கணவரும் மூப்பரும்—பொறுப்புகளை சமநிலைப்படுத்துதல்
‘கண்காணியானவன் ஒரே மனைவியை உடைய புருஷனாக இருக்கவேண்டும்.’—1 தீமோத்தேயு 3:2.
1, 2. மணமாகாதிருக்கும் குருத்துவ விரதம் ஏன் வேதப்பூர்வமானதல்ல?
முதல் நூற்றாண்டில் உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் தங்களுடைய பல்வேறு பொறுப்புகளை சமநிலைப்படுத்துவதில் அக்கறையுடையவர்களாய் இருந்தார்கள். மணம் செய்யாதிருக்கும் ஒரு கிறிஸ்தவன் ‘அதிக நலமானதைச் செய்கிறான்’ என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னபோது, அத்தகைய ஒருவர் கிறிஸ்தவ சபையில் கண்காணியாகச் சேவிப்பதற்கு மேம்பட்ட பொருத்தமுடையவராக இருப்பார் என்று அவர் அர்த்தங்கொண்டாரா? மூப்பராயிருப்பதற்கு, மணமாகாத நிலை உண்மையில் ஒரு தேவையெனக் குறிப்பிட்டுக்கொண்டிருந்தாரா? (1 கொரிந்தியர் 7:38) கத்தோலிக்க குருமாருக்கு மணமாகாத நிலை தேவைப்படுத்தப்படுகிறது. ஆனால் குருத்துவ மணமாகாத நிலை வேதப்பூர்வமானதா? கிழக்கத்திய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சுகள் தங்கள் பங்கு-தந்தையரை (Parish Priest) மணம் செய்த ஆண்களாக இருப்பதற்கு அனுமதிக்கின்றன, எனினும் தங்கள் பேராயர்களை (Bishop) அவ்வாறு செய்ய அனுமதிக்கிறதில்லை. இது பைபிளுக்கு ஒத்திசைவாக உள்ளதா?
2 கிறிஸ்தவ சபையின் அஸ்திபார உறுப்பினர்களாகிய, கிறிஸ்துவின் 12 அப்போஸ்தலர்களில் பெரும்பாலானோர் மணம் செய்த ஆட்களாக இருந்தனர். (மத்தேயு 8:14, 15; எபேசியர் 2:20) பவுல் இவ்வாறு எழுதினார்: “மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் [பேதுருவும்] செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா?” (1 கொரிந்தியர் 9:5) “மணமாகாதிருக்கும் விரதச் சட்டம் திருச்சபையில் தொடங்கினது” என்றும், “பு[திய] ஏ[ற்பாட்டு] ஊழியர்கள் மணமாகாதிருக்கும்படி கடமைப்படுத்தப்படவில்லை,” என்றும், தி நியூ கத்தோலிக் என்ஸைக்ளோப்பீடியா ஒப்புக்கொள்கிறது. திருச்சபை சட்டத்தைப் பார்க்கிலும் வேதப்பூர்வமான மாதிரியையே யெகோவாவின் சாட்சிகள் பின்பற்றுகின்றனர்.—1 தீமோத்தேயு 4:1-3.
மூப்பர் பொறுப்பும் மணவாழ்க்கையும் பொருத்தமாக இருக்கின்றன
3. கிறிஸ்தவ கண்காணிகள் மணமாகிய ஆட்களாக இருக்கலாமென்று வேதப்பூர்வ என்ன உண்மைகள் காட்டுகின்றன?
3 கண்காணிகளாக நியமிக்கப்பட்டவர்கள் மணம் செய்யாதவர்களாக இருக்க வேண்டும் என்று தேவைப்படுத்தாமல், அதற்கு மாறாக தீத்துவுக்கு பவுல் இவ்வாறு எழுதினார்: “நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பரை [கிரேக்கில், பிரெஸ்பிட்டெராஸ்] ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கிரேத்தாதீவிலே விட்டுவந்தேனே. குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கரென்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவனிருந்தால் அவனையே ஏற்படுத்தலாம். ஏனெனில், கண்காணியானவன் [கிரேக்கில், எப்பிஸ்கோப்பாஸ் (e·piʹsko·pos), அதிலிருந்தே “பிஷப்” என்ற சொல் வந்தது] தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய், குற்றஞ்சாட்டப்படாதவ[னாக]” இருக்க வேண்டும்.—தீத்து 1:5-7.
