உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ijwbq கட்டுரை 96
  • பாவம் என்றால் என்ன?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பாவம் என்றால் என்ன?
  • பைபிள் தரும் பதில்கள்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பைபிள் தரும் பதில்
  • “மன்னிக்க தயாராக இருக்கிற” கடவுள்
    யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
  • யெகோவா, ‘மன்னிப்பதற்கு ஆயத்தமாயிருக்கிற’ கடவுள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • பாவம்
    வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
  • பாவமில்லாத ஓர் உலகம்—எப்படி?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
மேலும் பார்க்க
பைபிள் தரும் பதில்கள்
ijwbq கட்டுரை 96
மையப் புள்ளியில் படாமல் குறி தப்பிய அம்புகள்

பாவம் என்றால் என்ன?

பைபிள் தரும் பதில்

கடவுளுடைய தராதரங்களுக்கு எதிரான எந்தவொரு செயலும், உணர்வும், எண்ணமும் பாவமாகும். கடவுளுடைய பார்வையில் தவறான, அதாவது அநீதியான, செயலைச் செய்து அவருடைய சட்டங்களை மீறுவதும் பாவமாகும். (1 யோவான் 3:4; 5:17) சரியானதைச் செய்யாமல் இருந்துவிடுவதும்கூட பாவம்தான் என்று பைபிள் சொல்கிறது.—யாக்கோபு 4:17.

பைபிளின் மூல மொழிகளில், பாவம் என்பதற்கான வார்த்தைகள் “குறி தப்புவது” என்ற அர்த்தத்தைத் தருகின்றன. உதாரணத்திற்கு, பூர்வ இஸ்ரவேலில் சில வீரர்கள் கவண் கல்லை “குறி தப்பாமல்” எறிவதில் கெட்டிக்காரர்களாக இருந்தார்கள். இந்த வார்த்தைகளை நேரடி மொழிபெயர்ப்பு செய்தால், “பாவம் செய்யாமல்” என்று வாசிப்போம். (நியாயாதிபதிகள் 20:16) ஆகவே, கடவுளுடைய பரிபூரண தராதரங்களைப் பின்பற்றுவதில் குறி தப்பிவிடுவதுதான் பாவம்.

கடவுள் நம்முடைய படைப்பாளராக இருப்பதால், நமக்குத் தராதரங்களை வைக்க அவருக்கு உரிமை இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 4:11) நம்முடைய செயல்களுக்கு நாம் அவரிடம் கணக்குக் கொடுக்க வேண்டும்.—ரோமர் 14:12.

பாவமே செய்யாமல் இருக்க முடியுமா?

முடியாது. ‘எல்லாருமே பாவம் செய்து கடவுளுடைய மகிமையான குணங்களைக் காட்டத் தவறியிருக்கிறார்கள்’ என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 3:23; 1 ராஜாக்கள் 8:46; பிரசங்கி 7:20; 1 யோவான் 1:8) ஏன் அப்படிச் சொல்கிறது?

முதல் மனிதத் தம்பதியான ஆதாமும் ஏவாளும் ஆரம்பத்தில் பாவமற்றவர்களாக இருந்தார்கள். காரணம், அவர்கள் கடவுளுடைய சாயலில், பரிபூரணமானவர்களாகப் படைக்கப்பட்டார்கள். (ஆதியாகமம் 1:27) ஆனால், கடவுளுக்குக் கீழ்ப்படியாமல்போனபோது, தங்களுடைய பரிபூரணத் தன்மையை இழந்தார்கள். (ஆதியாகமம் 3:5, 6, 17-19) தங்களுடைய பிள்ளைகளுக்குப் பாவத்தையும் அபூரணத்தையும் பிறவிக் குறைபாடுகளாகக் கடத்தினார்கள். (ரோமர் 5:12) “நான் குற்றம் குறையோடு பிறந்தேன்” என்று இஸ்ரவேல் ராஜாவான தாவீதும்கூட சொன்னார்.—சங்கீதம் 51:5.

சில பாவங்கள் மற்ற பாவங்களைவிட மோசமானவையா?

