகளிலிருந்தும் தனிச்சிறப்புமிக்கதாய் விளங்குகிறது. இதில் சொல்லப்படாத விஷயமே இல்லை எனலாம். முக்கியமாக இயற்கையைப் பற்றிய கட்டுரைகளை வாசிப்பதில் எனக்கு அலாதி இன்பம்.”

குறிப்பாக விழித்தெழு!-வை மிகவும் விரும்பி படிப்பதற்கு காரணத்தை இவர் விளக்குகிறார்: “பல்வகை இனத்தவரையும் சகோதரர்களாக பாவிக்க மக்களுக்கு உதவி செய்வதில் விழித்தெழு!-வுக்கு நிகராக வேறெந்த பத்திரிகையும் இல்லை. விழித்தெழு!-வைப் போல வேறெந்த பத்திரிகையும் உலக ஒற்றுமையை ஊக்குவிப்பதில்லை. நான் வாசிக்கும் பல்வேறு பத்திரிகைகளை ஒப்பிட்டுப் பார்க்கையில், நிச்சயமாகவே விழித்தெழு! மதிப்புமிக்க ஒரு பத்திரிகை என்று என்னால் அடித்துச் சொல்ல முடியும்.”

அந்த வாசகரின் கருத்து ஒவ்வொரு விழித்தெழு! இதழிலும் 4-⁠ம் பக்கத்தில் சொல்லப்பட்டுள்ள நோக்கத்துக்கு இசைவாகவே இருக்கிறது, அதாவது: “இது அரசியல் சம்பந்தமாக எப்பொழுதும் நடுநிலை வகிக்கிறது. ஓர் இனத்தை மற்றொன்றைவிட உயர்வாக மேன்மைப்படுத்துவதில்லை.” மிக முக்கியமாக, வாழ்க்கையைப் பற்றிய இன்றியமையாத கேள்விகளுக்கு விடை காண வாசகரின் கவனத்தை நம்முடைய படைப்பாளரிடம் விழுத்தெழு! திருப்புகிறது.

கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற 32 பக்க சிற்றேடும் இதைத்தான் செய்கிறது. அதிலுள்ள 16 பாடங்களின் சில தலைப்புகள் இதோ: “கடவுள் யார்?,” “பூமிக்கான கடவுளுடைய நோக்கம் என்ன?,” “கடவுளுடைய ராஜ்யம் என்றால் என்ன?” கீழ்க்காணும் கூப்பனை பூர்த்திசெய்து அதிலுள்ள விலாசத்திற்கு அல்லது இந்தப் பத்திரிகையில் பக்கம் 5-⁠ல் உள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பி இந்தச் சிற்றேட்டை பற்றிய கூடுதலான தகவலை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். (g01 7/22)

◻ கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற சிற்றேட்டை பற்றி கூடுதலான தகவலை எனக்கு அனுப்பவும்.

◻ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்