-
மக்களிடம் இருக்கிற வித்தியாசத்தைப் பாருங்கள்காவற்கோபுரம் (படிப்பு)-2018 | ஜனவரி
-
-
3. எப்படிப்பட்ட மக்களைப் பற்றி 2 தீமோத்தேயு 3:2-5 சொல்கிறது?
3 கடைசி நாட்களில், “சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும்” என்று பவுல் எழுதினார். பிறகு, 19 வகையான கெட்ட குணங்கள் நம் காலத்தில் சர்வசாதாரணமாகக் காணப்படும் என்று சொன்னார். இதே போன்ற குணங்களைத்தான் ரோமர் 1:29-31 வசனங்களிலும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், தீமோத்தேயுவுக்கு எழுதிய கடிதத்தில் அவர் பயன்படுத்திய சில வார்த்தைகள் கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் வேறு எங்குமே இல்லை. “மனிதர்கள்” இப்படிப்பட்ட குணங்களைக் காட்டுவார்கள் என்று பவுல் சொன்னார். ஆனால், எல்லா மனிதர்களுமே அந்தக் கெட்ட குணங்களைக் காட்டுவதில்லை. உண்மைக் கிறிஸ்தவர்கள் அந்தக் குணங்களுக்கு நேர்மாறான குணங்களைக் காட்டுகிறார்கள்.—மல்கியா 3:18-ஐ வாசியுங்கள்.
-
-
மக்களிடம் இருக்கிற வித்தியாசத்தைப் பாருங்கள்காவற்கோபுரம் (படிப்பு)-2018 | ஜனவரி
-
-
4. தலைக்கனம் பிடித்தவர்களை நீங்கள் எப்படி விவரிப்பீர்கள்?
4 நிறையப் பேர் சுயநலக்காரர்களாகவும் பண ஆசைபிடித்தவர்களாகவும் இருப்பார்கள் என்று பவுல் சொன்ன பிறகு, அவர்கள் ஆணவமுள்ளவர்களாகவும், கர்வமுள்ளவர்களாகவும், தலைக்கனம் பிடித்தவர்களாகவும் இருப்பார்கள் என்றும் சொன்னார். இப்படிப்பட்ட குணங்களைக் காட்டுகிறவர்கள், மற்றவர்களைவிட தங்களை உயர்ந்தவர்களாக நினைக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கலாம் அல்லது அவர்களுக்கு சில திறமைகளோ நிறைய சொத்தோ பெரிய அந்தஸ்தோ இருக்கலாம். மற்றவர்களுடைய அபிமானத்தைப் பெற வேண்டுமென்று அவர்கள் துடிக்கிறார்கள். “அப்படிப்பட்ட ஒருவர் தன்னுடைய இதயத்தில் ஒரு பீடத்தைக் கட்டி, தன்னையே வணங்குகிறார்” என்று ஒரு அறிஞர் எழுதினார். தலைக்கனம் பிடித்தவர்களுக்குக்கூட, மற்றவர்கள் தலைக்கனத்தோடு நடப்பதைப் பார்க்கப் பிடிக்காது; தலைக்கனம் அந்தளவுக்கு அசிங்கமான ஒரு குணம்!
-
-
மக்களிடம் இருக்கிற வித்தியாசத்தைப் பாருங்கள்காவற்கோபுரம் (படிப்பு)-2018 | ஜனவரி
-
-
8. (அ) பிள்ளைகள் அப்பா அம்மாவின் பேச்சைக் கேட்காததைப் பற்றி சிலர் என்ன நினைக்கிறார்கள்? (ஆ) பிள்ளைகளுக்கு பைபிள் என்ன கட்டளை கொடுக்கிறது?
