யெகோவாவை முழு இருதயத்தோடும் சேவிக்கத் தீர்மானித்திருத்தல்
“முழு இருதயத்தோடும் மகிழ்ச்சி ததும்பும் ஆத்துமாவோடும் அவரைச் சேவி; ஏனெனில் எல்லா இருதயங்களையும் யெகோவா ஆராய்கிறார், நினைவுகளின் ஒவ்வொரு சாய்வையும் அவர் பகுத்தறிகிறார்.”—1 நாளாகமம் 28:9, NW.
மேலே எடுத்தெழுதப்பட்ட வேதவசனம் இருதயத்தைப் பற்றிச் சில கேள்விகளை எழுப்புகிறது. முழு இருதயமல்லாமல் குறைவுபடும் ஒன்றுடன் ஒருவன் எப்படி வாழ முடியும்? உதாரணமாக, பாதி இருதயத்துடன் எவராவது வாழ முடியுமா? தற்கால இருதய நிபுணரைப்போல், யெகோவா, பழுதுகளைக் கண்டுபிடிக்க உடலுக்குரிய இருதயத்தை ஆராய்கிறாரா? நினைவுகளின் சாய்வைக் குறித்ததில், நினைவுகள் நம்முடைய இருதயத்தில் தங்குகின்றனவா? பைபிள் குறிப்புகள் சில அவ்வாறு சொல்வதுபோல தோன்றுகிறது. ‘இருதயத்தின் நினைவுகளின் சாய்வு’ என்றாவது அதில் குறிப்பிட்டுப் பேசப்பட்டிருக்கிறது. (ஆதியாகமம் 6:5; 1 நாளாகமம் 29:18) யெகோவா நம்முடைய நினைவுகளைப் பகுத்தறிய நம் உடலுக்குரிய இருதயத்தைக் கூர்ந்தாராய்ந்து பார்க்கிறார்? அவரை முழு இருதயத்தோடும் சேவிப்பது உண்மையில் குறிப்பதென்ன?
2. உடலுக்குரிய இருதயம் அறிவுத் திறமைக்கும் மற்றும் உணர்ச்சி வேகங்களுக்கும் இருப்பிடமென பூர்வ எகிப்தியர் நம்பினர். அது தனக்குரிய சொந்த விருப்பத்தைக் கொண்டிருந்ததெனவும் அவர்கள் எண்ணினர். இருதயம் அறிவாற்றலையும் அதோடு கூட அன்பையும் தன்னில் தங்க வைத்திருந்ததென பாபிலோனியர் சொன்னார்கள். அது உணர்வுகளின் இருப்பிடமெனவும் ஆத்துமாவின் உறைவிடமெனவும் கிரேக்க தத்துவ சாஸ்திரி அரிஸ்டாட்டல் கற்பித்தார். ஆனால் காலப்போக்கில் அறிவு பெருகியது இந்த எண்ணங்கள் விலக்கப்பட்டன. முடிவில் இருதயம் அது உள்ளபடி அறியலாயிற்று, அதாவது உடல் முழுவதும் இரத்தத்தைச் சுற்றிவரும்படி செலுத்துவதற்கு ஒரு விசைக்குழாய்.
3. ஆம், முக்கியமாய் அது ஒரு விசைக்குழாய், ஆனால் எத்தகைய வியப்பூட்டும் ஒன்று, நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் உண்மையுடன் உயிரின் செந்நிற நீரோட்டத்தைப் பீறிட்டு வெளிப்பட செய்து கொண்டிருக்கிறது! கைமுட்டியைவிட சிறிது பெரியதாய், ஒரு பவுண்டுக்குக் குறைவான எடையுள்ள, மனித இருதயம் ஒரு நாளுக்கு 1,00,000 தடவைகள், துடித்து, உடலின் 60,000 மைல் இருதய நாள மண்டலத்தினூடே உயிர் இரத்தத்தைப் பீறிட்டுப் பாயச்செய்து கொண்டிருக்கிறது—ஒரு நாளுக்குச் சுமார் 2,000 காலன்களும் ஒருவரின் ஆயுள்காலத்தில் கோடிக்கணக்கான காலன்களும் பாயச்செய்கிறது. செல்கள் ஒன்றுதிரண்டு இருதயத் துடிப்பின் வேகத்தை முறைப்படுத்தும் சாதனமாகிய, அதன்வேக வீதத்தைக் கட்டுப்படுத்தும் மின்சாரத் தூண்டுதல்களை அனுப்புவதனால் இருதயத் துடிப்புத் தொடங்கி வைக்கப்படுகிறது. இருதயத்தைப் பார்க்கிலும் அதிகக் கடினமாயும், நீடித்தும், நிலைத்தும், பத்தாண்டுகள் பின்தொடர பத்தாண்டுகளாகவும் உழைக்கிற தசை உடலில் வேறு எதுவுமில்லை. உணர்ச்சிவச நெருக்கடியின் கீழ் அல்லது சுறுசுறுப்பான உடற்பயிற்சியின்கீழ் அது தன் வேலையளவை ஐந்து மடங்குகள் அதிகப்படியாய் மிகுதிப்படுத்தக்கூடும். மார்பிலிருந்து இருதயத்தை அகற்றி வையுங்கள், அது தொடர்ந்து சிறிது நேரம் துடித்துக் கொண்டிருக்கும் இருதயத்திலிருந்து வெட்கப்பட்ட செல்களுங்கூட, ஆதரவான சூழ்நிலைமைகளின்கீழ், தொடர்ந்து அவ்வாறு துடிக்கும். மூளைக்கு மட்டுமே இருதயத்துக்குத் தேவைப்படுவதைவிட அதிகமான உணவும் பிராணவாயும் தேவை.
