“நாமத்தில்” முழுக்காட்டப்படுதல்
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் எகிப்திய மண்ணில் கண்டுபிடிக்கப்பட்ட பண்டைய உலகியல் சார்ந்த நாணற்புல் தாளில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகளை ஆராய்ச்சி செய்து பார்ப்பது, அக்கறையூட்டும் விதத்தில் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமங்களை தெளிவாக்குகிறது. எவ்வாறு? சில சொற்கள் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் விதத்தை ஆராய்ந்து பார்ப்பதன் மூலம், அதே சொற்களை அதன் வேதாகம சூழமைவில் அதிக துல்லியமாக விளங்கிக்கொள்ள நமக்கு உதவுகிறது.
ஓர் உதாரணம், இயேசு பரலோகத்துக்கு ஏறிச்செல்வதற்கு முன் தம் சீஷர்களுக்கு கட்டளையிட்டபோது “நாமத்திலே” என்று உபயோகித்தது ஒரு பதம் ஆகும்: “ஆகையால் நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுங்கள்.” இயேசு எதை அர்த்தப்படுத்தினார்?—மத்தேயு 28:19.
“நாமத்திலே” அல்லது “நாமத்துக்குள்” என்ற சொற்றொடர் (கிங்டம் இன்டர்லீனியர்) “எவருடைய கணக்குக்காவது” பணங்கொடுப்பது என்பதன் சம்பந்தமாக உலகியல் சார்ந்த நூல்களில் உபயோகப்படுத்தப்பட்டிருப்பதாக வல்லுநர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். “ஆண்டவரின் நாமத்துக்குள் ஞானஸ்நானங் கொடுப்பது, அல்லது கடவுளுடைய குமாரனின் நாமத்துக்குள் நம்புவது போன்ற சொற்றொடர்களின் அடிப்படையான கருத்து, முழுக்காட்டுதல் அல்லது விசுவாசம் கடவுளுக்கு அல்லது கடவுளுடைய குமாரனுக்கு சொந்தமானவர்கள்,” என்ற அடிப்படையான அர்த்தத்தை உடையது என நாணற்புல் தாள்களிலிருந்து கிடைத்த ஆதாரத்தின் பேரில் இறையியல் பேராசிரியர் டாக்டர் ஜி. அடால்ப் டீஸ்மன் நம்பினார்.
அக்கறையூட்டும்விதமாய், இயேசுவின் நாளில் இருந்த யூதர்கள் அதேபோன்ற ஒரு சொற்றொடரை உபயோகித்தனர். தியாலஜிக்கல் டிக்ஷனரி ஆப் தி நியூ டெஸ்டமன்ட்-ல் அது இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது: “யூத மதத்துக்கு மாறியவரின் விருத்தசேதனம் . . . யூதேய மதத்துக்குள் அவரை வரவேற்பதற்கு ‘யூத மதத்துக்கு மாறியவரின் நாமத்தில்’ செய்யப்பட்டது. இந்த விருத்தசேதனம் . . . உடன்படிக்கைக்குள் அவரை வரவேற்பதற்கு ‘உடன்படிக்கையின் நாமத்தில்’ நடைபெறுகிறது.” இவ்வாறு ஓர் உறவு நிலைநாட்டப்படுகிறது. யூதரல்லாதவர் உடன்படிக்கையின் அதிகாரத்தின் கீழ், யூத மதத்தை தழுவுகிறவராக ஆகிறார்.
