உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது!
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
    • 2. 1914-லிருந்து உலக நிலைமைகளும் மக்களின் குணங்களும் எப்படி மோசமாகியிருக்கின்றன?

      இயேசுவின் சீஷர்கள் அவரிடம், “உங்களுடைய பிரசன்னத்துக்கும் இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டத்துக்கும் அடையாளம் என்ன?” என்று கேட்டார்கள். (மத்தேயு 24:3) பரலோகத்தில் தன்னுடைய ஆட்சி ஆரம்பித்த பிறகு பூமியில் என்னென்ன நடக்கும் என்று இயேசு அவர்களிடம் சொன்னார். உதாரணத்துக்கு, போரும் பஞ்சமும் நிலநடுக்கமும் வரும் என்று சொன்னார். (மத்தேயு 24:7-ஐ வாசியுங்கள்.) அதுமட்டுமல்ல, “கடைசி நாட்களில்” மக்களுடைய குணங்கள் மோசமாகும் என்பதால் “சமாளிக்க முடியாத அளவுக்கு” வாழ்க்கை கஷ்டமாக இருக்கும் என்று பைபிள் சொன்னது. (2 தீமோத்தேயு 3:1-5) முக்கியமாக 1914-லிருந்து உலக நிலைமைகளும் மக்களின் குணங்களும் படுமோசமாகியிருக்கின்றன.

      3. கடவுளுடைய ஆட்சி ஆரம்பித்ததிலிருந்து உலகம் ஏன் இவ்வளவு மோசமாகியிருக்கிறது?

      இயேசு ராஜாவானதும் சாத்தானோடும் பேய்களோடும் பரலோகத்தில் போர் செய்தார். அதில் சாத்தான் தோற்றுப்போனான். “அவன் பூமிக்குத் தள்ளப்பட்டான்; அவனோடு அவனுடைய தூதர்களும் தள்ளப்பட்டார்கள்.” (வெளிப்படுத்துதல் 12:9, 10, 12) சாத்தான் அழியப்போவதால் பயங்கர கோபத்தோடு இந்த உலகத்தை ஆட்டிப்படைக்கிறான். அதனால்தான் இந்த உலகத்தில் இவ்வளவு வலி, இவ்வளவு வேதனை! ஆனால், கடவுளுடைய அரசாங்கம் இதற்கெல்லாம் முடிவுகட்டும்.

  • கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது!
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
    • 5. 1914-லிருந்து உலகம் மாறிவிட்டது

      வீடியோவைப் பாருங்கள்.

      வீடியோ: 1914-லிருந்து உலகம் மாறிவிட்டது (1:10)

      தான் ராஜாவாக ஆன பிறகு உலக நிலைமைகள் எப்படி இருக்கும் என்று இயேசு முன்கூட்டியே சொன்னார். லூக்கா 21:9-11-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

      • இதில் எதையெல்லாம் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் அல்லது கேள்விப்பட்டிருக்கிறீர்கள்?

      மனித ஆட்சியின் கடைசி நாட்களில் மக்கள் எப்படி இருப்பார்கள் என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். 2 தீமோத்தேயு 3:1-5-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

      • இப்படிப்பட்ட ஆட்களில் யாரையெல்லாம் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்?

      படங்களின் தொகுப்பு: கடைசி நாட்களில் உலக நிலைமைகளையும் மக்களின் குணங்களையும் சித்தரிக்கும் காட்சிகள். 1. ஒரு ராணுவத் தலைவர் தன்னுடைய போடியத்தின் முன் நின்று கையை உயர்த்தியபடி கத்துகிறார். 2. ஒரு பூகம்பத்தில் கட்டிடங்கள் நொறுங்கி விழுகின்றன. 3. ராணுவ விமானங்கள். 4. மக்கள் முகக்கவசங்களைப் போட்டுக்கொண்டு தெருவில் நடந்துபோகிறார்கள். 5. தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு நியு யார்க்கின் இரட்டைக் கோபுரங்கள் தீப்பற்றி எரிகின்றன. 6. ஒருவர் போதை ஊசியைப் போட்டுக்கொள்கிறார். 7. ஒரு கணவர் கைமுஷ்டியை உயர்த்திக்கொண்டு தன் மனைவியைப் பார்த்துக் கத்துகிறார். 8. போதைப்பொருள்களும் மதுபானங்களும். 9. ஸ்டைலான உடைகளையும் நகைகளையும் போட்டுக்கொண்டு இரண்டு பெண்கள் செல்ஃபி எடுத்துக்கொள்கிறார்கள். 10. ஒரு இசை நிகழ்ச்சியில் கூட்டத்தாருக்காக இசையைப் போட்டுவிடும் டிஜே. 11. ஒரு கலகக்காரர் பெட்ரோல் வெடிகுண்டை வீசுகிறார்.
தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்