4. கடவுளுடைய வார்த்தையில் இருதயத்தைப் பற்றி ஏறக்குறைய ஆயிரம் தடவைகள் பேசப்படுகிறது. இவற்றில் சில சொல்லர்த்தமான இருதயத்தைக் குறிப்பிடுகின்றன. மற்றும் சில, சமுத்திரத்தின் நடுவிலே [ஆங்கிலத்தில் இருதயத்தில், NW] “பூமியின் இருதயத்தில்” என்றாவது ஒன்றின் மையத்தை அல்லது நடுவிடத்தைக் குறிக்கின்றன. (எசேக்கியேல் 27:25-27; மத்தேயு 12:40) எனினும் ஏறக்குறைய ஆயிரம் மற்றக் குறிப்புகளின், இருதயம் அடையாளக் குறிப்பான கருத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. புதிய ஏற்பாட்டின் கிட்டல்ஸ் தியோலாஜிக்கல் அகராதியின் (ஆங்கிலத்திலுள்ளது) “இருதயம்” என்பதன் கீழ் பின்வரும் ஒவ்வொரு தலைப்புகளுக்கும் பல வேத வசனங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன: “இருதயத்தில் உணர்ச்சிகளும், உணர்ச்சிவேகங்களும், ஆசைகளும், காம உணர்ச்சிகளும் தங்குகின்றன.” “இருதயம் தெளிந்துணர்வின் இருப்பிடம், எண்ணத்துக்கும் சிந்தனைக்கும் ஊற்றுமூலம்.” “இருதயம் சிந்தனையின் இருப்பிடம், தீர்மானங்கள் தோன்றுமிடம்” “இவ்வாறு இருதயமே, எல்லாவற்றிற்கும் மேலாகக் கடவுள் கவனத்தைச் செலுத்துகிற மனிதனிலுள்ள அந்த ஒரே மையம், அதில் மதவாழ்க்கை வேர்கொள்ள செய்யப்பட்டுள்ளது, அது ஒழுக்க நடத்தையைத் தீர்மானிக்கிறது.”
5. உணர்ச்சி வேகங்களும் உள்நோக்கத் தூண்டுதல்களும் இந்த அடையாளக் குறிப்பான இருதயத்தில் தங்குகின்றன. வேதவசனங்கள் பலவற்றின் பிரகாரம், இருதயம் மகிழ்ச்சியுடனோ துயருற்றோ, இருளாக்கப்பட்டோ, ஒளியூட்டப்பட்டோ, நம்பிக்கையற்றோ, நம்பிக்கையுடனோ, தளர்வுற்றோ, கடினப்பட்டோ இருக்கலாம். அது கோபத்துடன் கொதிக்கலாம் அல்லது பயத்தால் உருகலாம், பெருமையுடனும் அகந்தையுடனுமிருக்கலாம் அல்லது சாந்தமாகவும் தாழ்மையாயும் இருக்கலாம், ஊக்கமாய் நேசிக்கலாம் அல்லது வெறுப்பால் நிரம்பியிருக்கலாம், களங்கமில்லாமலும் சுத்தமாயுமிருக்கலாம் அல்லது விபசாரக் குற்றமுள்ளதாயிருக்கலாம். அது தீமையை நோக்கிச் சாய்வுற்றிருக்கிறது. ஆனால் நன்மை செய்யும்படி நம்மைத் தூண்டி இயக்கலாம்.