4. (அ) மணமாகியிருப்பது, கிறிஸ்தவ கண்காணிகளுக்குரிய ஒரு தகுதியாக இல்லை என்பதை நாம் எவ்வாறு தெரிந்துகொள்கிறோம்? (ஆ) மூப்பராக இருக்கிற மணமாகாத சகோதரருக்கு என்ன அனுகூலம் உள்ளது?
4 மறுபட்சத்தில், மணமாகியிருப்பது மூப்பர் பொறுப்புக்கான வேதப்பூர்வ ஒரு தகுதி அல்ல. இயேசு மணமாகாதவராக இருந்தார். (எபேசியர் 1:22) முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபைக்குள் முதன்மையான ஒரு கண்காணியாக இருந்த பவுல் அப்போது மணமாகாதவராக இருந்தார். (1 கொரிந்தியர் 7:7-9) இன்று, மணமாகாத கிறிஸ்தவர்கள் பலர் மூப்பர்களாகச் சேவிக்கிறார்கள். அவர்களுடைய மணமாகாத நிலை, கண்காணிகளாகத் தங்கள் கடமைகளை நிறைவேற்ற அவர்களுக்கு அதிக நேரத்தை ஒருவேளை அனுமதித்திருக்கலாம்.
‘விவாகஞ்செய்தவன் இருமனப்பட்டிருக்கிறான்’
5. வேதப்பூர்வமான என்ன உண்மையை மணமாகிய சகோதரர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்?
5 ஒரு கிறிஸ்தவர் மணம் செய்கையில், தன் நேரத்தையும் கவனத்தையும் கேட்கும் புதிய பொறுப்புகளை ஏற்கிறார் என்பதை அவர் உணரவேண்டும். பைபிள் இவ்வாறு கூறுகிறது: “விவாகமில்லாதவன் ஆண்டவருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, ஆண்டவருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். விவாகஞ்செய்துகொண்டவனோ தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலையுற்று இருமனப்பட்டிருக்கிறான்.” (1 கொரிந்தியர் 7:32-34, தி.மொ.) என்ன கருத்தில் இருமனப்பட்டிருக்கிறான்?
6, 7. (அ) மணமாகியவர் என்ன கருத்தில் ‘இருமனப்பட்டிருக்கிறார்’? (ஆ) மணமாகிய கிறிஸ்தவர்களுக்கு பவுல் என்ன அறிவுரை அளிக்கிறார்? (இ) ஒரு வேலை நியமிப்பை ஏற்பதற்கு ஒருவரின் தீர்மானத்தை இது எவ்வாறு பாதிக்கலாம்?
6 ஒரு காரியமாக, மணம் செய்தவர், தன் சொந்த உடலின்மீது அதிகாரத்தைத் துறந்துவிடுகிறார். பவுல் இதை மிகத் தெளிவாக்கினார்: “மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.” (1 கொரிந்தியர் 7:4) மணம் செய்யும்படி சிந்தித்துக்கொண்டிருக்கும் சிலர், இது அதிக முக்கியமானதல்ல, ஏனெனில் பாலுறவு தங்கள் மணவாழ்க்கையில் பெரிய காரியமாக இராது என்று நினைக்கலாம். எனினும், மணம் செய்வதற்கு முன்பாகக் கற்புடையோராக இருக்க வேண்டுமென்பது வேதப்பூர்வ கட்டளையாக இருப்பதால், கிறிஸ்தவர்கள் தங்களுடைய வருங்கால துணையின் பாலுணர்வு தேவைகளை உண்மையில் அறிகிறதில்லை.
