உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உயிர் ஓர் அற்புதமான பரிசு​—⁠அதற்கு மதிப்புக் கொடுங்கள்
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
    • 3. உடல்நலத்தைக் கவனித்துக்கொள்ளுங்கள்

      யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணம் செய்யும்போது, நம் முழு வாழ்க்கையையும் அவருடைய சேவைக்காகப் பயன்படுத்துவதாக வாக்குக் கொடுக்கிறோம். ஒரு விதத்தில், நம் உடலையே அவருக்குப் பலியாக அர்ப்பணிக்கிறோம். அதனால், அதை நன்றாகக் கவனித்துக்கொள்ள வேண்டும். ரோமர் 12:1, 2-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

      • உடல்நலத்தை நீங்கள் ஏன் கவனித்துக்கொள்ள வேண்டும்?

      • எப்படியெல்லாம் உங்கள் உடல்நலத்தைக் கவனித்துக்கொள்ளலாம்?

      ஒரு கர்ப்பிணிப் பெண் தன்னுடைய டாக்டரோடு பேசிக்கொண்டிருக்கிறார்.
  • ஞானஸ்நானம்​—⁠நீங்கள் தயாரா?
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
    • பாடம் 47. மாநாட்டில் ஒருவர் ஞானஸ்நானம் எடுப்பதை ஒரு பைபிள் மாணவர் பார்க்கிறார். தான் ஞானஸ்நானம் எடுக்க வேண்டியதைப் பற்றி யோசித்துப் பார்க்கிறார்.

      பாடம் 47

      ஞானஸ்நானம்—நீங்கள் தயாரா?

      பைபிளிலிருந்து யெகோவாவைப் பற்றி நிறைய விஷயங்களை நீங்கள் தெரிந்துகொண்டீர்கள். படிக்கிற விஷயங்களின்படி நடப்பதற்காக சில மாற்றங்களைக்கூட செய்திருப்பீர்கள். ஆனாலும், யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்க நீங்கள் தயங்கலாம். ஞானஸ்நானம் எடுப்பதற்குப் பொதுவாக என்ன தடைகள் வரலாம், அதையெல்லாம் எப்படித் தாண்டலாம் என்று பார்க்கலாம்.

      1. ஞானஸ்நானம் எடுக்க நீங்கள் பைபிளை எந்தளவு தெரிந்திருக்க வேண்டும்?

      ‘சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவு’ உங்களுக்குத் தேவை. (1 தீமோத்தேயு 2:4) அதற்காக, பைபிளைப் பற்றி மற்றவர்கள் கேட்கும் எல்லா கேள்விக்கும் பதில் தெரிந்திருக்க வேண்டும் என்றில்லை. பல வருஷங்களுக்குமுன் ஞானஸ்நானம் எடுத்தவர்கள்கூட இன்னும் கற்றுக்கொண்டுதான் இருக்கிறார்கள். (கொலோசெயர் 1:9, 10) ஆனால், பைபிளின் அடிப்படை போதனைகளை நீங்கள் கண்டிப்பாகப் புரிந்து வைத்திருக்க வேண்டும். அதைப் போதுமான அளவுக்குப் புரிந்து வைத்திருக்கிறீர்களா என்று தெரிந்துகொள்ள மூப்பர்களிடம்கூட உதவி கேட்கலாம்.

      2. ஞானஸ்நானம் எடுப்பதற்குமுன் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

      முதலில் நீங்கள் ‘மனம் திருந்தி, உங்கள் வழியை மாற்றிக்கொள்ள’ வேண்டும். (அப்போஸ்தலர் 3:19-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், முன்பு ஏதாவது தவறுகள் செய்திருந்தால் அதற்காக உண்மையிலேயே வருத்தப்பட்டு யெகோவாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். அதுமட்டுமல்ல, அவருக்குப் பிடிக்காததைச் செய்யவே கூடாதென்று உறுதியாக இருக்க வேண்டும். அவருக்குப் பிடித்த மாதிரி வாழவும் தீர்மானமாக இருக்க வேண்டும். அதோடு, கூட்டங்களில் கலந்துகொள்ளவும் சபையோடு சேர்ந்து ஊழியம் செய்யவும் ஆரம்பிக்க வேண்டும்.

      3. நீங்கள் ஏன் பயப்பட வேண்டியதில்லை?

      யெகோவாவுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போய்விடுமோ என்று சிலர் பயப்படுகிறார்கள். நாம் சிலசமயம் தவறு செய்துவிடலாம் என்பது உண்மைதான். ஆனால், கடவுளுக்கு உண்மையாக இருந்த ஆண்களும் பெண்களும்கூட சிலசமயம் தவறு செய்ததாக பைபிள் சொல்கிறது. நாம் எந்தத் தவறும் செய்யாமல் பரிபூரணமாக இருக்க வேண்டுமென்று யெகோவா எதிர்பார்ப்பதில்லை. (சங்கீதம் 103:13, 14-ஐ வாசியுங்கள்.) தவறு செய்யாமல் இருக்க நீங்கள் முழு முயற்சி எடுப்பதைப் பார்த்து அவர் சந்தோஷப்படுகிறார்! உங்களுக்கு உதவியும் செய்வார். சொல்லப்போனால், “[அவர்] காட்டுகிற அன்பிலிருந்து [எதுவுமே] நம்மைப் பிரிக்க முடியாதென்று” உறுதி தருகிறார்.—ரோமர் 8:38, 39-ஐ வாசியுங்கள்.

      ஆராய்ந்து பார்க்கலாம்!

      யெகோவாவைப் பற்றி இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்ளும்போதும், அவருடைய உதவியை ஏற்றுக்கொள்ளும்போதும் நீங்கள் தடைகளைத் தாண்டி ஞானஸ்நானம் எடுக்க முடியும். எப்படி என்று பார்க்கலாம்.

      படங்களின் தொகுப்பு: தடைகளைத் தாண்டி ஒரு இளம் பெண் ஞானஸ்நானம் எடுக்கிறாள். படங்கள் இந்தப் பாடத்தில் மறுபடியும் கொடுக்கப்பட்டுள்ளன.

      4. யெகோவாவை நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள்

      அந்தப் பெண் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரோடு பைபிளைப் படிக்கிறாள்.

      ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன் நீங்கள் யெகோவாவைப் பற்றி எந்தளவுக்குத் தெரிந்துகொள்ள வேண்டும்? யெகோவாமேல் அன்பு வரும் அளவுக்கு... அவருக்குப் பிடித்த மாதிரி வாழ வேண்டுமென்ற ஆசை வரும் அளவுக்கு... தெரிந்துகொள்ள வேண்டும். உலகத்தில் நிறைய பேர் இதை எப்படிச் செய்திருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள வீடியோவைப் பாருங்கள். பிறகு, கீழே இருக்கும் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

      வீடியோ: ஞானஸ்நானம் எடுக்க சில டிப்ஸ் (3:56)

      • வீடியோவில் வந்த சிலர் ஞானஸ்நானம் எடுப்பதற்கு எப்படித் தயாரானார்கள்?

      ரோமர் 12:2-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

      • பைபிள் சொல்லித்தரும் விஷயங்களைப் பற்றி உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருக்கிறதா? அல்லது, யெகோவாவின் சாட்சிகள் உண்மையைத்தான் சொல்லித்தருகிறார்களா என்ற சந்தேகம் இருக்கிறதா?

      • சந்தேகம் இருந்தால், நீங்கள் என்ன செய்யலாம்?

      5. தடைகளைத் தாண்டுங்கள்

      அந்தப் பெண் தன் பைக்குள் பைபிளை வைக்கிறாள், அவளுடைய அம்மா திட்டுகிறார்.

      யெகோவாவுக்கு நம்மை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்க முடிவு செய்யும்போது தடைகள் வருவது சகஜம்தான். ஒரு அனுபவத்தைத் தெரிந்துகொள்ள, வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

      வீடியோ: யெகோவாமேல் இருக்கும் அன்பினால் தடைகளைத் தாண்டலாம்! (5:22)

      • வீடியோவில் வந்த பெண் யெகோவாவுக்குச் சேவை செய்ய என்னென்ன தடைகளைத் தாண்டினார்?

      • அந்தத் தடைகளைத் தாண்ட யெகோவாமேல் இருந்த அன்பு அவருக்கு எப்படி உதவி செய்தது?

      நீதிமொழிகள் 29:25-ஐயும் 2 தீமோத்தேயு 1:7-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

      • தைரியமாகத் தடைகளைத் தாண்ட எதுவெல்லாம் நமக்கு உதவி செய்யும்?

      6. யெகோவா உதவுவார் என்று நம்பிக்கையோடு இருங்கள்

      வயதான பெண் ஒருவரிடம் அந்தப் பெண் பிரசங்கிக்கிறாள். அவளுக்கு பைபிளை சொல்லிக்கொடுத்த சகோதரியும் அவளோடு சேர்ந்து ஊழியம் செய்கிறார்.

      தனக்குப் பிடித்த மாதிரி வாழ யெகோவா உங்களுக்கு உதவுவார். வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

      வீடியோ: யெகோவா உங்களுக்கு உதவி செய்வார் (2:50)

      • வீடியோவில் வந்தவர் ஞானஸ்நானம் எடுக்க ஏன் தயங்கினார்?

