உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மந்தையை மேய்க்கும் கண்காணிகள்
    யெகோவாவின் விருப்பத்தைச் செய்யும் அமைப்பு
    • 11 கண்காணிகளாக நியமிக்கப்படுகிறவர்கள் மற்றவர்களிடம் நடந்துகொள்ளும் விதத்திலும் தங்களுடைய பழக்கவழக்கங்களிலும் அளவுக்குமீறி போகாதவர்களாக இருப்பார்கள். எதிலுமே வெறித்தனமாக இருக்க மாட்டார்கள். எல்லா விஷயங்களிலும் சமநிலையாகவும் சுயக்கட்டுப்பாட்டுடனும் நடந்துகொள்வார்கள். சாப்பிடுவது, குடிப்பது, பொழுதுபோக்குகளில் ஈடுபடுவது, விருப்ப வேலைகளைச் செய்வது (Hobby) போன்றவற்றில் அளவோடு இருப்பார்கள். மதுபானத்தைக் குடிப்பதாக இருந்தால், நிதானம் இழக்குமளவுக்குக் குடித்தவர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகாதவர்களாக இருப்பார்கள்; குடிகாரர் என்று பெயர் எடுக்காதவர்களாகவும் இருப்பார்கள். குடிபோதை ஒருவருடைய உணர்வுகளை மழுங்கிப்போக வைப்பதால் அவர் எளிதில் தன்னுடைய சுயக்கட்டுப்பாட்டை இழந்துவிடுவார். அதனால் சபைப் பொறுப்புகளை அவரால் கவனிக்க முடியாது.

  • மந்தையை மேய்க்கும் கண்காணிகள்
    யெகோவாவின் விருப்பத்தைச் செய்யும் அமைப்பு
    • 13 ஒரு கண்காணி, நியாயமானவராக இருக்க வேண்டும். மூப்பர் குழுவில் இருக்கிற மற்றவர்களோடு சேர்ந்து ஒற்றுமையாக வேலை செய்பவராகவும், அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பவராகவும் இருக்க வேண்டும். மற்றவர்களிடமிருந்து அளவுக்கதிகமாக எதிர்பார்க்கிறவராக இருக்கக் கூடாது. அவர் தன்னை உயர்வாக நினைக்க மாட்டார். நியாயமான ஒரு மூப்பர், தான் சொல்வதுதான் சரி என்று பிடிவாதமாக இருக்க மாட்டார், மற்ற மூப்பர்களுடைய கருத்துகளைவிடத் தன்னுடைய கருத்துதான் உயர்ந்தது என நினைக்க மாட்டார். ஏனென்றால், அவரிடம் இல்லாத சில குணங்களோ திறமைகளோ மற்றவர்களிடம் இருக்கலாம் என்பதைப் புரிந்து வைத்திருப்பார். நியாயமான ஒரு மூப்பர், பைபிளின் அடிப்படையில் தீர்மானங்கள் எடுப்பவராகவும், இயேசு கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றக் கடினமாக முயற்சி செய்பவராகவும் இருப்பார். (பிலி. 2:2-8) ஒரு மூப்பர் தகராறு செய்கிறவராகவோ மூர்க்கமானவராகவோ இருக்க மாட்டார். அதற்குப் பதிலாக, மற்றவர்களுக்கு மதிப்புக் கொடுத்து, அவர்களைத் தன்னைவிட உயர்ந்தவர்களாக நினைப்பார். அவர் தன்னுடைய இஷ்டப்படி நடக்க மாட்டார். அதாவது, தான் சொல்கிறபடிதான் எல்லாம் நடக்க வேண்டும் என்றோ, தன்னுடைய கருத்தைத்தான் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றோ எப்போதும் வற்புறுத்துகிறவராக இருக்க மாட்டார். அவர் முன்கோபக்காரராக இருக்க மாட்டார், மற்றவர்களோடு சமாதானமாக நடந்துகொள்வார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்