உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நவீன வாழ்க்கைக்கு நடைமுறையான ஒரு புத்தகம்
    எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம்
    • ஆனால், பெற்றோர் தங்கள் வசம் வைத்திருக்கும் “சிட்சையின் பிரம்பு” என்னும் அதிகாரத்தை பயன்படுத்தும்போது, ஒருநாளும் தவறாக பயன்படுத்தக் கூடாது.b (நீதிமொழிகள் 22:15, NW; 29:15) பெற்றோரை பைபிள் இவ்வாறு எச்சரிக்கிறது: “உங்கள் பிள்ளைகளை அளவுக்கு மிஞ்சி கண்டிக்காதீர்கள், அல்லது அவர்கள் மனதை நீங்கள் தளர்ந்துபோக செய்வீர்கள்.” (கொலோசெயர் 3:21, பிலிப்ஸ்) சரீரப்பிரகாரமான தண்டனை அளிப்பது எப்போதும் பயன்தரும் ஒரு போதனா முறை அல்ல என்பதையும் பைபிள் ஒத்துக்கொள்கிறது. நீதிமொழிகள் 17:10 சொல்கிறது: “மூடனை நூறடி அடிப்பதைப்பார்க்கிலும், புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாய் உறைக்கும்.” இதைத்தவிர வரும்முன் தடுக்கும் சிட்சையை பைபிள் பரிந்துரைசெய்கிறது. பிள்ளைகளின் மனங்களில் ஒழுக்க மதிப்பீடுகளை ஊன்றவைப்பதற்கு, தற்செயலாக கிடைக்கும் சந்தர்ப்பங்களை நன்கு பயன்படுத்தும்படி உபாகமம் 11:19-ல் பெற்றோர்களுக்கு ஊக்கம் தரப்படுகிறது.—உபாகமம் 6:6, 7-ஐயும் காண்க.

  • நவீன வாழ்க்கைக்கு நடைமுறையான ஒரு புத்தகம்
    எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம்
    • b பைபிள் காலங்களில், “பிரம்பு” என்ற வார்த்தை (எபிரெய மொழியில் ஷெவத்) மேய்ப்பன் பயன்படுத்திய “கோலை” அல்லது “தடியை” குறிப்பிட்டது.10 இந்தச் சூழமைவில் அதிகாரம் என்னும் பிரம்பு, அன்பான வழிநடத்துதலையே குறிக்கிறது, பயங்கர கொடூரமாக நடத்துவதை அல்ல.—சங்கீதம் 23:4-ஐ ஒப்பிடுக.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்