-
மீண்டும் பரதீஸ்!ஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு I
-
-
புதிய தேசத்தின் பிறப்பு
19 பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டில், ஏசாயா 35-ம் அதிகாரம் முழுமையான நிறைவேற்றம் அடையவில்லை. நாடு திரும்பிய யூதர்கள் அனுபவித்த பரதீஸிய நிலைமைகள் நிரந்தரமாக இருக்கவில்லை. காலப்போக்கில், பொய்மதப் போதகங்களும் நாட்டுப்பற்றும் மெய் வணக்கத்தை கறைப்படுத்துகின்றன. ஆவிக்குரிய விதத்தில், யூதர்கள் மறுபடியும் துக்கத்திலும் ஏக்கத்திலும் ஆழ்ந்துவிடுகின்றனர். முடிவில், யெகோவா அவர்களை நிராகரித்து விடுகிறார். (மத்தேயு 21:43) மறுபடியும் கீழ்ப்படியாமல் போனதால், அவர்களுடைய சந்தோஷம் நிரந்தரமாக இருக்கவில்லை. ஏசாயா 35-ம் அதிகாரத்தின் பெரிய அளவு நிறைவேற்றம் இனிமேல்தான் என்பதை இவை அனைத்தும் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன.
20 உரிய காலத்தில், மற்றொரு இஸ்ரவேலை அதாவது ஆவிக்குரிய இஸ்ரவேலை யெகோவா நிறுவினார். (கலாத்தியர் 6:16) பூமியில் தம் ஊழிய காலத்தில் இந்தப் புதிய இஸ்ரவேலை ஸ்தாபிப்பதற்கான அஸ்திபாரத்தை இயேசு நாட்டினார். மெய் வணக்கத்தை அவர் மீண்டும் நிலைநாட்டினார். அவருடைய போதகங்களால், சத்தியத்தின் தண்ணீர் மறுபடியும் பாய ஆரம்பித்தது. சரீர மற்றும் ஆவிக்குரிய நோயில் வாடியவர்களை குணப்படுத்தினார். கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தி அறிவிக்கப்படுகையில் களிகூருதலின் கூக்குரல் எழும்பியது. இயேசு, மரித்து உயிர்த்தெழுந்து ஏழு வாரங்களுக்குப் பின், மகிமைப்படுத்தப்பட்டவராக கிறிஸ்தவ சபையை நிறுவினார். இயேசுவின் சிந்தப்பட்ட இரத்தத்தினால் மீட்கப்பட்ட யூதர்களும் மற்றவர்களும் அடங்கியதே இந்த ஆவிக்குரிய இஸ்ரவேல். இவர்கள் கடவுளுடைய ஆவிக்குரிய குமாரர்களாகவும் இயேசுவின் சகோதரர்களாகவும் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டார்கள்.—அப்போஸ்தலர் 2:1-4; ரோமர் 8:16, 17; 1 பேதுரு 1:18, 19.
-
-
மீண்டும் பரதீஸ்!ஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு I
-
-
21 இந்த ஆவிக்குரிய இஸ்ரவேலின் உறுப்பினர்களுக்கு எழுதுகையில், அப்போஸ்தலனாகிய பவுல் ஏசாயா 35:3-ஐ மேற்கோள் காட்டினார்: ‘நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்துங்கள்.’ (எபிரெயர் 12:12) எனவே, பொ.ச. முதல் நூற்றாண்டில், ஏசாயா 35-ம் அதிகாரத்தின் வார்த்தைகள் மறுபடியும் நிறைவேற்றம் அடைந்தன. குருடர் பார்வையடைந்தனர்; செவிடர் கேட்டனர். ‘முடவர்’ நடந்தனர்; ஊமையர் மறுபடியும் பேசினர். சொல்லர்த்தமாகவே, இயேசுவும் அவரது சீஷர்களும் இந்த அற்புதங்களைச் செய்தனர். (மத்தேயு 9:32; 11:5; லூக்கா 10:9) மிக முக்கியமாக, நேர்மை இருதயமுள்ள மக்கள் பொய் மதத்திலிருந்து வெளியே வந்தனர். கிறிஸ்தவ சபைக்குள் ஆவிக்குரிய பரதீஸை அனுபவித்தனர். (ஏசாயா 52:11; 2 கொரிந்தியர் 6:17) பாபிலோனிலிருந்து திரும்பிவந்த யூதர்களைப் போலவே, நம்பிக்கையான தைரியமான மனநிலை மிக அவசியம் என்பதை இவர்களும் உணர்ந்தார்கள்.—ரோமர் 12:11.