அரை இருதயத்துடனோ இரு இருதயத்துடனோ இராதேயுங்கள்
6 சொல்லர்த்தமான இருதயம், செயல்படுவதற்கு முழுமையாக இருக்க வேண்டும், ஆனால் அடையாளக் குறிப்பான இருதயம் பிரிவுற்றிருக்கலாம் சந்தேகமில்லாமல், கடவுளுடைய சொந்த இருதயத்துக்கு உகந்த மனிதனான சங்கீதக்காரன், தேவாவியின் ஏவுதலின்கீழ்: அரை இருதயமுள்ளோரை நான் வெறுக்கிறேன்,” என்று எழுதினான். (சங்கீதம் 119:113, NW) எலியா பின்வருமாறு கூறி சவால்விட்ட இஸ்ரவேலரும் இத்தகையோரில் அடங்கியிருந்தனர்: “நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்தி குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் [யெகோவா, தி.மொ.] தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவளைப் பின்பற்றுங்கள்.” (1 இராஜாக்கள் 18:21) அரை இருதயத்தோடு, அவர்கள் ‘இரண்டு நினைவுகளில் குந்திக்குந்தி நடந்தார்கள்.’
7. அதைப்போல், யூதா யெகோவாவிடம் அரைகுறையாய்த் திரும்பினபின், பின்வருமாறு பதிவு செய்யப்பட்டிருக்கிறது: “ஆகிலும் ஜனங்கள் இன்னும் பூஜை மேடைகளில் பலியிட்டு வந்தார்கள்; அவர்கள் பலியிட்டதோ தங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கென்றே.” (2 நாளாகமம் 33:17, தி.மொ.) பிரிவுற்ற இருதயத்துடன், அவர்கள் யெகோவாவை வணங்குவதாக உரிமை பாராட்டினர். ஆனால் கட்டளையிடப்படாத முறையிலும் தாங்கள் முன்னால் பாகாலை வணங்கின இடங்களிலும் அவ்வாறு செய்தார்கள். “இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது.” என்று இயேசு சொன்னார். (மத்தேயு 6:24) அந்நாட்களில் அடிமைகள், சொத்தின் ஒரு பாகத்தைப் போல் இருந்தனர். அவர்கள் ஒரு நாளில் 24 மணி நேரமும் தங்கள் எஜமானரின் கட்டளையைச் சேவிக்கத் தயாரிக்க வேண்டும். ஒருவருக்கு ஒரு பாதி நேரம், மற்றவருக்கு அடுத்தப் பாதி நேரமென—தங்கள் நேரத்தை இரண்டு எஜமானருக்கிடையில் அவர்கள் பிரிக்கமுடியாது. இயேசு அறிவுறுத்தின குறிப்பு: யெகோவாவுக்கு அரை இருதய சேவை கொடுக்க முடியாது! என்பதே.
8. ஒவ்வொரு ஆளிலும், சொல்லர்த்தமான ஒரே ஒரு இருதயம் இருக்கிறது. ஆனால், அடையாளக்குறிப்பாய்ப் பேசினான், ஓர் ஆள் இரண்டு இருதயங்களைக் கொண்டிருக்கலாம். தாவீது இத்தகைய ஆட்களைக் குறிப்பிட்டு, பின்வருமாறு கூறினான்: “இச்சக உதடுகளால் இருமனதாய்ப் [இரு இருதயத்துடன், NW ஒரு இருதயத்துடனும் ஒரு இருதயத்துடனும் ஒரு இருதயத்துடனும், NW Ref.Bi., அடிக்குறிப்பு] பேசுகிறார்கள்.” (சங்கீதம் 12:2) ஒரு இருதயம் யாவரறிய தோன்றும் பாவனையில் வைக்கப்படுகிறது, மற்றொன்று தன்னல அனுகூலத்துக்காக இரகசியமாய் ஒருமுகப்படுத்தப்படுகிறது. இந்த இருமுகமான, இரு இருதய பாவனை வேத எழுத்துக்களின் பின்வருமாறு விவரிக்கிறது: “அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்; புசியும் பானம்பண்ணும் என்று அவன் உன்னோட இராது.” “அவன் இதம் பேசினாலும் அவனை நம்பாதே; அவன் இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு.”—நீதிமொழிகள் 23:7; 26:25; சங்கீதம் 28:3.
9. மனித உறவுகளில் இத்தகைய பாசாங்குத்தனம் வருந்தத்தக்கது. ஆனால் யெகோவாவின் வணக்கத்தில் இது விதைக்கப்படுகையில், அழிவை அறுவடைசெய்கிறது. “இதுவே யெகோவாவின் ஆலயம் என்று சொல்லிப் பொய் வார்த்தைகளில் நம்பிக்கை வையாதிருங்கள். இதோ, ஒன்றுக்கும் உதவாத பொய் வார்த்தைகளில் நீங்கள் நம்பிக்கை வைக்கிறீர்கள். நீங்கள் திருடிக் கொலைசெய்து விபசாரம்பண்ணிப் பொய்யானையிட்டுப் பாகாலுக்குத் தூபங்காட்டி, நீங்கள் அறியாத அந்நிய தேவர்களைத் தொழுது, பிற்பாடு வந்து, என் நாமம் வழங்கும் இந்த ஆலயத்திலே என் சந்நிதியில் நின்று, நாங்கள் விடுதலையானோம் என்று சொல்லிப் பின்னும் இந்த அருவருப்புகளையெல்லாம் செய்து வருகிறீர்கள்.” (எரேமியா 7:4, 8-10, தி.மொ.) சதுசேயருக்குள்ளும் பரிசேயருக்குள்ளும் காணப்பட்ட இத்தகைய இரு இருதய பாசாங்கை இயேசு வெளிப்படையாய்க் கண்டனஞ்செய்து பின்வருமாறு கூறினார்: “மாயக்காரரே உங்களைக்குறித்து: இந்த ஜனங்கள். . .தங்கள் உதடுகளினால் என்னைக் கனம் பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது;. . .என்று ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான்.”—மத்தேயு 15:7, 8.
