உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • செல்வத்தைக் கொடுத்து கடவுள் நம்மை ஆசீர்வதிக்கிறாரா?
    விழித்தெழு!—2003 | அக்டோபர்
    • கடவுள் நம்மை எவ்வாறு ஆசீர்வதிக்கிறார்

      பொருளுடைமைகளுக்காக “கவலைப்படாதிருங்கள்” என்று இயேசு தம்மை பின்பற்றியவர்களுக்கு கற்பித்தார்; இதன் வாயிலாக, பணத்தைக் குறித்ததில் தெளிந்த மனநிலையுடன் இருக்கும்படி அவர்களிடம் கூறினார். சாலொமோன்கூட தன் சர்வ மகிமையிலும் காட்டுப் புஷ்பங்களைப் போல அவ்வளவு அழகாய் உடுத்தவில்லை என இயேசு அவர்களிடம் விளக்கினார். என்றாலும், “அற்ப விசுவாசிகளே! . . . காட்டுப் புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா?” என்று அவர் கூறினார். தம்மை பின்பற்றுகிறவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் முதலாவதாக தேடினால், உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அனைத்தும் கொடுக்கப்படும் என கிறிஸ்தவர்களுக்கு இயேசு உறுதியளித்தார். (மத்தேயு 6:25, 28-33) அந்த வாக்குறுதி எப்படி நிறைவேறுகிறது?

      பைபிளின் அறிவுரையைப் பின்பற்றும்போது முக்கியமாக ஆன்மீக ரீதியில் ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன. (நீதிமொழிகள் 10:22) என்றபோதிலும், அது வேறுசில நன்மைகளையும் தருகிறது. உதாரணமாக, கடவுளுடைய வார்த்தை கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு அறிவுறுத்துகிறது: “திருடுகிறவன் இனித் திருடாமல், . . . தன் கைகளினால் நலமான வேலை செய்து, பிரயாசப்படக்கடவன்.” (எபேசியர் 4:28) “சோம்பற்கையால் வேலை செய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும்” என்றும் அது கூறுகிறது. (நீதிமொழிகள் 10:4) இந்த அறிவுரையைப் பின்பற்றி கடினமாய் உழைக்கும் நேர்மையுள்ள கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். இது ஓர் ஆசீர்வாதமாய் அமைகிறது.

      பேராசையை வளர்க்கும் பொழுதுபோக்காகிய சூதாட்டம், சரீரத்தைக் கெடுக்கும் பழக்கமாகிய புகைப்பிடித்தல், பலவீனப்படுத்தும் பழக்கமாகிய குடிவெறி போன்றவற்றை தவிர்க்கும்படியும் கிறிஸ்தவர்களுக்கு பைபிள் கற்பிக்கிறது. (1 கொரிந்தியர் 6:9, 10; 2 கொரிந்தியர் 7:1; எபேசியர் 5:5) இந்த அறிவுரையைப் பின்பற்றுகிறவர்களுக்கு செலவு குறையும், ஆரோக்கியம் மேம்படும்.

  • செல்வத்தைக் கொடுத்து கடவுள் நம்மை ஆசீர்வதிக்கிறாரா?
    விழித்தெழு!—2003 | அக்டோபர்
    • யெகோவா தேவன் தமது சித்தத்தைச் செய்வதற்கு கடினமாய் போராடுகிறவர்களின் முயற்சிகளை ஆசீர்வதிக்கிறார். (சங்கீதம் 1:2, 3) சோதனைகளை சமாளிப்பதற்கும், தங்கள் குடும்பங்களுக்கு அன்றாடம் படியளப்பதற்கும், ராஜ்யத்தை முதலாவது தேடுவதற்கும் வேண்டிய பலத்தையும் வள ஆதாரங்களையும் அவர்களுக்குத் தருகிறார். (சங்கீதம் 37:25; மத்தேயு 6:31-33; பிலிப்பியர் 4:12, 13) ஆகவே, பொருளுடைமைகளே கடவுளுடைய ஆசீர்வாதத்திற்கு முக்கியமான அத்தாட்சியென நினைப்பதற்குப் பதிலாக, மெய் கிறிஸ்தவர்கள் “நற்கிரியைகளில் ஐசுவரியவான்களா”வதற்கு கடினமாய் முயற்சி செய்கிறார்கள். படைப்பாளருடன் நெருங்கிய உறவை வளர்த்துக்கொள்வதன் மூலம், கிறிஸ்தவர்கள் “வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக” வைக்கிறார்கள்.​—⁠1 தீமோத்தேயு 6:17-19; மாற்கு 12:42-44. (g03 9/08)

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்