22 நம்முடைய நாட்களைப் பற்றியதென்ன? ஏசாயா தீர்க்கதரிசனத்திற்கு மற்றொரு நிறைவேற்றம் இருக்கிறதா? இன்றுள்ள கிறிஸ்தவ சபையில் இது முழுமையாக நிறைவேறுமா? ஆம். அப்போஸ்தலர்கள் இறந்த பிறகு, அபிஷேகம் செய்யப்பட்ட உண்மை கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது. “களைகள்” அதாவது பொய்க் கிறிஸ்தவர்கள் உலகம் முழுவதிலும் செழித்தோங்கினர். (மத்தேயு 13:36-43; அப்போஸ்தலர் 20:30; 2 பேதுரு 2:1-3) 19-ம் நூற்றாண்டிலும், உண்மை மனதுள்ள ஆட்கள் கிறிஸ்தவமண்டலத்திலிருந்து பிரிந்து, மெய் வணக்கத்தை நாட ஆரம்பித்தனர். இருந்தாலும், அவர்களது பைபிள் அறிவு, வேதப்பூர்வமற்ற போதகங்களால் கறைபடிந்திருந்தது. 1914-ல், இயேசு மேசியானிய ராஜாவாக பொறுப்பேற்றார். ஆனால், அதைத் தொடர்ந்து நிலைமைகள் மிகவும் மோசமாயின. சத்தியத்தை நாடும் உண்மை மனதுடையோருக்கு சூழ்நிலை மிகவும் இருண்டு காணப்பட்டது. தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக, தேசங்கள் ‘அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்தன.’ நற்செய்தியை பிரசங்கிப்பதற்காக இந்த உண்மை கிறிஸ்தவர்கள் எடுத்த முயற்சிகள் தடைசெய்யப்பட்டன. இதன் விளைவாக, அவர்கள் பாபிலோனிய சிறையிருப்பிற்குள் சென்றனர்.—வெளிப்படுத்துதல் 11:7, 8.
23 ஆனால், 1919-ல் நிலைமைகள் மாறின. யெகோவா தம் மக்களை சிறையிருப்பிலிருந்து வெளியே கொண்டு வந்தார். தங்கள் வணக்கத்தை அதுவரை கறைப்படுத்தி வந்த பொய்ப் போதகங்களை அவர்கள் ஒதுக்கித் தள்ள ஆரம்பித்தனர். அதன் விளைவாக, அவர்கள் குணப்படுத்துதலை அனுபவித்தனர். ஆவிக்குரிய பரதீஸுக்குள் வந்தனர். இது இன்று உலகம் முழுவதிலும் தொடர்ந்து பரவி வருகிறது. ஆவிக்குரிய அர்த்தத்தில், குருடர் பார்வை அடைகின்றனர், செவிடர் கேட்கின்றனர். கடவுளுடைய பரிசுத்த ஆவியின் செயல்பாட்டை முழுவதுமாக புரிந்துகொள்கின்றனர். எனவே, தொடர்ந்து யெகோவாவோடு நெருங்கி இருக்க வேண்டியதன் அவசியத்தை இவர்கள் உணர்ந்திருக்கின்றனர். (1 தெசலோனிக்கேயர் 5:6; 2 தீமோத்தேயு 4:5) உண்மை கிறிஸ்தவர்கள் இனியும் ஊமைகளாக இருக்க மாட்டார்கள். பைபிள் சத்தியங்களை மற்றவர்களுக்கு ‘ஆனந்தக்களிப்போடே’ அறிவிப்பதில் இவர்கள் ஆர்வமாய் இருக்கின்றனர். (ரோமர் 1:15, NW) ஆவிக்குரிய விதத்தில் பலவீனமாக அல்லது ‘முடமாக’ இருந்தவர்கள், இப்போது சந்தோஷத்தோடும் வைராக்கியத்தோடும் இருக்கின்றனர். அடையாள அர்த்தத்தில் சொன்னால், அவர்கள் ‘மானைப்போல் குதிக்கின்றனர்.’
-