-
நலிவடைந்தோருக்கு யெகோவா புத்துயிரூட்டுகிறார்ஏசாயா தீர்க்கதரிசனம் மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு தொகுதி II
-
-
22 தங்கள் துன்மார்க்க வழியிலே உழன்று கொண்டிருப்போரின் எதிர்காலத்திற்கும் மனந்திரும்புவோரின் எதிர்காலத்திற்கும் இடையே இருக்கும் மலையளவு வித்தியாசத்தைக் குறித்து யெகோவா அறிவிக்கிறார்: “தூரமாயிருக்கிறவர்களுக்கும் சமீபமாயிருக்கிறவர்களுக்கும் சமாதானம் சமாதானம் என்று கூறும் உதடுகளின் பலனைச் சிருஷ்டிக்கிறேன்; அவர்களைக் குணமாக்குவேன் . . . துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப்போலிருக்கிறார்கள்; அது அமர்ந்திருக்கக் கூடாமல், அதின் ஜலங்கள் சேற்றையும் அழுக்கையும் [“கடற் பாசியையும் சகதியையும்,” NW] கரையில் ஒதுக்குகிறது. துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லை.”—ஏசாயா 57:19-21.
-
-
நலிவடைந்தோருக்கு யெகோவா புத்துயிரூட்டுகிறார்ஏசாயா தீர்க்கதரிசனம் மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு தொகுதி II
-
-
24 யெகோவாவிற்கு துதி பாடியவாறு நாடு திரும்பும் யூதர்கள், எத்தனை சந்தோஷமாக உதடுகளின் பலனை செலுத்தியிருப்பார்கள்! கடவுளுடைய சமாதானத்தை அனுபவிப்பதில் எல்லையில்லா ஆனந்தம் அடைந்திருப்பர். யூதாவிலிருந்து ‘தூரமாக’ இருக்கிறவர்களும் சரி—அதாவது, மீண்டும் தங்கள் தேசத்திற்கு திரும்ப காத்திருக்கிறவர்களும் சரி—‘சமீபமாக’ இருக்கிறவர்களும் சரி—அதாவது ஏற்கெனவே தங்கள் தேசத்திற்கு வந்துவிட்டவர்களும் சரி—அனைவருமே கடவுளுடைய சமாதானத்தை அனுபவித்து களித்திருப்பர். ஆனால் துன்மார்க்கரின் நிலைமையோ இதற்கு முற்றிலும் மாறானது! யெகோவாவின் சிட்சைக்கு செவிகொடுக்க மறுக்கும் துன்மார்க்கர் எங்கே இருந்தாலும் சரி எவராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு கொஞ்சமும் சமாதானம் இராது. அவர்கள் கொந்தளிக்கும் கடலைப் போல குமுறிக் கொண்டிருப்பர். உதடுகளின் பலனையல்ல, மாறாக “கடற் பாசியையும் சகதியையும்” போன்ற அசுத்தமானவற்றை மட்டுமே அவர்கள் உண்டாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
-