உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 3/8 பக். 14-15
  • கடவுளுடைய மன்னிப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளுடைய மன்னிப்பு
  • விழித்தெழு!—1994
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பாரத்தை நீக்குதல்
  • கடனை ரத்து செய்தல்
  • கறையை நீக்குதல்
  • மற்றவர்களிடமிருந்து ஆதரவு
  • “மன்னிக்க தயாராக இருக்கிற” கடவுள்
    யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
  • யெகோவா, ‘மன்னிப்பதற்கு ஆயத்தமாயிருக்கிற’ கடவுள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • யெகோவாவின் மன்னிப்பு​—உங்களுக்கு என்ன நன்மை?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • குற்ற உணர்வு​—“என் பாவத்தை நீக்கி, என்னைச் சுத்தப்படுத்துங்கள்”
    யெகோவாவிடம் திரும்பி வந்துவிடுங்கள்
மேலும் பார்க்க
விழித்தெழு!—1994
g94 3/8 பக். 14-15

பைபிளின் கருத்து

கடவுளுடைய மன்னிப்பு எவ்வளவு பூரணமானது?

“கடவுள் என் பாவங்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டார் என்று நான் உணருகிறேன். நான் செய்த காரியத்தினிமித்தம் அவர் என்னை ஒருபோதும் விரும்பமாட்டார்.”—க்ளோரியா.

யெகோவாவால் அவர்களுடைய பாவங்களை மன்னிக்க முடியும் என்று மற்றவர்களிடம் சொல்வது க்ளோரியாவுக்கு கடினமாக இருந்ததில்லை.a ஆனால் தன்னுடைய சொந்த குற்றங்களைப்பற்றி பிரதிபலிக்கும்போது மட்டும், க்ளோரியா குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டவளாக உணர்ந்தாள். யெகோவாவின் மன்னிப்பு பெறமுடியாத ஒன்றாக தோன்றிற்று.

தவறான செயல் ஒன்றை அல்லது வாழ்க்கைப் போக்கை உணருவது மனச்சாட்சியை கலக்கமடையச் செய்வதாய் இருக்கலாம். “நாள் முழுதும் கதறியதால் நான் தளர்ந்துபோனேன்,” என்று பாவம் செய்த பிறகு எழுதினார் தாவீது. “என் பலம் முழுவதும் வறண்டுபோயிற்று.” (சங்கீதம் 32:3, 4, டுடேஸ் இங்கிலிஷ் வர்ஷன்; சங்கீதம் 51:3-ஐ ஒப்பிடவும்.) மகிழ்ச்சிக்குரியவிதமாக, தவறுகளை மன்னிப்பதில் யெகோவா திளைப்படைகிறார். அவர் ‘மன்னிக்கத் தயாராய்’ இருக்கிறார்.—சங்கீதம் 86:5; எசேக்கியேல் 33:11.

எனினும், யெகோவா இருதயத்தைப் பார்க்கிறார். அவருடைய மன்னிப்பு வெறுமனே உணர்ச்சியின் அடிப்படையில் இல்லை. (யாத்திராகமம் 34:7; 1 சாமுவேல் 16:7) பாவி மனந்திறந்து தன்னுடைய தவறை ஒப்புக்கொண்டு, உண்மையான மனவருத்தத்தைக் காண்பித்து, அவனுடைய தவறான போக்கை ஏதோ கசப்பான, வெறுக்கத்தக்கதாக கருதி உதறித்தள்ளிவிட வேண்டும். (சங்கீதம் 32:5; ரோமர் 12:9; 2 கொரிந்தியர் 7:11) அப்படிச் செய்தால் மட்டுமே தவறுசெய்த ஒருவர் மன்னிக்கப்பட்டு யெகோவாவிடமிருந்து ‘இளைப்பாறுதலின் காலங்களை’ அனுபவிக்க முடியும்.—அப்போஸ்தலர் 3:19.

ஆனால் மனந்திரும்பிய பிறகும், சிலர் குற்றவாளியாக தீர்க்கப்பட்டவர்களாக உணருகின்றனர். அவர்கள் அந்தக் குற்றவுணர்ச்சியின் பாரத்தை என்றென்றுமாக சுமக்கவேண்டுமா? தங்களுடைய பாவங்களுக்காக மனம் வருந்தி, அவற்றை கைவிட்ட பிறகும் இருதயத்தில் அல்லல்படும் ஆட்களுக்கு பைபிளில் என்ன ஆறுதலைக் காணமுடியும்?—சங்கீதம் 94:19.

