-
நலிவடைந்தோருக்கு யெகோவா புத்துயிரூட்டுகிறார்ஏசாயா தீர்க்கதரிசனம் மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு தொகுதி II
-
-
6 பெரிய மரங்களின்கீழும், பள்ளத்தாக்குகளிலும், மலைகளிலும், பட்டணங்களிலும் என ஒரு இடம் விடாமல் எல்லா இடங்களிலும் யூதா விக்கிரகங்களை உண்டாக்கி வணங்குகிறது. ஆனால், யெகோவா இவையெல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். யூதாவின் இழி நிலையை ஏசாயா மூலமாக வெட்டவெளிச்சமாக்குகிறார்: “நீ உயரமும் உன்னதமுமான மலைகளின்மேல் உன் மஞ்சத்தை வைக்கிறாய்; அங்கேயும் பலியிடும்படி ஏறுகிறாய். கதவுகளுக்கும் நிலைகளுக்கும் பின்னாக உன் ஞாபகக்குறியை வைக்கிறாய்.” (ஏசாயா 57:7-8அ) சகல மேடான இடங்களிலும், ஆவிக்குரிய அசுசியின் மஞ்சத்தை யூதா விரிக்கிறது. அங்கு புறமதக் கடவுட்களுக்கு பலியிடுகிறது.a வீடுகளில்கூட, கதவுகளுக்கும் நிலைகளுக்கும் பின்னாக விக்கிரகங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.
-
-
நலிவடைந்தோருக்கு யெகோவா புத்துயிரூட்டுகிறார்ஏசாயா தீர்க்கதரிசனம் மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு தொகுதி II
-
-
a ‘மஞ்சம்’ என்ற பதம் பொய் வணக்கத்தின் இடத்தையோ பலிபீடத்தையோ குறிக்கலாம். அதை மஞ்சம் எனக் குறிப்பிடுவது, அப்படிப்பட்ட வழிபாடு ஆவிக்குரிய வேசித்தனம் என்பதை நினைவுபடுத்துகிறது.
-