10. இந்த எல்லாவற்றிலிருந்தும், யெகோவா சாமுவேலிடம் பின்வருமாறு சொன்னதன் கரணம் தெளிவாய்த் தெரிகிறது: “மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ [யெகோவா, தி.மொ.] இருதயத்தைப் பார்க்கிறார்.” (1 சாமுவேல் 16:7) ஆகவே, யெகோவா மனிதனை மதிப்பிடுகையில், மேற்போக்கான அத்தாட்சியை ஆதாரமாகக் கொண்டு செய்வதில்லை, இருதய ஆழத்திலுள்ளதை அவர் நுணுக்கமாக ஆராய்கிறார். கிறிஸ்து இயேசு, இருதயத்தை, நம்முடைய நல்ல அல்லது கெட்ட நடத்தைக்குப் பின்னாலுள்ள உள்நோக்கத் தூண்டுதல் சக்தியென அடையாளங் காட்டுகிறார்: “நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக் காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்.” மேலும் இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய் சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டு வரும்.”—லூக்கா 6:45; மத்தேயு 15:19.
11. நியாயத்தீர்ப்பு தம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்து இயேசுவும் யெகோவா நோக்குகிற இடத்தையே நோக்குகிறார்: “நானே உள்ளிந்திரியங்களையும் [மிக ஆழ்ந்த உணர்ச்சிவேகங்களை, NW Ref.Bi., அடிக்குறிப்பு] இருதயங்களையும் ஆராய்கிறவர். . .உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன்.” (வெளிப்படுத்துதல் 2:23) இந்தக் காரணத்தினிமித்தம், “எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதனிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும்.”—நீதிமொழிகள் 4:23.
12. யெகோவாவுக்குச் செலுத்தும் நம்முடைய வணக்கம் அரை இருதயத்துடனோ இரு இருதயத்துடனோ இருக்கக்கூடாது. ஆனால் முழு இருதயத்துடனும் இருக்க வேண்டும். இது நம்முடைய பங்கில் ஊக்கந்தளரா முயற்சியைக் கேட்கிறது. ஏன் அப்படி? ஏனென்றால் இருதயம் திருக்குள்ளதும் வெகு வஞ்சகமுள்ளது. நம்முடைய வீழ்ந்த மாம்சத்தைக் கவர்ந்திழுக்கும் தவறுகளைச் சரியென்பதுபோல் விவாதித்துக் காட்டுவதில் அதன் திறமை திடுக்கிடசெய்கிறது. அது நம்மை ஏமாற்றி நம்முடைய உண்மையான உள்நோக்கங்களை நம்மிடமிருந்து மறைத்து வைத்தாலும், யெகோவா இருதயத்தை அது உள்ளபடி காண்கிறார். இதைக் குறித்து அவர் நமக்குப் பின்வருமாறு தெரிவிக்கிறார்: “இருதயமே எல்லாவற்றிலும் வஞ்சனையுள்ளது, மிகவும் கெட்டுப்போனது; அதை அறிபவன் யார்? யெகோவாவாகிய நானே இருதயத்தை ஆராய்ந்து நினைவுகளைச் சோதித்தறிகிறேன், ஒவ்வொருவனுக்கும் அவனவன் வழிகளுக்கும் அவன் செயல்களால் விளைந்ததற்குத் தக்கபடியே கொடுப்பேன்.”—எரேமியா 17:9, 10, தி. மொ.
முழு இருதயத்தை அடைதல்
13. இயேசு தம்முடைய நாளின் மதத்தினரைக் குறித்துப் பின்வருமாறு கூறினார்: இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள்.” (மத்தேயு 13:15) முன்னரே கருத்தில் உருவாக்கி வைத்திருந்த மத எண்ணங்களின் காரணமாக, அவர்கள் இயேசுவின் போதகங்களுக்குத் தங்கள் கண்களையும் காதுகளையும் மூடிக்கொண்டார்கள் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தினார்கள். கடிந்துகொள்ளுதலை ஏற்காமல் தள்ளினதனால், சரியான உள்நோக்கத் தூண்டுதலையளிக்கும் இருதயத்தை அடைய அவர்கள் தவறினார்கள்: “கடிந்துகொள்ளுதலுக்குச் செவிகொடுக்கிறவன் இருதயத்தை அடைகிறான் [“நல்ல உள்நோக்கத் தூண்டுதலை அடைகிறான்,” NW Ref.Bi., அடிக்குறிப்பு] நீதிமொழிகள் 15:32 NW) கடவுளை வணங்குவதாக அவர்கள் உரிமைபாராட்டினர், ஆனால் மனிதர் காணும்படியே தங்கள் “நீதியை” நடப்பித்தனர்.—மத்தேயு 6:1, 2, 5, 16.
