உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நிக்கொதேமுவிடமிருந்து ஒரு பாடம் கற்றுக்கொள்ளுங்கள்
    காவற்கோபுரம்—2002 | பிப்ரவரி 1
    • இயேசு தமது பூமிக்குரிய ஊழியத்தை ஆரம்பித்து சுமார் ஆறு மாதங்களே ஆகியிருந்தன. அந்தச் சமயத்தில்தான், இயேசு ‘தேவனிடத்திலிருந்து வந்த போதகர்’ என்பதை நிக்கொதேமு புரிந்துகொண்டார். பொ.ச. 30-⁠ல் வந்த பஸ்காவின்போது எருசலேமில் இயேசு நடப்பித்த அற்புதங்களால் மனம் கவரப்பட்டு இரவிலே இயேசுவை பார்க்க வந்தார். போதகராகிய இயேசுவை தான் விசுவாசிப்பதாக ஒப்புக்கொண்டு அவரைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளவே வந்தார். அப்போது, தேவனுடைய ராஜ்யத்தில் ஒருவர் பிரவேசிப்பதற்கு ‘மறுபடியும் பிறப்பது’ அவசியம் என்ற ஒரு ஆழமான சத்தியத்தை நிக்கொதேமுவிடம் இயேசு கூறினார். அதுமட்டுமின்றி, “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” என்றும் இந்த சந்தர்ப்பத்தில் இயேசு கூறினார்.​—⁠யோவான் 3:1-16.

      நிக்கொதேமுவுக்கு எப்பேர்ப்பட்ட மகத்தான எதிர்பார்ப்பு இருந்தது! இயேசுவின் நெருங்கிய தோழராகும் வாய்ப்பு அவருக்கு இருந்தது, இயேசுவுடைய பூமிக்குரிய வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை கண்ணார காணும் வாய்ப்பும் இருந்தது. யூதர்களின் அதிபதியாகவும் இஸ்ரவேலின் போதகனாகவும் இருந்தபடியால் கடவுளுடைய வார்த்தையை அவர் நன்கு அறிந்திருந்தார். இயேசுவை கடவுள் அனுப்பிய போதகராக அவர் அடையாளம் கண்டுகொண்டதிலிருந்து அவருக்கு கூர்மையான உட்பார்வையும் இருந்தது என்பது தெரிகிறது. ஆன்மீக காரியங்களில் நிக்கொதேமுவுக்கு அக்கறை இருந்தது, அவர் மிகுந்த பணிவுள்ளவராக இருந்தார். யூதர்களின் உச்ச நீதிமன்ற உறுப்பினராக இருந்த அவருக்கு, ஓர் எளிய தச்சனுடைய மகனை கடவுளால் அனுப்பப்பட்டவராக ஏற்றுக்கொள்வது எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்! இந்த எல்லா குணங்களுமே ஒருவர் இயேசுவின் சீஷராவதற்கு மிகவும் மதிப்புள்ளவையாகும்.

  • நிக்கொதேமுவிடமிருந்து ஒரு பாடம் கற்றுக்கொள்ளுங்கள்
    காவற்கோபுரம்—2002 | பிப்ரவரி 1
    • முதலாவதாக இந்த யூத அதிபதி ‘இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்தார்’ என யோவான் குறிப்பிடுகிறார். (யோவான் 3:2) பைபிள் அறிஞர் ஒருவர் இவ்வாறு கூறுகிறார்: “இயேசுவை நேரில் காணவந்தபோது ஜனங்கள் இடைஞ்சலாக இருப்பார்கள் என்பதால்தான் நிக்கொதேமு இரவில் பார்க்க வந்தார், பயத்தின் காரணமாக இல்லை.” ஆனால் அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பு ‘யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனாக’ இருந்தான் என்று எந்த சூழமைவில் யோவான் குறிப்பிட்டாரோ அதே சூழமைவில்தான் நிக்கொதேமு ‘ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்தார்’ என்றும் குறிப்பிட்டார். (யோவான் 19:38, 39) ஆகவே அந்நாளில் இயேசுவோடு எந்தத் தொடர்பையும் வைத்துக்கொள்ள பயப்பட்ட மற்றவர்களைப் போலவே நிக்கொதேமுவும்கூட “யூதருக்குப் பயந்திருந்ததினாலே” இராத்திரியில் வந்திருக்க வேண்டும்.​—⁠யோவான் 7:⁠13.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்