7 ‘ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிற’ தம்பதியுங்கூட, ஒருவர் மற்றவருடைய பாலுணர்வு தேவைகளைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று பவுல் காட்டுகிறார். கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அவர் இவ்வாறு அறிவுரை கூறினார்: “புருஷன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள். உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடி வாழுங்கள்.” (ரோமர் 8:5; 1 கொரிந்தியர் 7:3, 5) விசனகரமாய், இந்த அறிவுரையைப் பின்பற்றாதபோது விபசார ஈடுபாடுகள் ஏற்பட்டிருக்கின்றன. இவ்வாறிருப்பதால், மணம் செய்திருக்கிற ஒரு கிறிஸ்தவர், தன் மனைவியைவிட்டு நெடுங்காலம் பிரிந்திருக்கச் செய்யும் ஒரு வேலை நியமிப்பை ஏற்பதற்கு முன்பாக, காரியங்களைக் கவனமாய்ச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். மணம் செய்யாதிருந்தபோது செயல்படுவதற்குத் தனக்கு இருந்த அதே சுயாதீனம் அவருக்கு இனிமேலும் இல்லை.
8, 9. (அ) மணமாகிய கிறிஸ்தவர்கள், ‘உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறார்கள்’ என்று பவுல் சொன்னபோது என்ன அர்த்தங்கொண்டார்? (ஆ) மணமாகிய கிறிஸ்தவர்கள் என்ன செய்வதற்கு கவலையுள்ளவர்களாக இருக்க வேண்டும்?
8 மூப்பர்களும் உட்பட, மணமாகிய கிறிஸ்தவ ஆண்கள், ‘உலகத்திற்குரியவைகளுக்காகக் [koʹsmos] கவலைப்படுகிறார்கள்’ என்று என்ன கருத்தில் சொல்லப்படலாம்? (1 கொரிந்தியர் 7:33) இந்த உலகத்தின் தீயக் காரியங்களைப் பற்றி பவுல் பேசிக்கொண்டில்லை என்பது மிகத் தெளிவாயிருக்கிறது; உண்மையான கிறிஸ்தவர்கள் எல்லாரும் அவற்றிற்கு விலகியிருக்கிறார்கள். (2 பேதுரு 1:4; 2:18-20; 1 யோவான் 2:15-17) ‘அவபக்தியையும் லௌகிக [ko·smi·kosʹ] இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம் பண்ணும்படி’ கடவுளுடைய வார்த்தை நமக்குப் போதிக்கிறது.—தீத்து 2:12.
9 ஆகையால் மணமாகிய ஒரு கிறிஸ்தவர், இயல்பான மணவாழ்க்கையின் பாகமாயிருக்கிற இவ்வுலக வாழ்க்கைக்குரிய காரியங்களைப் பற்றி அவர் அல்லது அவள் நியாயப்படி அக்கறையுடையவராக இருப்பதில் ‘உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறார்[ள்].’ வீடு, உணவு, உடை, பொழுதுபோக்கு—அவற்றோடுகூட பிள்ளைகள் இருந்தால், எண்ணற்ற மற்ற அக்கறைகள் யாவற்றையும் இது உட்படுத்துகிறது. ஆனால் பிள்ளைகளில்லாத தம்பதிக்கும், மணவாழ்க்கை வெற்றிகரமாக இருப்பதற்கு, கணவனும் மனைவியுமான இருவருமே, ஒருவருக்கொருவர் மணத்துணைவருடைய அல்லது மணத்துணைவியினுடைய ‘பிரியத்தைப்’ பெற அக்கறையுடையோராக இருக்க வேண்டும். கிறிஸ்தவ மூப்பர்கள் தங்களுடைய பொறுப்புகளை சமநிலைப்படுத்துகையில், அவர்களுக்கு இது முக்கியமாய் அக்கறைக்குரிய விஷயமாய் இருக்கிறது.
நல்ல கணவர்களாயும் நல்ல மூப்பர்களாயும்
10. ஒரு கிறிஸ்தவர், மூப்பராகத் தகுதி பெறுவதற்கு, அவருடைய கிறிஸ்தவ சகோதரரும் புறம்பேயுள்ள ஆட்களும் எதை கவனிக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும்?