14. ‘உண்மையான கடவுளைத் தேடுவதற்குத் தன் இருதயத்தை ஆயத்தமாக்கின’ யூதாவின் அரசனான யோசபாத்தைப் போலிருப்பது எவ்வளவு மிக மேலானது. (2 நாளாகமம் 19:3, NW) நீங்கள் கடவுளைத் தேடுவதில் செய்ய வேண்டிய மிகச் சிறந்த ஆயத்தம் இருதயப்பூர்வமான ஜெபம் ஆகும் மிகுந்த மனவேதனையில் இருந்த ஆன்னாள் உணர்ச்சியோடு ஊக்கமாய் யெகோவாவிடம் ஜெபித்தபோது, “அன்னாள் தன் இருதயத்திலே பேசினாள்,” அவளுடைய ஜெபம் பதிலளிக்கப்பட்டது, செவிகொடுக்க மனமுள்ளவராகவும் இருக்க வேண்டும். இயேசுவின் தாய் செவி கொடுத்தாள்: “அவருடைய தாய் இந்தக் கூற்றுகளையெல்லாம் தன் இருதயத்தில் கவனமாய்க் காத்து வைத்தாள்.” அவள் “தன் இருதயத்தில் முடிவுகளை ஊகித்துணரத்” தொடங்கினாள், அவள் இயேசுவின் உண்மையுள்ள சீஷர்களில் ஒருத்தியானாள். உள்ளப்பூர்வமாய்ப் நாடித்தேடுகிறவர்களுக்கு யெகோவா உதவி செய்கிறார். கடவுள் பயமுள்ள லீதியாள் பவுலுக்குச் செவிகொடுத்துக்கேட்டாள், “பவுல் பேசின காரியங்களுக்குக் கூர்ந்தக் கவனம் செலுத்தும்படி யெகோவா அவளுடைய இருதயத்தை விரிவாகத் திறந்தார்.” அவள் முழுக்காட்டப்பட்டாள். (1 சாமுவேல் 1:12, 13; லூக்கா 2:19, 51 NW; அப்போஸ்தலர் 16:14, 15, NW) எப்பொழுதும், அடையாளக்குறிப்பான இருதயமே—உணர்ச்சிகளும், உணர்ச்சி வேகங்களும், உள்நோக்கத் தூண்டுதல்களுமே—சத்தியம் ஓர் ஆளுக்குள் நுழைந்து அவனில் நிலையாய்த் தங்கியிருக்க அனுமதிக்கிறது.
15. முழு இருதயத்தை அடைய, நாம் சத்தியத்தை அறியுமுன் கொண்டிருந்த பிழையான எண்ணங்களைத் தூர விளக்கிவிட்டு, கடவுளே சத்தியபரரென காணப்பட செய்ய மனங்கொள்ள உணர்ச்சிவேகப்பிரகாரமாய் ஆயத்தமாயிருக்க வேண்டும். இது, நம்முடைய தனி விருப்பத்துக்குரிய எண்ணங்களை அல்லது நாம் அருமையாய்ப் போற்றின கோட்பாட்டு கருத்துக்களைத் தகர்த்துவிடுகிறதென்றாலும் அவ்வாறிருக்க வேண்டும். (ரோமர் 3:4) யெகோவாவின் சித்தத்தையும் வழிகளையும் நம்முடைய இருதயம் ஏற்றுக்கொள்ள செய்வதற்குத் தன்னல உள்நோக்கங்களை முற்றிலும் அகற்றி அதைச் சுத்தப்படுத்த வேண்டும். ஒரு காலத்தில் யெகோவா தம்முடைய சட்டங்களைக் கல்லின் மேல் எழுதினார், ஆனால் பின்னால் அவர் சட்டங்களை மனித இருதயங்களில் எழுதினார். அப்போஸ்தலனாகிய பவுலுங்கூட இருதயங்களில் எழுதினான். நீங்களும்கூட ‘[அன்புள்ள இரக்கத்தையும் சத்தியத்தையும்] உங்கள் இருதயமாகிய பலகைகளில் எழுதிக்கொள்ளலாம்.’—நீதிமொழிகள் 3:3; எபிரேயர் 10:16; 2 கொரிந்தியர் 3:3.
