யெகோவாவை சுத்தமான கைகளால் வணங்குவீர்
சங்கீதக்காரன் தாவீது, ஏவப்பட்டு பாடினார்: “கர்த்தாவே, . . . நான் குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன்.”—சங்கீதம் 26:6, 7.
இந்த வார்த்தைகளை தாவீது இயற்றியபோது, இஸ்ரவேலின் லேவிய ஆசாரியர்கள், பலிபீடத்தின் சரிவிலே ஏறி, தங்களுடைய பலிகளை நெருப்பில் இடும் வழக்கத்தை ஒருவேளை மறைமுகமாகக் குறிப்பிட்டிருக்கலாம். ஆனால், வணக்கத்தின் இந்தச் செயலை செய்வதற்கு முன், அந்த ஆசாரியர்கள் தங்களுடைய கைகளையும் கால்களையும் கழுவியாக வேண்டும். இது ஒன்றும் அற்பமான காரியமல்ல. முதற்படியாக இதை செய்யத் தவறுவது, ஆசாரியன் ஒருவரின் உயிரையே இழப்பிற்குள்ளாக்கும்!—யாத்திராகமம் 30:18-21.
அடையாள அர்த்தத்தில் கழுவுவது, ஆன்மீக மற்றும் ஒழுக்க ரீதியான தூய்மையில் விளைவடைகிறது. (ஏசாயா 1:16; எபேசியர் 5:26 ) இன்று, தம்மை சேவிப்பதன் மூலம், நாம் ‘அவருடைய பீடத்தைச் சுற்றிவர’ யெகோவா விரும்புகிறார். ஆனால், நாம் அதை சுத்தமான கைகளால்—தாவீது கூறியதைப்போல் “குற்றமில்லாமையிலே” கழுவப்பட்ட கைகளைக் கொண்டு—அவ்வாறு செய்யவேண்டும் என கோருகிறார். இது ஒன்றும் சாதாரண கோரிக்கை அல்ல, ஏனெனில் துர்ச்செயலை வழக்கமாகச் செய்பவர்கள், கடவுளுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை. (கலாத்தியர் 5:19-21) தேவபக்திக்கேற்ற கிரியைகளையுடைய வாழ்க்கை வாழ்வது, ஒழுக்கங்கெட்ட நடத்தையில் ஈடுபட ஒருவருக்கு அனுமதியை அளிப்பதில்லை. இவ்வாறாக அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார்: “மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.”—1 கொரிந்தியர் 9:27.
தெய்வீக அங்கீகாரத்தையும் உண்மையான மகிழ்ச்சியையும் நாடுபவர்கள், யெகோவாவை சுத்தமான கைகளால் சேவிக்க வேண்டும். தாவீதைப் போலவே, அவர்கள் “மன உத்தமமும் செம்மையுமாய்” நடக்கிறார்கள்.—1 இராஜாக்கள் 9:4.