-
மனக் குமுறல்களைக் கடவுளிடம் கொட்டினார்காவற்கோபுரம்—2011 | ஜனவரி 1
-
-
அன்னாள் தன் பிரச்சினைகளையெல்லாம் ஒருபுறம் மூட்டைகட்டி வைத்துவிட்டு, பயணத்திற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இறங்கினார். அது ஒரு மகிழ்ச்சியான சமயமாக இருந்திருக்க வேண்டும்; ஏனென்றால், அவருடைய கணவர் எல்க்கானா, சீலோவிலிருந்த கூடாரத்தில் யெகோவாவை வழிபடுவதற்காக வருடா வருடம் தன் குடும்பத்தாரை அழைத்துச் செல்வார். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் தம் மக்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்த்தார். (உபாகமம் 16:15) அன்னாள் சிறுவயதிலிருந்தே அதுபோன்ற பண்டிகைகளை மகிழ்ந்து கொண்டாடியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சமீப வருடங்களில், அந்த மகிழ்ச்சியெல்லாம் மாயமாய் மறைந்துவிட்டது.
-
-
மனக் குமுறல்களைக் கடவுளிடம் கொட்டினார்காவற்கோபுரம்—2011 | ஜனவரி 1
-
-
இருள் பிரியாத அதிகாலை நேரம்; எல்க்கானாவின் வீடே அமர்க்களப்பட்டிருந்தது. பிள்ளைகள் உட்பட எல்லாரும் பயணத்திற்குத் தயாராகிக்கொண்டிருந்தார்கள். இந்தப் பெரிய குடும்பத்தார், எப்பிராயீம் மலைத் தேசத்தில் அமைந்திருந்த சீலோவிற்குச் செல்ல 30 கிலோமீட்டருக்கும் மேல் பயணம் செய்ய வேண்டியிருந்தது.c நடந்தே செல்ல வேண்டுமென்றால், அங்கு போய்ச் சேர ஓரிரு நாட்கள் எடுக்கும். தனக்குப் போட்டியாக இருப்பவள் எப்படியெல்லாம் நடந்துகொள்வாள் என்பதை அன்னாள் நன்றாகவே அறிந்திருந்தார். என்றாலும், அதை நினைத்து அவர் வீட்டிலேயே இருந்துவிடவில்லை. இந்த விஷயத்தில் இன்றுள்ள யெகோவாவின் வணக்கத்தாருக்கு அவர் ஓர் ஒப்பற்ற முன்னுதாரணமாய்த் திகழ்கிறார். மற்றவர்களுடைய தப்புத்தவறுகள், கடவுளுக்கு நாம் செய்கிற சேவைக்கு முட்டுக்கட்டையாய் இருக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. அப்படிச் செய்தால், இன்று நாம் சகித்திருக்க உதவும் ஆசீர்வாதங்களை இழந்துவிடுவோம்.
-
-
மனக் குமுறல்களைக் கடவுளிடம் கொட்டினார்காவற்கோபுரம்—2011 | ஜனவரி 1
-
-
c எல்க்கானாவின் சொந்த ஊரான ராமா, இயேசுவின் காலத்தில் அரிமத்தியா என்று அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அதை வைத்துத்தான் இந்தத் தூரம் கணக்கிடப்பட்டுள்ளது.
-