உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சிலரைக்கொண்டு பலருக்கு உணவளித்தல்
    காவற்கோபுரம்—2013 | ஜூலை 15
    • 8. கிறிஸ்து யாரைப் பயன்படுத்தி ஆன்மீக உணவை அளிக்கிறார் என்பதை பெந்தெகொஸ்தே நாளன்று கூடியிருந்த புது கிறிஸ்தவர்கள் புரிந்துகொண்டார்கள் என்பதை எப்படிக் காட்டினார்கள்?

      8 உயிர்த்தெழுந்த கிறிஸ்து, கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாள் முதற்கொண்டு அப்போஸ்தலர்களைப் பயன்படுத்தியே பரலோக நம்பிக்கையுள்ள மற்ற சீடர்களுக்கு ஆன்மீக உணவை அளித்துவந்தார். (அப்போஸ்தலர் 2:41, 42-ஐ வாசியுங்கள்.) யூதர்களும் யூத மதத்திற்கு மாறியவர்களும் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களாக ஆனபோது, கிறிஸ்து யாரைப் பயன்படுத்தி ஆன்மீக உணவை அளித்து வருகிறார் என்பதைப் புரிந்துகொண்டார்கள். எந்தத் தயக்கமும் இல்லாமல், ‘அப்போஸ்தலர்கள் கற்றுக்கொடுத்த விஷயங்களுக்கு முழு கவனம் செலுத்தி வந்தார்கள்.’ “முழு கவனம் செலுத்தி வந்தார்கள்” என்பதற்கான கிரேக்க வினைத்தொடர் “ஒரு விஷயத்தை ஒருமனதோடும் உறுதியோடும் செய்வதை” அர்த்தப்படுத்தலாம் என ஓர் அறிஞர் சொல்கிறார். இந்தப் புது கிறிஸ்தவர்கள் கடவுளுடைய வார்த்தைகளிலிருந்த சத்தியங்களை ஆர்வத்தோடு கற்றுக்கொண்டார்கள், அதை யார் தங்களுக்குக் கற்றுத்தர முடியும் என்பதையும் அறிந்திருந்தார்கள். இவர்கள், இயேசுவின் வார்த்தைகள் மற்றும் செயல்களுக்கான விளக்கத்தை... அவரைப் பற்றி சொல்லப்பட்டுள்ள வசனங்களுக்கான சரியான அர்த்தத்தை... அப்போஸ்தலர்களால்தான் தரமுடியும் என்ற நம்பிக்கையோடு அவர்களையே முழுமையாகச் சார்ந்திருந்தார்கள்.c—அப். 2:22-36.

  • சிலரைக்கொண்டு பலருக்கு உணவளித்தல்
    காவற்கோபுரம்—2013 | ஜூலை 15
    • c பாரா 8: புது கிறிஸ்தவர்கள், “அப்போஸ்தலர்கள் கற்றுக்கொடுத்த விஷயங்களுக்கு முழு கவனம் செலுத்தி வந்தார்கள்” என்ற குறிப்பு, அப்போஸ்தலர்கள் தவறாமல் கற்றுக்கொடுத்து வந்தார்கள் என்பதைக் காட்டுகிறது. அவர்களில் சிலர் கற்றுக்கொடுத்த விஷயங்கள் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் பதிவாகியுள்ளது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்