-
நம்பிக்கையான மனப்பான்மையைக் காத்துக்கொள்ளுங்கள்காவற்கோபுரம்—2014 | மார்ச் 15
-
-
8, 9. (அ) ஏழை விதவையின் சூழ்நிலை எப்படி இருந்தது? (ஆ) எப்படிப்பட்ட எண்ணங்கள் அந்த ஏழை விதவையை அலைக்கழித்திருக்கும்?
8 எருசலேம் ஆலயத்தில், இயேசு ஓர் ஏழை விதவையைக் கவனித்தார். கஷ்டங்களின் மத்தியிலும் நம்பிக்கையான மனப்பான்மையைக் காத்துக்கொள்ள அந்த விதவையின் உதாரணம் நமக்கு உதவும். (லூக்கா 21:1-4-ஐ வாசியுங்கள்.) அந்த விதவையின் சூழ்நிலையைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். அவள் ஏற்கெனவே கணவனை இழந்த துக்கத்தில் தவித்துக்கொண்டிருந்தாள். அதோடு, அவளைப் போன்று கஷ்டத்தில் வாடுபவர்களுக்கு உதவுவதற்குப் பதிலாக அவர்களுடைய ‘சொத்துக்களை விழுங்கிக்கொண்டிருந்த’ மதத் தலைவர்களின் தொல்லைகளையும் அவள் சகிக்க வேண்டியிருந்தது. (லூக். 20:47) பரம ஏழையாக இருந்ததால், குறைந்த மதிப்புள்ள இரண்டு காசைத்தான் அவளால் காணிக்கையாகப் போட முடிந்தது. அன்றைய தொழிலாளிகள் இந்தக் காசை சில நிமிடங்களிலேயே சம்பாதித்து விடுவார்கள்.
9 குறைந்த மதிப்புள்ள இரண்டு காசை எடுத்துக்கொண்டு ஆலய முற்றத்தில் அடியெடுத்து வைத்தபோது அவளுடைய மனதில் எப்படிப்பட்ட எண்ணங்கள் ஓடியிருக்கும் என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். கணவன் உயிரோடிருந்த சமயத்தில் போட்ட காணிக்கையோடு ஒப்பிட இந்தக் காசு அற்பமானது என்று நினைத்திருப்பாளா? மற்றவர்கள் நிறைய காணிக்கைகள் போடுவதைப் பார்த்து சங்கோஜப்பட்டிருப்பாளா? அவர்களுடைய காணிக்கைகளுக்குமுன் தன்னுடைய காசு ஒன்றுமே இல்லை என்று நினைத்திருப்பாளா? இதுபோன்ற எண்ணங்களால் அவள் அலைக்கழிக்கப்பட்டிருந்தாலும், உண்மை வழிபாட்டிற்காகத் தன்னால் முடிந்ததைச் செய்தாள்.
-
-
நம்பிக்கையான மனப்பான்மையைக் காத்துக்கொள்ளுங்கள்காவற்கோபுரம்—2014 | மார்ச் 15
-
-
11. ஏழை விதவையின் பதிவிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
11 உங்களுடைய சூழ்நிலைகள் யெகோவாவுக்கு நீங்கள் செய்யும் சேவையைப் பாதிக்கலாம். முதுமையாலோ முதுமையின் பாதிப்புகளாலோ சிலரால் ஊழியத்தில் குறைவாகவே ஈடுபட முடிகிறது. அப்படிப்பட்டவர்கள் ‘இந்தக் கொஞ்ச நேரத்தைப் போய் அறிக்கை செய்வதா’ என நினைக்கலாம். ஒருவேளை, நீங்கள் இளைஞராக, திடகாத்திரமாக இருந்தாலும் ஊழியத்தில் அதிகம் ஈடுபட முடியாதிருக்கலாம். உலகம் முழுவதுமுள்ள கடவுளுடைய மக்கள் ஊழியத்தில் செலவிடும் மணிநேரங்களோடு ஒப்பிட ‘நான் செய்வது எந்த மூலைக்கு’ என நினைக்கலாம். இப்படிப்பட்டவர்களுக்கு, ஏழை விதவையின் உதாரணம் ஓர் அருமையான பாடத்தைக் கற்றுத்தருகிறது. கஷ்டமான சூழ்நிலைகளிலும் யெகோவாவுக்காக நாம் செய்யும் சிறிய விஷயங்களைக்கூட அவர் கவனிக்கிறார், அதைப் பொக்கிஷமாகப் போற்றுகிறார். கடந்த வருடத்தில் நீங்கள் யெகோவாவுக்குச் செய்த சேவையைக் கொஞ்சம் மனத்திரையில் ஓடவிடுங்கள். ஒருவேளை, அரை மணிநேரமோ ஒரு மணிநேரமோ ஊழியத்தில் ஈடுபடுவதற்காக நீங்கள் நிறைய தியாகம் செய்திருப்பீர்கள்; அந்தக் குறைவான நேரத்தைக்கூட யெகோவா உயர்வாக மதிக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள். அந்த ஏழை விதவையைப் போல, உங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறீர்களென்றால், நீங்கள் ‘விசுவாசத்தில் நிலைத்திருக்கிறீர்கள்’ என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
-