உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • பைபிள் புத்தக எண் 42—லூக்கா
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
    • 1. லூக்கா என்ன வகையான சுவிசேஷத்தை எழுதினார்?

      லூக்கா சுவிசேஷத்தின் எழுத்தாளர் அறிவுத் திறன்மிக்கவர், கனிவானவர். இச்சிறப்பு பண்புகளோடு கடவுளுடைய ஆவியின் வழிநடத்துதலும் சேர்ந்து, திருத்தமான, அன்பும் கனிவுமிக்க விவரப்பதிவை எழுத அவருக்கு உதவியது. தன் பதிவை ஆரம்பிக்கையில் அவர் சொல்வதாவது, “அவற்றையெல்லாம் ஆரம்பமுதல் திட்டமாய் [“துல்லியமாக,” NW] ஆராய்ச்சி செய்திருக்கிற நானும், . . . அவைகளை ஒழுங்காய் [“கிரமப்படி,” NW] உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று.” அவர் நுட்பவிவரமாய் ஆராய்ந்து எழுதிய இந்தப் படைப்பு அந்த கூற்றை உண்மையென முழுமையாய் நிரூபிக்கிறது.​—⁠லூக். 1:⁠3, 4, தி.மொ.

  • பைபிள் புத்தக எண் 42—லூக்கா
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
    • 4. லூக்கா புத்தகம் எப்போது எழுதப்பட்டிருக்கலாம், என்ன சூழ்நிலைமைகள் இந்தக் கருத்தை ஆதரிக்கின்றன?

      4 லூக்கா தன் சுவிசேஷத்தை எப்போது எழுதினார்? அப்போஸ்தலருடைய நடபடிகளை எழுதினவர்தான் (லூக்காதான்) “முதலாம் பிரபந்த”மாகிய இந்தச் சுவிசேஷத்தையும் ஏற்கெனவே தொகுத்ததாக அப்போஸ்தலர் 1:​2 குறிப்பிடுகிறது. பவுல் இராயனுக்கு மனுசெய்து, பதிலுக்குக் காத்திருந்த சமயத்தில், லூக்கா பவுலுடன் ரோமில் இருந்தார்; அப்போது, ஏறக்குறைய பொ.ச. 61-⁠ல் அப்போஸ்தலர் நடபடிகளை பெரும்பாலும் அவர் எழுதியிருக்கலாம். எனவே இந்தச் சுவிசேஷத்தை செசரியாவில் இருக்கையில் ஏறக்குறைய பொ.ச. 56-58-⁠ல் ஒருவேளை லூக்கா எழுதியிருக்கலாம். அதாவது, பவுலின் மூன்றாவது மிஷனரி பயணத்தின் முடிவில் அவருடன் பிலிப்பியிலிருந்து திரும்பிவந்த பின்னர் எழுதியிருக்கலாம். அப்போது பவுல், மேல் முறையீட்டிற்காக ரோமுக்குக் கொண்டுசெல்லப்படும் முன்பாக செசரியாவின் சிறையில் இரண்டு ஆண்டுகள் காத்திருந்தார். லூக்கா அங்கே பலஸ்தீனாவில் இருந்தது, இயேசுவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் பற்றி ‘எல்லாவற்றையும் ஆரம்பமுதல் துல்லியமாக ஆராய்ச்சி செய்வதற்கு’ வாய்ப்பளித்தது. எனவே, லூக்காவின் விவரப்பதிவு மாற்குவின் சுவிசேஷத்துக்கு முந்தி எழுதப்பட்டதாக தோன்றுகிறது.

      5. லூக்கா என்னென்ன தகவல் மூலங்களிலிருந்து இயேசுவின் வாழ்க்கைச் சம்பவங்களைத் ‘துல்லியமாக ஆராய்ந்திருக்கலாம்’?

      5 லூக்கா பன்னிருவரில் ஒருவர் அல்ல, இயேசுவின் மரணம் வரை விசுவாசியும் அல்ல; ஆகவே, தான் எழுதிய சம்பவங்கள் அனைத்திற்கும் அவர் நிச்சயமாகவே கண்கண்ட சாட்சியும் அல்ல. எனினும், அவர் மிஷனரி ஊழியத்தில் பவுலுடைய நெருங்கிய கூட்டாளி. (2 தீ. 4:11; பிலே. 24) ஆகவே, அவருடைய எழுத்தில் பவுலின் செல்வாக்கு தெரிவது நியாயமானதே. லூக்கா 22:​19, 20-⁠லும் 1 கொரிந்தியர் 11:​23-25-லும் உள்ள கர்த்தருடைய இராப்போஜனத்தைப் பற்றிய விவரங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் இது புரியும். லூக்கா அதிக தகவலைப் பெறுவதற்கு, மத்தேயுவின் சுவிசேஷத்தை ஆராய்ந்து பார்த்திருக்கலாம். ‘எல்லாவற்றையும் துல்லியமாக ஆராய்பவராக’ அவர், இயேசுவின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களுக்குக் கண்கண்ட சாட்சியாய் இருந்த பலரையும் நேரில் பேட்டி கண்டிருக்கலாம். அதாவது, அப்போது உயிரோடிருந்த சீஷர்களையும் ஒருவேளை இயேசுவின் தாயாகிய மரியாள் உட்பட பலரையும் கேட்டிருக்கலாம். இப்படி நம்பத்தக்க நுணுக்க விவரங்களைத் திரட்டுவதில் அவருக்குக் கிடைத்த எந்த வாய்ப்பையும் நழுவவிட்டிருக்க மாட்டாரென்று உறுதியாயிருக்கலாம்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்