16. யெகோவாவின் நியமங்களையும் கட்டளைகளையும் எழுதுவதற்கு உகந்த பரப்பிடமாக உங்கள் இருதயம் தகுதிபெற்றிருக்கிறதா? தெய்வீகச் சத்தியத்துக்கு இடமளிக்க, நீங்கள் முன்கொண்டிருந்த பிழையான எண்ணங்களை அதிலிருந்து நீக்கி அதைச் சுத்தஞ்செய்வீர்களா? அப்படியானால், உங்கள் மனதை மாற்றிப் புதிதாக்கவும், பழைய சுபாவத்தைக் களைந்துபோட்டு கடவுளின் சாயலில் உருவாக்கப்பட்ட புதியதைத் தரித்துக்கொள்ளவும், தொடர்ந்து படிப்பீர்களா? சத்திய வார்த்தையைச் சரியான முறையில் கையாண்டு, வெட்கப்படுவதற்கு எதுவுமிராத வேலையாளனாயிருக்கும்படி உங்களால் இயன்றதெல்லாம் செய்வீர்களா?—ரோமர் 12:2; கொலோசெயர் 3:9, 10; 2 தீமோத்தேயு 2:15.
முழு இருதயத்தைக் காத்துவருதல்
17. தாவீது சாலொமோனிடம் பின்வருமாறு கூறினான்: “இப்போதும் என் குமாரனாகிய சாலொமோனே, நீ உன் பிதாவின் கடவுளை அறிந்து மனமுவந்து முழு இருதயத்தோடும் அவரைச் சேவி யெகோவா சகல இருதயங்களையும் ஆராய்பவர், நினைவுகள் உத்தேசங்கள் எல்லாவற்றையும் அறிபவர்.” சாலொமோன் நிச்சயமாகவே முழு இருதயத்தோடும் சேவிக்கத் தொடங்கினான். ஆனால் ஆண்டுகள் கடந்துச் செல்லச் செல்ல, அதை அவன் காத்துக்கொள்ளவில்லை: சாலொமோன் வயதுசென்றவனானபோது அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை அந்நிய தேவர்களைப் பின்பற்றும்படி வழுவிப்போகப் பண்ணினார்கள்: அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப் போலத் தன் கடவுளாகிய யெகோவாவோடே முழுதும் இசைந்திருக்கவில்லை.”—1 நாளாகமம் 28:9, தி. மொ; 1 இராஜாக்கள் 11:4, தி.மொ.
18. சாலொமோன் தோல்வியடைந்ததில் நீங்கள் வெற்றிப்பெருவீர்களா? யெகோவாவின் ஒரு சாட்சியாக உங்களை ஒப்புக்கொடுத்தீர்கள், அரை இருதயப் போக்கு எல்லாவற்றையும் தூர விலக்கினீர்கள், “உன் கடவுளாகிய யெகோவாவை உன் முழு இருதயத்துடனும் நேசி”க்கும்படி சொன்ன இயேசுவின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தீர்கள், இவ்வாறு செய்தபின், இப்பொழுது உங்கள் இருதயத்தை யெகோவாவின் சேவையில் முழுமையாய்த் தொடர்ந்து ஈடுபடுத்தி வைத்திருக்கத் தீர்மானமாயிருப்பீர்களா? (மத்தேயு 22:37, NW) சாத்தானுக்கு இது பிரியமாயிராது, அவன், தந்திரமாய்ச் சதிசெய்யும் பகைஞன். உங்களுடைய இருதயம் அவனுடைய தாக்கல் குறியாகும். இருதயத்தில் பாவச்சாய்வை அவன் அறிந்திருக்கிறான். நீங்கள் உங்கள் காவலைத் தளரவிட்டால் அவன் அதற்குள் தந்திரமாய் நுழைத்துவிட முடியும். ‘யூதாஸ் காரியோத்து இயேசுவைக் காட்டிக் கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினான்’ அல்லவா? (யோவான் 13:2) பணம், பொருளாசை, பொழுதுபோக்கு, பெருமை, உலகப்பிரகாரமான முன்னேற்ற வாழ்க்கைப் போக்குகள், பகட்டாரவாரம், மாம்ச இச்சைகள்—நம்முடைய பலவீன குறியிடங்களை அவன் அறிந்திருக்கிறான், அவற்றைக் குறிபார்த்தே அவன் தன் அக்கினியாஸ்திரங்களை எறிகிறான். அவற்றையெல்லாம் விசுவாசக் கேடகத்தைக் கொண்டு நீங்கள் தடுத்து அணைத்துப் போடுவீர்களா?—எபேசியர் 6:16; 1 யோவான் 2:15-17.