ஆகையால் ஒப்புக்கொடுத்தலைத் தொடர்ந்து வரும் முழுக்காட்டுதல் ஒரு கிறிஸ்தவனுக்கு, யெகோவா தேவன், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து, பரிசுத்த ஆவி ஆகியவற்றோடு ஒரு நெருக்கமான உறவை நிலைநாட்டுகிறது. மதம் மாறியவர் தன் புதிய வாழ்க்கை முறையில் அவர்களுடைய அதிகாரத்தை மதித்துணருகிறார். மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் மூன்றில் ஒவ்வொன்றையும் குறித்து இது எவ்வாறு உண்மையாயிருக்கிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
கடவுளுடைய அதிகாரத்தை மதித்துணர்வதன் மூலம், நாம் அவரிடமாக நெருங்கி வருகிறோம். அவரோடு ஓர் உறவுக்குள் பிரவேசிக்கிறோம். (எபிரெயர் 12:9; யாக்கோபு 4:7, 8) இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பலியின் கிரயத்தால் வாங்கப்பட்டு, நாம் கடவுளுடைய அடிமைகளாக, அவருடைய சொத்தாக ஆகிறோம். (1 கொரிந்தியர் 3:23; 6:20) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவுக்கு சொந்தமானவர்கள் என்று அப்போஸ்தலனாகிய பவுல் அவர்களிடம் சொன்னார். அவர்களுக்கு சத்தியத்தை எடுத்துச் சென்ற எந்த மனிதர்களுக்கும் அவர்கள் சொந்தமல்ல. (1 கொரிந்தியர் 1:12, 13; 7:23; மத்தேயு 16:24 ஒப்பிடுக.) குமாரனின் நாமத்தில் முழுக்காட்டுவது என்பது, இயேசுவை “வழியும் சத்தியமும் ஜீவனுமாய்” ஏற்றுக்கொண்டு இவ்வுண்மையை மதித்துணர்வதை குறிப்பிட்டுக் காட்டுகிறது.—யோவான் 14:6.
யெகோவாவோடும் இயேசுகிறிஸ்துவோடும் சரியான உறவை நாம் கொண்டிருப்பதற்கு பரிசுத்த ஆவியும்கூட இன்றியமையாததாய் இருக்கிறது. பரிசுத்த ஆவியின் நாமத்தில் முழுக்காட்டுவது என்பது, கடவுள் நம்மோடு கொண்டிருக்கும் தொடர்புகளில் பரிசுத்த ஆவியின் பங்கை நாம் மதித்துணர்வதை காண்பிக்கிறது. அதை அசட்டை செய்யவோ அல்லது அதற்கு விரோதமாக செயல்பட்டு நம் மூலமாக அது செய்யும் வேலையை தடைசெய்யாமல், அதனுடைய வழிகாட்டுதலை பின்பற்ற நாம் முனைகிறோம். (எபேசியர் 4:30; 1 தெசலோனிக்கேயர் 5:19) அந்த ஆவியின் ஆள்தன்மையற்ற இயல்பு, எந்தக் கஷ்டத்தையும் உபயோகத்திலோ அல்லது அர்த்தத்திலோ ஏற்படுத்துவதில்லை. யூதேய மதத்தில் “உடன்படிக்கையின் நாமத்தில்,” என்பதை உபயோகித்ததால் வந்த கஷ்டத்தைக் காட்டிலும் அதிகம் அல்ல.
ஆகையால், ஒப்புக்கொடுத்தல் மற்றும் முழுக்காட்டுதல் சமயத்தின்போது, நம்முடைய புதிய உறவில் உட்பட்டிருப்பவற்றை நாம் ஜெபசிந்தையோடு ஆழ்ந்து சிந்தனை செய்வது அவசியமாயிருக்கிறது. அது இயேசு கிறிஸ்துவின் மீட்பு ஏற்பாட்டிலும், முன்மாதிரியிலும் நடப்பித்துக் காட்டப்பட்டபடி, கடவுளுடைய சித்தத்துக்கு கீழ்ப்படிவதை கேட்கிறது. கடவுளுடைய ஊழியர்களை உலகமுழுவதும் அன்பிலும் ஒற்றுமையிலும் வழிநடத்தும் பரிசுத்த ஆவியின் உதவியை கொண்டு இது நிறைவேற்றப்பட வேண்டியிருக்கிறது.