ஆம். உதாரணத்திற்கு, பூர்வ சோதோம் நகரத்திலிருந்த ஆண்கள் ‘பொல்லாதவர்களாக இருந்ததாகவும், பயங்கரமான பாவங்களை,’ ‘படுமோசமான பாவங்களை செய்ததாகவும்’ பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 13:13; 18:20) படுமோசமான, படுபயங்கரமான பாவம் எது என்பதைத் தீர்மானிக்க உதவுகிற மூன்று குறிப்புகளைக் கவனியுங்கள்:

  1. எந்தளவு பயங்கரமானது. பாலியல் முறைகேடு, சிலை வழிபாடு, திருட்டு, குடிவெறி, கொலை, கொள்ளை, ஆவியுலகத் தொடர்பு போன்ற படுபயங்கரமான, படுமோசமான பாவங்களைப் பற்றி பைபிள் நம்மை எச்சரிக்கிறது. (1 கொரிந்தியர் 6:9-11; வெளிப்படுத்துதல் 21:8) இதுபோன்ற பாவங்கள் ஒரு ரகம். யோசிக்காமல் கொள்ளாமல்... தெரியாத்தனமாக... செய்துவிடுகிற பாவங்கள் இன்னொரு ரகம்; அவற்றைப் பற்றியும் பைபிள் சொல்கிறது; உதாரணத்திற்கு, மற்றவர்களை நோகடிக்கும் விதத்தில் ஏதாவது பேசுவதையோ செய்வதையோ பற்றி அது சொல்கிறது. (நீதிமொழிகள் 12:18; எபேசியர் 4:31, 32) எந்தப் பாவமாக இருந்தாலும் சரி, அதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாதென்று பைபிள் சொல்கிறது, ஏனென்றால் அது இன்னும் பெரிய பாவத்தைச் செய்ய வைத்துவிடும், கடவுளுடைய சட்டங்களை மீறச் செய்துவிடும்.—மத்தேயு 5:27, 28.

  2. என்ன உள்நோக்கத்துடன் செய்யப்படுகிறது. சில பாவங்கள் கடவுளுடைய சட்டதிட்டங்களைப் பற்றித் தெரியாததால் செய்யப்படுகின்றன. (அப்போஸ்தலர் 17:30; 1 தீமோத்தேயு 1:13) அப்படிப்பட்ட பாவங்களைக் கண்டும்காணாமலும் விட்டுவிட முடியாது என்றாலும், கடவுளுடைய சட்டங்களை வேண்டுமென்றே மீற வைக்கிற பாவங்களிலிருந்து பைபிள் அதை வேறுபடுத்திக் காட்டுகிறது. (எண்ணாகமம் 15:30, 31) வேண்டுமென்றே செய்யப்படுகிற பாவங்கள் ‘பொல்லாத இதயத்திலிருந்தே’ வருகின்றன.—எரேமியா 16:12.

  3. எத்தனை தடவை செய்யப்படுகிறது. ஒரேவொரு பாவத்தைச் செய்வதற்கும் பல நாள் பாவம் செய்துவருவதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை பைபிள் காட்டுகிறது. (1 யோவான் 3:4-8) சரியானது எதுவென்று கற்றுக்கொண்ட பிறகும்கூட ‘வேண்டுமென்றே பாவம் செய்துவருகிறவர்கள்’ கடவுளுடைய தண்டனைத் தீர்ப்பைப் பெறுவார்கள்.—எபிரெயர் 10:26, 27.

பயங்கரமான பாவத்தைச் செய்தவர்கள் தாங்கள் செய்த தவறுகளை நினைத்து நினைத்து குற்ற உணர்வில் செத்து சுண்ணாம்பாகிப்போகலாம். உதாரணத்திற்கு, “என்னுடைய குற்றங்கள் என் தலைக்குமேல் குவிந்திருக்கின்றன. பாரமான சுமைபோல் என்னை அழுத்துகின்றன. என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை” என்று தாவீது ராஜா எழுதினார். (சங்கீதம் 38:4) ஆனாலும், “கெட்டவர்கள் கெட்ட வழிகளையும், கெட்ட யோசனைகளையும் விட்டுவிட்டு, நம் கடவுளான யெகோவாவிடம் திரும்பி வரட்டும். அவர் இரக்கம் காட்டி அவர்களைத் தாராளமாக மன்னிப்பார்” என்ற நம்பிக்கையை பைபிள் அளிக்கிறது.—ஏசாயா 55:7.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்