8 கடைசி நாட்களில் மக்கள் ஒருவரிடம் ஒருவர் எப்படி நடந்துகொள்வார்கள் என்று பவுல் விளக்கினார். பிள்ளைகள் அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படிய மாட்டார்கள் என்று அவர் எழுதினார். இன்று, பிள்ளைகள் அப்பா அம்மாவின் பேச்சைக் கேட்காததில் எந்தத் தவறும் இல்லை, அது சகஜம்தான் என்பதுபோல் நிறைய புத்தகங்களும் சினிமாக்களும் டிவி நிகழ்ச்சிகளும் மக்களை நினைக்க வைக்கின்றன. ஆனால், கீழ்ப்படியாமை என்ற குணம் சமுதாயத்தின் ஆணிவேராக இருக்கும் குடும்பத்தையே ஆட்டம்காண வைக்கிறது என்பதுதான் உண்மை. இந்த உண்மை, காலம்காலமாகவே மனிதர்களுக்குத் தெரிந்திருந்தது. உதாரணத்துக்கு, பூர்வ கிரேக்க நாட்டில், பெற்றோரை அடித்தவர்களுடைய சமுதாய உரிமைகள் பறிக்கப்பட்டன. ரோமில் இருந்த சட்டம், கொலைக் குற்றவாளிக்குக் கொடுக்கப்பட்ட அதே தண்டனையைத் தன் அப்பாவை அடித்தவனுக்கும் கொடுக்க அனுமதி அளித்தது. எபிரெய வேதாகமம், கிரேக்க வேதாகமம் ஆகிய இரண்டுமே, அப்பா அம்மாவுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டுமென்று பிள்ளைகளுக்குக் கட்டளை கொடுக்கிறது.—யாத். 20:12; எபே. 6:1-3.
-
-
மக்களிடம் இருக்கிற வித்தியாசத்தைப் பாருங்கள்காவற்கோபுரம் (படிப்பு)-2018 | ஜனவரி
-
-
10, 11. (அ) மக்களுக்கு மற்றவர்கள்மேல் அன்பு இல்லை என்பதை எந்தெந்த கெட்ட குணங்கள் காட்டுகின்றன? (ஆ) உண்மைக் கிறிஸ்தவர்கள் மற்றவர்களை எந்தளவுக்கு நேசிக்கிறார்கள்?
10 மக்களிடம் இருக்கும் மற்ற கெட்ட குணங்களைப் பற்றியும் பவுல் சொன்னார்; ஒருவர் மீது ஒருவருக்கு அன்பு இல்லாததை அவை காட்டுகின்றன. அவர்கள், “அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படியாதவர்களாக” இருப்பார்கள் என்று சொன்ன பிறகு, அவர்கள் நன்றிகெட்டவர்களாக இருப்பார்கள் என்றும் பவுல் சொன்னார். இது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! ஏனென்றால், மற்றவர்கள் தங்களுக்காகச் செய்யும் நல்ல விஷயங்களை மதிக்காதவர்கள்தான் நன்றிகெட்டவர்களாக இருக்கிறார்கள். அடுத்ததாக, மக்கள் உண்மையில்லாதவர்களாக இருப்பார்கள் என்று பவுல் சொன்னார். அவர்கள் எதற்குமே ஒத்துப்போகாதவர்களாக இருப்பார்கள்; அதாவது, மற்றவர்களோடு சமாதானமாவதற்கு விரும்ப மாட்டார்கள். அதோடு, கடவுளை நிந்திக்கிறவர்களாகவும், நம்பிக்கைத் துரோகிகளாகவும் இருப்பார்கள்; அவர்கள் மனிதர்களைப் பற்றியும் கடவுளைப் பற்றியும்கூட படுமோசமாகப் பேசுகிறவர்களாக இருப்பார்கள். அதுமட்டுமல்ல, மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவர்களாகவும் இருப்பார்கள். அதாவது, மற்றவர்களுடைய பெயரைக் கெடுப்பதற்காகப் பொய்களைப் பரப்புகிறவர்களாக இருப்பார்கள்.a—அடிக்குறிப்பைப் பாருங்கள்.
-