பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 கொரிந்தியர் 7–10
நம் நிவாரண ஊழியம்
கிறிஸ்தவர்கள் இரண்டு விதமான ஊழியத்தைச் செய்கிறார்கள். ஒன்று, ‘சமரசமாக்கும் ஊழியம்.’ நாம் செய்யும் பிரசங்க வேலையையும் கற்றுக்கொடுக்கும் வேலையையும் இது குறிக்கிறது. இரண்டு, சக கிறிஸ்தவர்களுக்காகச் செய்யும் ‘நிவாரண ஊழியம்.’ (2கொ 5:18-20; 8:4) அதனால், உதவி தேவைப்படும் கிறிஸ்தவர்களுக்கு உதவுவது நம் பரிசுத்த சேவையின் பாகம் என்று சொல்லலாம். இந்தச் சேவையைச் செய்வதன் மூலம்...
சகோதர சகோதரிகளுடைய தேவைகளை நன்றாகப் பூர்த்தி செய்கிறோம்.—2கொ 9:12அ
பாதிக்கப்பட்டவர்கள், தாங்கள் செய்துவந்த ஆன்மீக விஷயங்களை மறுபடியும் தொடர்வதற்கு உதவுகிறோம். அவர்கள் ஊழியத்தில் ஈடுபடுவதும் இதில் அடங்குகிறது. இப்படி, யெகோவாவுக்கு நன்றியோடு இருப்பதை அவர்கள் காட்டுகிறார்கள்.—2கொ 9:12ஆ
யெகோவாவுக்கு மகிமை சேர்க்கிறோம். (2கொ 9:13) நிவாரண ஊழியத்தின் மூலம், யெகோவாவின் சாட்சிகள்மீது தவறான அபிப்பிராயம் வைத்திருப்பவர்கள் உட்பட எல்லாருக்கும் சாட்சி கொடுக்க முடிகிறது