19. சாத்தானின் இந்த உபாயங்களெல்லாம் தோல்வியடைகையிலும் அவன் நிறுத்திவிடுவதில்லை. அவன் கர்ச்சிக்கிற சிங்கமாகி, வன்முறை கலகக் கும்பல்களாலும், அடிகளாலும், சிறைப்படுத்துவதாலும், மரணத்தாலுங்கூட யெகோவாவின் உண்மையுள்ள சாட்சிகளை விழுங்கிப்போட முயற்சி செய்கிறான். ஆனால் யெகோவாவினிடம் தங்கள் இருதயத்தை முழுமையாக வைத்திருக்கிறவர்களா இந்த எல்லாவற்றினூடேயும் அவர் பலப்படுத்துவார்.—யாக்கோபு 4:7; 1 பேதுரு 5:8-10; வெளிப்படுத்துதல் 2:10.
20. சொல்லர்த்தமான இருதயத்துக்கு அவ்வப்போது சரிபார்த்தல் தேவைப்படுகிறது. அது அடுத்தடுத்து ஒழுங்கான இடைநேரங்களில் நல்ல உணவைப் போதிய அளவுகளில் பெறுகிறதா? அதன் துடிப்பு ஒரே சீராயும் உறுதியாயும் இருக்கிறதா? அது சரியான இரத்த அழுத்தத்தைக் காத்து வருகிறதா? அதற்குத் தேவையான பயிற்சியை அது அடைகிறதா? (நல்ல ஆரோக்கியத்துடனிருக்க இருதயம் நீண்ட காலப் பகுதிக்கு வெகு சுறுசுறுப்பாய்த் துடிக்க வேண்டும்) அதன் வேகத்தை முறைப்படுத்தும் கருவி மாறும் தேவைகளை நிறைவுசெய்ய அதன் வேகத்தை மாறுபடுத்துகிறதா? கடும் அழுத்தத்தின் கீழ் அதை வைக்கிற உணர்ச்சிவேக சூழ்நிலைகளுக்கு அது உட்படுத்தப்படுகிறதா?
21. உடலுக்குரிய இருதயத்துக்குச் சரிபார்த்தல் தேவையென்றால், அடையாளக் குறிப்பான இருதயத்துக்கு அது எவ்வளவு அதிகம் தேவை! யெகோவா அதைச் சோதித்துப் பார்க்கிறார்; நாமும் அவ்வாறு செய்ய வேண்டும். தவறாத ஒழுங்கான தனிப்பட்ட படிப்பின் மூலமாயும் ஆவிக்குரிய உணவை அது போதிய அளவுகளில் அடைந்து வருகிறதா? (சங்கீதம் 1:1, 2; நீதிமொழிகள் 15:28; எபிரேயர் 10:24, 25) அதன் உணர்ச்சிகளும் வெளி ஊழியத்தில் ஆர்வமுள்ள சேவை செய்யும்படி நம்மைத் தூண்டுவிக்கின்றனவா—சில சமயங்களில் ஒருவேளை துணை பயனியர் ஊழியத்தில் நம்மைச் சுறுசுறுப்பாய் ஈடுபடுத்தி உழைக்கும்படியும் செய்கின்றனவா? (எரேமியா 20:9; லூக்கா 13:24; 1 கொரிந்தியர் 9:16) அதன் சூழ்நிலைமையைப்பற்றியதென்ன? இதைப்போன்ற உணர்ச்சிகளுடனும் உள்நோக்கத் தூண்டுதல்களுடனும் ஒருங்கிணைந்து முழுமையாயுள்ள மற்ற இருதயங்களால் அது சூழப்பட்டிருக்கிறதா?—2 இராஜாக்கள் 10:15, 16; சங்கீதம் 86:11; நீதிமொழிகள் 13:20; 1 கொரிந்தியர் 15:33.
22. நீங்கள் செய்த சோதனை, மேற்கண்ட கேள்விகளுக்கு ஆம், என்று உங்களைப் பதிலளிக்கச் செய்தால், அப்பொழுது நீங்கள் உங்கள் அடையாளக் குறிப்பான இருதயத்தைப் பாதுகாக்கிறீர்கள். யெகோவாவை முழு இருதயத்தோடு சேவிக்கவேண்டுமென்ற உங்கள் தீர்மானத்தில், மற்ற லட்சக்கணக்கான உண்மையுள்ள சாட்சிகளோடுகூட, நீங்கள் வெற்றி பெருவீர்கள். இத்தகைய எல்லோரும் பின்வரும் இந்த உறுதியைக் கொண்டிருக்கிறார்கள். “எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.”—பிலிப்பியர் 4:7. (W86 6/1)
உங்களுக்கு நினைவிருக்கிறதா
◻ அடையாளக்குறிப்பான இருதயத்துக்கு சொல்லப்படுகிற பல பண்புகள் யாவை?
◻ அரை இருதயத்துடன் அல்லது இரு இருதயத்துடன் இருப்பதை நாம் எவ்வாறு தவிர்க்கலாம்?