பாரத்தை நீக்குதல்

தன்னுடைய தவறுகளினிமித்தம் துயரப்பட்டவராய், தாவீது யெகோவாவிடம் ஜெபித்தார்: “என் துன்பத்தையும் என் வருத்தத்தையும் பார்த்து, என் பாவங்களையெல்லாம் மன்னித்தருளும்.” (சங்கீதம் 25:18) இங்கு யெகோவா மன்னிப்பதைவிட அதிகத்தைச் செய்யவேண்டும் என்று தாவீது வேண்டினார். அவர் யெகோவாவிடம் தன்னுடைய பாவங்களை ‘மன்னிக்கவும்,’ அவற்றை நீக்கும்படி அல்லது சுமக்கும்படியும், அவற்றை அகற்றிப்போடும்படியும் கேட்டுக்கொண்டார். பாவம் கடுமையான பின்விளைவுகளைக் கொண்டிருக்கிறது. ஆகவே சந்தேகமின்றி தாவீதுக்கு இது உறுத்துகிற ஒரு மனச்சாட்சியின் பாரத்தை உட்படுத்திற்று.

தேசத்தின் பாவங்களை யெகோவாவால் அகற்றிப்போட முடியும் என்று இஸ்ரவேலர்கள் ஆண்டுதோறும் காணக்கூடிய வகையில் நினைவூட்டப்பட்டனர். பாவநிவாரண நாளன்று பிரதான ஆசாரியன் தன்னுடைய கைகளை வெள்ளாட்டுக்கடாவின் மேல் வைத்து அதின்மேல் மக்களின் பாவங்களை அறிக்கையிட்டு அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்தரத்திற்குள் அனுப்பிவிட்டான். அங்கு இருந்த எவனும் தேசத்தின் பாவங்கள் நீக்கிப்போடப்பட்டதை கற்பனைசெய்து பார்க்க முடியும்.—லேவியராகமம் 16:20- 22.

ஆகவே தங்களுடைய பாவங்களிலிருந்து மனந்திரும்பிய தனிநபர்கள் ஆறுதலடையலாம். பாவநிவாரண நாளில் நடந்த இந்த நிகழ்ச்சிகள் பாவங்களை அகற்றிப்போடுவதற்கான ஒரு மாபெரும் ஏற்பாட்டை—இயேசு கிறிஸ்துவுடைய மீட்பின் கிரயபலியை—முன்குறித்துக்காட்டின. இயேசுவைப்பற்றி தீர்க்கதரிசன ரீதியில் ஏசாயா எழுதினார்: “அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்தார்.” (ஏசாயா 53:12) ஆதலால், கடந்தகால பாவங்கள் மனச்சாட்சியை அழுத்தவேண்டிய தேவையில்லை. ஆனால் பிற்காலத்தில் யெகோவா இப்பாவங்களை மீண்டும் நினைவுக்குக் கொண்டுவருவாரா?

கடனை ரத்து செய்தல்

தம்முடைய மாதிரி ஜெபத்தில் இயேசு சொன்னார்: “எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.” (மத்தேயு 6:12) இங்கு “மன்னியும்” என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க வார்த்தை “போக விடு” என்று அர்த்தப்படுத்தும் ஒரு வினைச்சொல்லின் வடிவமாகும். இதன் காரணமாக, பாவ மன்னிப்பு, ஒரு கடனை போக விடுவதற்கு, அல்லது ரத்து செய்வதற்கு ஒப்பாக பேசப்படுகிறது.—மத்தேயு 18:23-35-ஐ ஒப்பிடவும்.

“உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்,” என்று சொன்னபோது பேதுரு இதன்பேரில் விரிவாகச் சொன்னார். (அப்போஸ்தலர் 3:20) “நிவிர்த்தி செய்” என்பது அழித்துப்போடு, அல்லது துடைத்தழி என்று அர்த்தப்படுத்துகிறது. அது எழுதப்பட்ட ஒரு பதிவை அழிப்பதை, கெட்டப் பதிவைத் துடைத்தழிப்பதைக் குறிக்கிறது.—கொலோசெயர் 2:13, 14-ஐ ஒப்பிடவும்.

ஆகையால், மனந்திரும்பியவர்கள் கடவுள் தாம் ரத்து செய்த கடனைத் திரும்ப கொடுக்கும்படி கேட்பாரோ என்று பயப்படவேண்டிய தேவையில்லை. அவர் சொல்கிறார்: “உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன்.” (ஏசாயா 43:25; ரோமர் 4:7, 8) மனந்திரும்பிய பாவிக்கு இது எதை அர்த்தப்படுத்துகிறது?

