உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஐனிக்கேயாளும் லோவிசாளும்—பின்பற்றத்தக்க போதனையாளர்கள்
    காவற்கோபுரம்—1998 | மே 15
    • இருப்பினும், ஐனிக்கேயாள் தன் நம்பிக்கைகளைக் குறித்ததில் தனிமையில் இருக்கவில்லை. தீமோத்தேயு தன் தாயிடமிருந்தும், பாட்டியாகிய லோவிசாளிடமிருந்தும் ‘பரிசுத்த வேத எழுத்துக்களில்’ போதனையை பெற்றுக்கொண்டதாக தெரிகிறது. a அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு இவ்வாறு அறிவுரை கூறினார்: “நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல், கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.”—2 தீமோத்தேயு 3:14, 15.

  • ஐனிக்கேயாளும் லோவிசாளும்—பின்பற்றத்தக்க போதனையாளர்கள்
    காவற்கோபுரம்—1998 | மே 15
    • தீமோத்தேயு வேதாகம சத்தியங்களை ‘கற்று நிச்சயித்துக்கொண்டிருந்தான்.’ ஒரு கிரேக்க அகராதியின்படி, பவுல் இங்கே பயன்படுத்திய சொல், ஏதோவொன்றை “உறுதியாக நம்பும்படி இணக்குவித்தல்; நிச்சயப்படுத்திக்கொள்ளுதல்” என்று பொருள்படுகிறது. தீமோத்தேயுவின் இருதயத்தில் உறுதியான நம்பிக்கையை நிலைநாட்டி, கடவுளுடைய வார்த்தையில் காரணம் காண்பித்து விளக்கி அதில் விசுவாசம் வைக்க அவருக்கு உதவி செய்வதற்கு அதிகமான நேரமும் முயற்சியும் தேவைப்பட்டிருக்கும் என்பதைக் குறித்து எவ்வித சந்தேகமுமில்லை. அப்படியென்றால் ஐனிக்கேயாளும் லோவிசாளும் தீமோத்தேயுவுக்கு வேதாகமத்திலிருந்து கற்பிப்பதற்கு கடினமாய் உழைத்திருக்க வேண்டும் என்பது தெளிவாய் தெரிகிறது. அந்தத் தேவபக்தியுள்ள பெண்கள் எப்பேர்ப்பட்ட பலனை பெற்றார்கள்! பவுல் தீமோத்தேயுவைக் குறித்து இவ்வாறு எழுதமுடிந்தது: “அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்.”—2 தீமோத்தேயு 1:5.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்