-
நிவாரண ஊழியம்கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது!
-
-
6. (அ) பவுல் சொன்னது போல், நிவாரணப் பணி எப்படி நம் வணக்கத்தின் பாகமாக இருக்கிறது? (ஆ) இன்று உலகம் முழுவதும் நிவாரணப் பணிகள் எப்படிச் செய்யப்படுகின்றன? (“பேரழிவு தாக்கும்போது...” என்ற பெட்டியைப் பக்கம் 214-ல் பாருங்கள்.)
6 நிவாரணப் பணி தங்களுடைய வணக்கத்தோடும் ஊழியத்தோடும் எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை கொரிந்திய கிறிஸ்தவர்களுக்கு பவுல் புரிய வைத்தார். ‘கிறிஸ்துவின் நல்ல செய்திக்கு அடிபணிந்து நடப்பதால்தான்’ கிறிஸ்தவர்கள் நிவாரணப் பணிகளைச் செய்வதாக அவர் சொன்னார். (2 கொ. 9:13) இன்று நாமும் கிறிஸ்துவின் போதனைகளின்படி நடக்க விரும்புவதால்தான் சக கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்கிறோம். பவுல் குறிப்பிட்டதுபோல், சகோதரர்களுக்காக அன்போடு செய்யப்படும் உதவிகள் உண்மையிலேயே கடவுள் காட்டும் ‘ஈடிணையில்லாத மகா கருணைதான்.’ (2 கொ. 9:14; 1 பே. 4:10) தேவையில் இருக்கும் சகோதரர்களுக்கு உதவி செய்வதில் நிவாரணப் பணியும் உட்பட்டிருப்பதைப் பற்றி டிசம்பர் 1, 1975, காவற்கோபுரம் இப்படிச் சொன்னது: “இப்படிப்பட்ட சேவையை யெகோவாவும் அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவும் ரொம்பவே முக்கியமானதாக நினைக்கிறார்கள் என்பதில் நமக்கு எந்தச் சந்தேகமும் இருக்கக் கூடாது.” ஆம், நிவாரணப் பணியும் பரிசுத்த சேவையின் ஒரு முக்கியமான பாகம்தான்.—ரோ. 12:1, 7; 2 கொ. 8:7; எபி. 13:16.
-
-
நிவாரண ஊழியம்கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்கிறது!
-
-
7, 8. நிவாரண ஊழியத்தின் முதல் லட்சியம் என்ன? விளக்குங்கள்.
7 நம் நிவாரண ஊழியத்தின் லட்சியங்கள் என்ன? இந்தக் கேள்விக்கான பதிலை கொரிந்தியர்களுக்கு எழுதிய இரண்டாம் கடிதத்தில் பவுல் குறிப்பிட்டார். (2 கொரிந்தியர் 9:11-15-ஐ வாசியுங்கள்.) ‘பொதுப்பணியில்,’ அதாவது நிவாரணப் பணியில், ஈடுபடுவதன் மூலம் மூன்று முக்கியமான லட்சியங்களை அடைகிறோம் என்று இந்த வசனங்களில் பவுல் குறிப்பிட்டார். அவற்றை ஒவ்வொன்றாக இப்போது பார்க்கலாம்.
8 முதலாவதாக, நாம் செய்யும் நிவாரண ஊழியம் யெகோவாவுக்கு மகிமை சேர்க்கிறது. மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து வசனங்களில் பவுல் எத்தனை முறை யெகோவாவின் பக்கம் சகோதரர்களுடைய கவனத்தைத் திருப்புகிறார் என்று பாருங்கள். இந்த வேலையின் காரணமாக நிறைய பேர் “கடவுளுக்கு நன்றி சொல்கிறார்கள்” என்றும் “கடவுளுக்குத் தாராளமாக நன்றி சொல்ல” தூண்டப்படுகிறார்கள் என்றும் பவுல் அவர்களுக்கு நினைப்பூட்டுகிறார். (வசனங்கள் 11, 12) ‘கடவுளை மகிமைப்படுத்தவும்’ அவருடைய “ஈடிணையில்லாத மகா கருணையை” புகழவும் நிவாரணப் பணிகள் எப்படி உதவுகின்றன என்று அவர் குறிப்பிடுகிறார். (வசனங்கள் 13, 14) நிவாரண ஊழியத்தைப் பற்றிய விஷயங்களை “கடவுளுக்கு நன்றி” என்ற வார்த்தைகளோடு அவர் முடிக்கிறார்.—வசனம் 15; 1 பே. 4:11.
-