கறையை நீக்குதல்

ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் யெகோவா சொன்னார்: “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும்.”—ஏசாயா 1:18.

அழியாத கறையை ஓர் உடையில் இருந்து நீக்குவதற்கான முயற்சிகள் பெரும்பாலும் வீணாகவே போகின்றன. அதிகபட்சம் அந்தக் கறை மங்கலாக்கப்படுகிறது, இருந்தபோதிலும் அது காணப்படத்தக்கதாகவே இருக்கிறது. சிவேரென்று அல்லது இரத்தாம்பரச் சிவப்பைப்போல பளிச்சென்று காணப்படுகிற பாவங்களைக்கூட எடுத்துவிட்டு, அவற்றைப் பனியைப்போல வெண்மையாக்க யெகோவாவால் முடியும் என்பது எவ்வளவு ஆறுதல் அளிப்பதாக இருக்கிறது.—சங்கீதம் 51:7-ஐ ஒப்பிடவும்.

இதனால், மனந்திரும்பிய ஒரு பாவி தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஒரு கறையைத் தாங்கியிருப்பதாக உணர தேவையில்லை. மனந்திரும்பிய ஒரு நபர் நிரந்தரமான வெட்கத்தில் வாழும்படி, யெகோவா தவறுதல்களை வெறுமனே மங்கலாக்குவதில்லை.—அப்போஸ்தலர் 22:16-ஐ ஒப்பிடவும்.

மற்றவர்களிடமிருந்து ஆதரவு

யெகோவா பாரத்தை நீக்கினாலும், கடனை ரத்து செய்தாலும், பாவக் கறையை நீக்கினாலும், மனந்திரும்பிய ஒருவர் இன்னும் சிலசமயங்களில் வருத்தத்தால் மேற்கொள்ளப்பட்டவராக உணரலாம். கொரிந்து சபையில் இருந்த, கடவுளால் மன்னிக்கப்பட்டபோதிலும் ‘அதிக துக்கத்தில் அமிழ்ந்துபோகும் [“முழு நம்பிக்கையும் இழக்குமளவுக்கு துக்கப்படும்,” TEV]’ தருவாயில் இருந்த ஒரு மனந்திரும்பிய பாவியைப்பற்றி பவுல் எழுதினார்.—2 கொரிந்தியர் 2:7.

இந்த நபர் எவ்வாறு உதவியளிக்கப்படலாம்? பவுல் தொடர்ந்து சொல்கிறார்: “அவன்மேல் உங்களுக்கு இருக்கும் அன்பை உறுதிசெய்யும்படி நான் புத்திசொல்லுகிறேன்.” (2 கொரிந்தியர் 2:8, NW) “உறுதிசெய்” என்பதற்கு பவுல் பயன்படுத்திய வார்த்தை “செல்லத்தக்கதாக்கு” என்ற அர்த்தத்தைக் கொடுக்கும் சட்டரீதியான பதமாகும். ஆம், யெகோவாவின் மன்னிப்பைப் பெற்றிருக்கிற மனந்திரும்பியவர்களுக்கு சக கிறிஸ்தவர்களிடத்தில் இருந்தும்கூட செல்லத்தக்கதாக்குதல், அல்லது அங்கீகார முத்திரை தேவைப்படுகிறது.

புரிந்துகொள்ளும்விதமாகவே, இதற்கு காலம் தேவைப்படலாம். மனந்திரும்பிய ஒருவர் தன்னுடைய பாவத்தின் நிந்தையை சகித்து நம்பிக்கையளிக்கும் நீதியின் ஒரு பதிவை ஏற்படுத்தவேண்டும். அவர் தன்னுடைய கடந்தகால தவறுகளினால் தனிப்பட்ட வகையில் பாதிக்கப்பட்டிருக்கிற எவருடைய உணர்ச்சிகளையும் பொறுமையோடு சகிக்கவேண்டும். இதற்கிடையில், அவர் தாவீதைப்போல, யெகோவாவின் பூரண மன்னிப்பைப் பெற நம்பிக்கையாய் இருக்கலாம்: “மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் [யெகோவா] நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்.”—சங்கீதம் 103:12. (g93 12/8)

[அடிக்குறிப்புகள்]

a பெயர் மாற்றப்பட்டிருக்கிறது.

[பக்கம் 14-ன் படத்திற்கான நன்றி]

Return of the Prodigal Son by Rembrandt: Scala/Art Resource, N.Y.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்