10 மூப்பர் பொறுப்புக்கு, மணமாகியிருப்பது தேவைப்படும் ஒரு தகுதியாக இல்லை எனினும், ஒரு கிறிஸ்தவர், மூப்பராக நியமிக்கப்பட அவர் சிபாரிசு செய்யப்படுவதற்கு முன்பாக மணமாகியவராக இருந்தால், சரியான தலைமை வகிப்பைச் செலுத்துகையில், நல்ல, அன்புள்ள கணவராயிருக்க முயற்சி செய்வதன் அத்தாட்சியை அவர் நிச்சயமாகவே அளிக்க வேண்டும். (எபேசியர் 5:23-25, 28-31) பவுல் இவ்வாறு எழுதினார்: ‘கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான். கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனு[மாய்] இருக்கவேண்டும்.’ (1 தீமோத்தேயு 3:1, 2) தன்னுடைய மனைவி உடன் கிறிஸ்தவளாக இருந்தாலும் இல்லாவிடினும், ஒரு நல்ல கணவராக இருப்பதற்கு, தன்னால் முடிந்தவற்றையெல்லாம் ஒரு மூப்பர் செய்கிறார் என்று தெரிய வேண்டும். உண்மையில், அவர் தன் மனைவியையும் தன்னுடைய மற்ற பொறுப்புகளையும் நன்றாய்க் கவனித்துவருகிறார் என்பதை, சபைக்குப் புறம்பேயுள்ள ஆட்களுங்கூட கவனிக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும். பவுல் மேலும் கூறினார்: “அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயுமிருக்க வேண்டும்.”—1 தீமோத்தேயு 3:7.
11. ‘ஒரே மனைவியை உடைய புருஷன்’ என்ற சொற்றொடர் எதை மறைமுகமாக உணர்த்துகிறது, ஆகையால் என்ன முன்னெச்சரிக்கையான நடவடிக்கையை மூப்பர்கள் மேற்கொள்ள வேண்டும்?
11 “ஒரே மனைவியை உடைய புருஷனு[மாய்]” என்ற சொற்றொடர் பல மனைவியரை மணக்கும் பழக்கம் கூடாதெனத் தீர்க்கிறது, எனினும் மணவாழ்க்கையில் உண்மையுள்ளோராக இருப்பதையும் மறைமுகமாக உணர்த்துகிறது. (எபிரெயர் 13:4) முக்கியமாய், சபையில் சகோதரிகளுக்கு உதவிசெய்கையில் மூப்பர்கள் தனிப்பட கவனமாய் இருப்பது அவசியம். அறிவுரையும் ஆறுதலும் தேவைப்படுகிற ஒரு சகோதரியைச் சந்திக்கையில், தனிமையில் இருப்பதை அவர்கள் தவிர்க்க வேண்டும். மற்றொரு மூப்பரோடு, அல்லது உதவி ஊழியரோடு, உற்சாகப்படுத்தும் சிநேகப்பான்மையான சந்திப்பாக மாத்திரம் இருந்தால், தங்கள் மனைவியோடுங்கூட சேர்ந்து செல்லலாம்.—1 தீமோத்தேயு 5:1, 2.
12. என்ன விவரிப்புக்கு ஏற்றவாறு நடக்கும்படி மூப்பர்கள் மற்றும் உதவி ஊழியர்களின் மனைவிமார் பிரயாசப்பட வேண்டும்?
12 குறிப்பிடத்தக்கதாக, அப்போஸ்தலன் பவுல், மூப்பர்களின் மற்றும் உதவி ஊழியர்களின் தகுதிகளை வரிசையாகக் குறிப்பிடுகையில், அத்தகைய சிலாக்கியங்களுக்காக கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுவோருடைய மனைவிகளுக்கும் சிறிது அறிவுரை கூறுகிறார். அவர் எழுதினதாவது: “அந்தப்படியே ஸ்திரீகளும் நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், எல்லாவற்றிலேயும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கவேண்டும்.” (1 தீமோத்தேயு 3:11) அந்த விவரிப்புக்கு ஏற்றவாறு நடக்கும்படி தன் மனைவிக்கு உதவிசெய்ய ஒரு கிறிஸ்தவ கணவர் அதிகம் செய்ய முடியும்.
மனைவியினிடமாக வேதப்பூர்வமான கடமைகள்
13, 14. ஒரு மூப்பரின் மனைவி உடன்சாட்சியாக இல்லாவிடினும், அவர் ஏன் அவளுடன் வாழ்ந்து நல்ல கணவராக இருக்க வேண்டும்?