◻ தீர்ப்பு செய்கையில், யெகோவாவும் கிறிஸ்து இயேசுவும் ஏன் இருதயத்தை நோக்குகிறார்கள்?
◻ முழு இருதயத்தை நாம் எப்படி அடையவும் காத்துவரவும் முடியும்?
[கேள்விகள்]
1. நாளாகமம் 28:9-ன் பேரில் என்ன கேள்விகள் எழுப்பப்படுகின்றன?
2. பூர்வ எகிப்தியரும், பாபிலோனியரும், கிரேக்கத் தத்துவ சாஸ்திரி அரிஸ்டாட்டலும் இருதயத்தைப் பற்றிக் கொண்டிருந்த நம்பிக்கைகள் யாவை?
3. எந்த உண்மைகள் இருதயத்தை அவ்வளவு வியக்கத்தக்கதாக்குகின்றன?
4, 5. இருதயம் என்ன பண்புகளைக் கொண்டிருக்கிறதென வேத எழுத்துக்கள் கூறுகின்றன? (பி) வேத எழுத்துக்களின்படி என்ன உணர்ச்சி வேகங்களும் உள்நோக்கத் தூண்டுதல்களும் இருதயத்தில் தங்கியிருக்கின்றன?
6, 7. (எ) என்ன வகையான ஆட்களைச் சங்கீதக்காரன் வெறுத்தான்? இந்நிலைமை இஸ்ரவேலிலும் யூதாவிலும் என்ன செயல்களில் தெளிவாகியது? (பி) யெகோவாவுக்கு அரை இருதய சேவை ஏற்கத்தகாததென்பதை இயேசு எப்படி விளக்கிக்காட்டினார்?
8. அடையாளக் குறிப்பாய்ப் பேசினால், ஓர் ஆள் எப்படி இரண்டு இருதயங்களைக் கொண்டிருக்கலாம்? எந்த வேதவசனங்கள் இதைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றன?
9. எரேமியாவின் நாளிலும் இயேசுவின் காலத்திலும் இருதய வணக்கம் இருந்ததென எது காட்டுகிறது?
10, 11. ஒருவனை நியாயந்தீர்க்கையில் யெகோவாவும் கிறிஸ்து இயேசுவும் எந்த இடத்தில் ஆராய்கிறார்கள்?
12. யெகோவாவின் சேவையில் முழு இருதயத்தோடிருக்க நாம் ஏன் ஊக்கந்தளரா முயற்சி எடுக்க வேண்டியிருக்கிறது?
13. தம்முடைய நாளில் சில மதத்தினரைக் குறித்து இயேசு என்ன சொன்னார், அத்தகைய நடத்தையின் காரணமாக அவர்களுக்கு உண்டான விளைவு என்ன?
14. சத்தியம் நம் உள்ளத்தின் ஆழத்தில் தங்கும்படி உட்செல்வதற்குரிய வழிவகைகளை எந்த முன்மாதிரிகள் காட்டுகின்றன?
15. முழு இருதயத்தை அடைவதற்கு. நாம் என்ன செய்ய ஆயத்தமாயிருக்க வேண்டும்?
16. யெகோவாவிடம் முழு இருதயத்தைக் கொண்டிருக்க ஒருவன் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை என்ன கேள்விகள் விளக்கமாகக் காட்டுகின்றன?
17. தாவீது தன் குமாரனாகிய சாலொமோனுக்கு எவ்வாறு அறிவுரை கூறினான்? இந்த அறிவுரையைப் பின்பற்ற சாலொமோன் ஏன் தவறினான்?
18, 19. (எ) முழு இருதயத்தைக் காத்துவராமல் உங்களைத் தவறிப்போகச் செய்ய சாத்தான் என்ன பல்வேறு வழிகளைப் பயன்படுத்துவான்? (பி) சாத்தானின் இந்த அதிக மறைவான தந்திர சூழ்ச்சிகள் தோல்வியடைந்தால், அவனுடைய சூழ்ச்சி முறைகள் எவ்வாறு மாறும்?
20, 21. (எ) சொல்லர்த்தமான இருதயத்தைச் சோதிக்க என்ன கேள்விகள் கேட்கப்படலாம்? (பி) அடையாளக் குறிப்பான இருதயத்தைச் சோதித்துப் பார்க்க எவ்வாறு இவற்றைப்போன்ற கேள்விகளைப் பயன்படுத்தலாம்?
22. யெகோவாவை முழு இருதயத்துடனும் சேவிக்கும்படி செய்திருக்கும் நம்முடைய தீர்மானத்தில் வெற்றிப்பெற எது நமக்கு உறுதிதரும்?
[பக்கம் 10-ன் படம்]
நீங்கள் இரு முகங்களைக் கொண்டிருக்கிறீர்களா?
[பக்கம் 11-ன் படம்]
லீதியாள்
யோசபாத்
அன்னாள்
மரியாள்