உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நலிவடைந்தோருக்கு யெகோவா புத்துயிரூட்டுகிறார்
    ஏசாயா தீர்க்கதரிசனம் மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு தொகுதி II
    • 18 இந்த சந்தர்ப்பத்தில்தான், ஆரம்பத்தில் மேற்கோள் காட்டப்பட்ட வார்த்தைகளை ஏசாயா தீர்க்கதரிசி உரைக்கிறார்: “உயர்ந்தவரும் உன்னதமானவரும் நித்தியத்திற்கும் இருப்பவரும் பரிசுத்தர் என்கிற பெயரையும் உடையவராகியவர் கூறுவது இதுவே: ‘உயர்ந்த, பரிசுத்தமான இடத்திலே நான் குடியிருக்கிறேன்; நொறுங்கிய, நலிந்த நெஞ்சத்தினரோடும் இருக்கிறேன்; நலிந்த நெஞ்சத்தினருக்கு புத்துயிரூட்டவும் நொறுங்கிய உள்ளத்தினரை திடப்படுத்தவுமே அவர்களோடு இருக்கிறேன்.’” (ஏசாயா 57:15, NW) யெகோவாவின் சிங்காசனம் வானாதி வானங்களில் இருக்கிறது. இதைவிட உயர்வான அல்லது மேன்மையான இடம் எதுவுமே இல்லை. இவ்வளவு உயர்ந்த இடத்திலிருந்து அவர் எல்லாவற்றையும், துன்மார்க்கரின் பாவங்களை மட்டுமல்ல, தம்மை சேவிக்க விரும்புவோரின் நீதியான செயல்களையும் பார்க்கிறார் என்பது எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! (சங்கீதம் 102:20; 103:6) மேலும், ஒடுக்கப்படுவோரின் முனகலை கேட்கிறார்; நொறுங்கிய உள்ளத்தினரை திடப்படுத்துகிறார். இந்த வார்த்தைகள் பூர்வ காலத்தில் மனந்திரும்பிய யூதர்களின் நெஞ்சை நிச்சயம் தொட்டிருக்கும். இன்றும் அவை நம் நெஞ்சை வருடுகின்றன.

  • நலிவடைந்தோருக்கு யெகோவா புத்துயிரூட்டுகிறார்
    ஏசாயா தீர்க்கதரிசனம் மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு தொகுதி II
    • 21 ‘உயர்ந்தவரும் உன்னதமானவருமாகிய’ யெகோவா, 1919-⁠ல் அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோரின் நலனுக்காக பரிவு காட்டினார். தவறுகளுக்காக மனம் வருந்தும் தாழ்மையான மனநிலையை அவர்கள் காட்டியதால், மகா உன்னத கடவுளாகிய யெகோவா அவர்கள் பட்ட கஷ்டங்களை இரக்கத்தோடு கவனித்து, பாபிலோனிய சிறையிருப்பிலிருந்து விடுதலை அளித்தார். சுத்தமான வணக்கத்தை தமக்கு செலுத்துவதற்கு முட்டுக்கட்டையாக இருந்த எல்லா தடைகளையும் நீக்கி அவர்களுக்கு விடுதலை கொடுத்தார். இப்படியாக அந்த சமயத்திலும், ஏசாயா மூலமாக யெகோவா சொன்ன வார்த்தைகள் நிறைவேறின. அந்த வார்த்தைகளில் பொதிந்திருக்கும் நித்தியகால நியமங்கள் நம் ஒவ்வொருவருக்குமே பொருந்துபவை. தாழ்மை மனதுடையவர்களுடைய வணக்கத்தையே யெகோவா ஏற்றுக்கொள்கிறார். கடவுளுடைய ஊழியக்காரரில் எவரேனும் பாவம் செய்தால், அவர் உடனடியாக தன் பாவத்தை ஒப்புக்கொண்டு, சிட்சையை ஏற்று தன் வழிகளை மாற்றிக்கொள்ள வேண்டும். யெகோவா தாழ்மையுள்ளவர்களை குணப்படுத்தி ஆறுதல் அளிக்கிறார், ஆனால் “பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார்” என்பதை நாம் ஒருபோதும் மறவாதிருப்போமாக.​—⁠யாக்கோபு 4:⁠6.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்