      • அவர் கற்றுக்கொண்ட என்ன விஷயம் யெகோவாமேல் அவருக்கு இருந்த நம்பிக்கையைப் பலப்படுத்தியது?

      ஏசாயா 41:10, 13-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

      • கடவுளுக்கு உங்களை அர்ப்பணிக்கும்போது கொடுக்கும் வாக்குறுதியைக் காப்பாற்ற முடியும் என்று நீங்கள் ஏன் நம்பிக்கையோடு இருக்கலாம்?

      7. யெகோவாவின் அன்புக்கு நன்றியோடு இருங்கள்

      அந்தப் பெண் தனியாக ஜெபம் செய்கிறாள்.

      யெகோவா உங்களை எந்தளவுக்கு நேசிக்கிறார் என்பதை நினைக்க நினைக்க உங்கள் மனதில் நன்றியுணர்வு பொங்கும். என்றென்றும் அவருக்குச் சேவை செய்ய வேண்டுமென்ற ஆசையும் அதிகமாகும். சங்கீதம் 40:5-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

      • முக்கியமாக எந்தெந்த ஆசீர்வாதங்களுக்காக நீங்கள் யெகோவாவுக்கு நன்றியோடு இருக்கிறீர்கள்?

      எரேமியா தீர்க்கதரிசி யெகோவாவையும் அவருடைய வார்த்தையையும் நேசித்தார். யெகோவாவுக்குச் சேவை செய்யும் பாக்கியம் கிடைத்ததற்காக ரொம்ப நன்றியோடு இருந்தார். “உங்கள் வார்த்தை கிடைத்ததுமே . . . சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போனேன். . . . யெகோவாவே, நான் உங்கள் பெயரால் அழைக்கப்படுவதை நினைத்து உள்ளம் பூரித்துப்போனேன்” என்று அவர் சொன்னார். (எரேமியா 15:16) இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

      • யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இருப்பது ஏன் ஒரு பெரிய பாக்கியம்?

      • நீங்கள் ஞானஸ்நானம் எடுத்து யெகோவாவின் சாட்சியாக ஆவதற்கு ஆசைப்படுகிறீர்களா?

      • ஞானஸ்நானம் எடுக்க உங்களுக்கு ஏதாவது தடை இருக்கிறதா?

      • தடைகளைத் தாண்டி ஞானஸ்நானம் எடுக்க நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறீர்கள்?

      அந்தப் பெண் ஞானஸ்நானம் எடுக்கிறாள்.

      சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “ஞானஸ்நானம் எடுத்ததுக்கு அப்புறம் என்னால எல்லாத்தயும் சரியா செய்ய முடியுமானு தெரியல.”

      • நீங்களும் இப்படித்தான் நினைக்கிறீர்களா?

      சுருக்கம்

      யெகோவாவின் உதவியோடு நீங்கள் எந்தத் தடையையும் தாண்டி ஞானஸ்நானம் எடுக்க முடியும்.

      ஞாபகம் வருகிறதா?

      • ஞானஸ்நானம் எடுக்க நீங்கள் பைபிளை எந்தளவு தெரிந்திருக்க வேண்டும்?

      • ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு நீங்கள் என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம்?

      • ஞானஸ்நானம் எடுப்பதற்கு நீங்கள் ஏன் பயப்படத் தேவையில்லை?

      குறிக்கோள்

      அலசிப் பாருங்கள்

      ஞானஸ்நானம் எடுக்க எது உங்களைத் தூண்ட வேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

      “ஞானஸ்நானம் எடுப்பதற்கு நீங்கள் தயாரா?” (காவற்கோபுரம், மார்ச் 2020)

      நீங்கள் எப்படி சில தடைகளைத் தாண்டி ஞானஸ்நானம் எடுக்கலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

      “ஞானஸ்நானம் எடுக்க இனி எனக்கு என்ன தடை?” (காவற்கோபுரம், மார்ச் 2019)

      ஞானஸ்நானம் எடுக்க ஒருவர் எப்படிப் பெரிய தடைகளைத் தாண்டி வந்தார் என்று பாருங்கள்.

      ‘ஞானஸ்நானம் எடுப்பதை ஏன் தள்ளிப்போடுகிறீர்கள்?’ (1:10)

      ஒருவர் தன்னுடைய தயக்கத்தையெல்லாம் ஒதுக்கித்தள்ளிவிட்டு ஞானஸ்நானம் எடுத்தார். ஏன் என்று பாருங்கள்.

      இதற்கெல்லாம் எனக்குத் தகுதி இருக்கிறதா? (7:21)

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்