-
மனக்குமுறல்களைக் கடவுளிடம் கொட்டினாள்இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
-
-
15, 16. (அ) யெகோவாவிடம் தன் மனபாரத்தை இறக்கி வைத்தபின் அன்னாள் எப்படி உணர்ந்தாள்? (ஆ) வேதனைமிக்க உணர்ச்சிகள் நம்மை வாட்டும்போது, அன்னாளின் முன்மாதிரியை எப்படிப் பின்பற்றலாம்?
15 வழிபாட்டுக் கூடாரத்திற்குச் சென்று யெகோவாவிடம் தன் மனபாரத்தையெல்லாம் இறக்கி வைத்தபின்... அவரை வழிபட்டபின்... அன்னாள் எப்படி உணருகிறாள்? ‘அவள் எழுந்துபோய் சாப்பிடுகிறாள்; அதன்பின் அவள் முகம் வாட்டமாய் இருப்பதில்லை’ எனப் பதிவு சொல்கிறது. (1 சா. 1:18, NW) இப்போது, அன்னாள் நிம்மதியாக இருக்கிறாள். ஆம், மாபெரும் சுமைதாங்கியாய் விளங்கும் பரலோகத் தகப்பன்மீது தன் மனபாரத்தை இறக்கி வைத்துவிட்டாள். (சங்கீதம் 55:22-ஐ வாசியுங்கள்.) யெகோவாவால் தாங்க முடியாத சுமை ஏதாவது இருக்கிறதா? அன்றும் இல்லை! இன்றும் இல்லை!! என்றும் இல்லை!!!
16 நம் மனம் பாரமாயிருக்கும்போது... தத்தளிக்கும்போது... நொந்திருக்கும்போது... அன்னாளின் முன்மாதிரியைப் பின்பற்றலாம்; ஆம், ‘ஜெபத்தைக் கேட்கிறவரிடம்’ மனம்திறந்து பேசலாம். (சங். 65:2) விசுவாசத்துடன் அப்படிச் செய்தால், நம் சோகமெல்லாம் நீங்கி, “எல்லாச் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட தேவசமாதானம்” நம் மனதில் குடிகொள்ளும்.—பிலி. 4:6, 7.
-
-
மனக்குமுறல்களைக் கடவுளிடம் கொட்டினாள்இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
-
-
18 இனிமேல் அன்னாளை வெறுப்பேற்றி பிரயோஜனம் இல்லை என்பதை பெனின்னாள் எப்போது உணருகிறாள்? அதைப் பற்றியெல்லாம் பைபிள் சொல்வதில்லை; இருந்தாலும், ‘அதன்பின் அன்னாளின் முகம் வாட்டமாய் இருப்பதில்லை’ என்ற வார்த்தைகளை வைத்துப் பார்த்தால், அன்னாள் அந்தச் சமயம்முதல் கவலையில்லாமல் கலகலப்பாக இருந்திருப்பாள் என்று தெரிகிறது. எப்படியிருந்தாலும் சரி, அன்னாளிடம் இனி தன்னுடைய திட்டமெல்லாம் பலிக்காது என்பதை பெனின்னாள் சீக்கிரத்திலேயே உணர்ந்துகொள்கிறாள். அதற்குப் பின்பு அவளைப் பற்றி பைபிள் குறிப்பிடுவதில்லை.
-