உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w09 12/15 பக். 3
  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்களுக்கு நினைவிருக்கிறதா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • இதே தகவல்
  • யெகோவாவின் சாட்சிகள் புராட்டஸ்டன்ட் மதத்தவரா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2010
  • பகுதி 17: 1530 முதற்கொண்டுபுராட்டஸ்டன்ட் மதம்—ஒரு சீர்திருத்தமா?
    விழித்தெழு!—1991
  • யெகோவா அவருடைய மக்களிடம் எப்படிப் பேசுகிறார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2015
  • ‘உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
w09 12/15 பக். 3

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

சமீபத்தில் வெளியான காவற்கோபுர பத்திரிகைகளை நீங்கள் வாசித்து மகிழ்ந்தீர்களா? பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்:

• பேதுரு கடலுக்குள் மூழ்க ஆரம்பித்தபோது இயேசு அவரைக் காப்பாற்றிய பதிவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (மத். 14:28-31)

சகோதரர் ஒருவர் விசுவாசத்தில் குறைவுபடுவது நமக்குத் தெரிந்தால், நாம் அவருக்கு உதவிக்கரம் நீட்டி அவர் இன்னும் அதிக விசுவாசம் பெறுவதற்கு உதவலாம்.—9/15, பக்கம் 8.

• நம்மை விடுவிக்க யெகோவா என்ன தியாகங்களைச் செய்ய வேண்டியிருந்தது?

தமது மகன் சித்திரவதை செய்யப்பட்டதையும், கேலி கிண்டலுக்கு ஆளானதையும் யெகோவா சகித்துக்கொண்டார். ஒரு குற்றவாளியாகக் கொல்லப்பட்டதையும் சகித்துக்கொண்டார்; ஆபிரகாம் மனமுவந்து தன் மகனைப் பலியாகச் செலுத்த முன்வந்த சம்பவம் இதைப் படமாகக் காட்டியது.—9/15, பக்கங்கள் 28-29.

• ‘வீட்டைக் கட்டுவது’ பற்றி நீதிமொழிகள் 24:27 என்ன பாடத்தைக் கற்பிக்கிறது?

திருமணம் செய்துகொள்ள விரும்புகிற ஓர் ஆண், அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்குமுன் அதற்குத் தயாராக இருக்க வேண்டும். அதாவது, குடும்பத்தாரின் பொருளாதாரத் தேவைகளைக் கவனிப்பதற்கும், ஆன்மீக ரீதியில் குடும்பத்தை வழிநடத்துவதற்கும் தயாராக இருக்க வேண்டும்.—10/15, பக்கம் 12.

• பண்புள்ள நடத்தைக்கு யெகோவாவும் இயேசுவும் எப்படி முன்மாதிரிகளாகத் திகழ்கிறார்கள்?

சர்வலோகப் பேரரசராக யெகோவா மிக உயர்ந்த ஸ்தானத்தில் இருந்தாலும், மனிதர்களை மிகுந்த தயவோடும் மரியாதையோடும் நடத்துகிறார். ஆபிரகாமிடமும் மோசேயிடமும் பேசியபோது, “தயவுசெய்து” என்ற அர்த்தத்தைத் தருகிற எபிரெய வார்த்தையை அவர் பயன்படுத்தினார். (ஆதி. 13:14, NW; யாத். 4:6, NW) மனிதர்கள் தம்மிடம் பேசும்போது அவர் செவிகொடுத்துக் கேட்கிறார். (ஆதி. 18:23-32) இயேசுவும், பூமியிலிருந்தபோது அவ்வாறே செவிகொடுத்துக் கேட்டார்; தம்முடைய உதவியை நாடி வந்தவர்களுக்கு உதவத் தயாராக இருந்தார்; மற்றவர்களிடம் பேசியபோது அவர்களுடைய பெயர்களை அடிக்கடி பயன்படுத்தினார்.—11/15, பக்கம் 25.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்