13 மூப்பர்களின் அல்லது உதவி ஊழியர்களின் மனைவிகளுக்குரிய இந்த அறிவுரை, அத்தகைய மனைவிகள்தாமே ஒப்புக்கொடுத்தக் கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள் என்று கருதியே கொடுக்கப்படுகிறது. பொதுவாக இவ்வாறுள்ளது, ஏனெனில், ‘கர்த்தருக்குட்பட்டவனாயிருக்கிற’ ஒருவரையே மணம் செய்யும்படி கிறிஸ்தவர்கள் கட்டளையிடப்படுகின்றனர். (1 கொரிந்தியர் 7:39) ஆனால், யெகோவாவுக்குத் தன் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்தபோது, ஏற்கெனவே ஓர் அவிசுவாசியை மணம் செய்திருந்த ஒரு சகோதரனைப் பற்றியதென்ன, அல்லது அவருடைய குற்றம் எதுவும் இல்லாமல் சத்தியத்தினின்று விலகிச் செல்லும் மனைவியையுடையவரைப் பற்றியதென்ன?
14 அவர் மூப்பராயிருப்பதை இதுதானே தடை செய்யாது. தன் நம்பிக்கைகளில் தன் மனைவி பங்குகொள்கிறதில்லை என்ற காரணம்தானே, தன் மனைவியைவிட்டு அவர் பிரிந்து செல்வதையும் இது நியாயமானதாக்காது. “நீ மனைவியோடே கட்டப்பட்டிருந்தால், அவிழ்க்கப்பட வகைதேடாதே,” என்று பவுல் அறிவுரையாக சொன்னார். (1 கொரிந்தியர் 7:27) அவர் மேலுமாகச் சொன்னதாவது: “மற்றவர்களைக்குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன். ஆகிலும், அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில், சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்களல்ல. சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார். மனைவியானவளே நீ உன் புருஷனை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்? புருஷனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்?” (1 கொரிந்தியர் 7:12, 15, 16) தன் மனைவி ஒரு சாட்சியாக இராவிடினும், மூப்பர் ஒரு நல்ல கணவராக இருக்க வேண்டும்.
15. என்ன அறிவுரையை அப்போஸ்தலன் பேதுரு கிறிஸ்தவ கணவர்களுக்குக் கொடுக்கிறார், அவ்வாறு செய்யத்தவறும் கணவராக ஒரு மூப்பர் நிரூபித்தால் அதன் விளைவுகள் என்னவாயிருக்கலாம்?
15 தன் மனைவி உடன் விசுவாசியாக இருந்தாலும் இராவிடினும், தன் அன்புள்ள கவனிப்பு தன் மனைவிக்குத் தேவை என்பதைக் கிறிஸ்தவ மூப்பர் உணரவேண்டும். அப்போஸ்தலன் பேதுரு இவ்வாறு எழுதினார்: “அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.” (1 பேதுரு 3:7) தன்னுடைய மனைவியின் தேவைகளை வேண்டுமென்றே கவனிக்கத் தவறும் ஒரு கணவர், யெகோவாவுடன் தன் சொந்த உறவை ஆபத்தில் வைக்கிறார்; ‘ஜெபம் உட்பிரவேசிக்கக்கூடாதபடிக்கு மேகம் மூடிக்கொண்டிருப்பது’ போல், அவர் யெகோவாவை அணுகுவதை அது தடை செய்யக்கூடும். (புலம்பல் 3:44) ஒரு கிறிஸ்தவ கண்காணியாகச் சேவிக்க அவர் தகுதியற்றவராவதற்கு இது வழிநடத்தக்கூடும்.
16. என்ன முக்கிய குறிப்பை பவுல் அறிவுறுத்துகிறார், இதைப் பற்றி மூப்பர்கள் எவ்வாறு உணர வேண்டும்?
16 குறிப்பிட்டபடி, பவுலின் விவாதத்தினுடைய முக்கிய அழுத்தமானது, ஒருவர் மணம் செய்கையில், மணமாகாத நிலையில், தனக்கு இருந்த ஓரளவு சுயாதீனத்தைத் துறந்துவிடுகிறார், ‘கவலையில்லாமல் [“கவனச்சிதறல் இல்லாமல்,” NW] கர்த்தரைப் பற்றிக்கொண்டிருக்கும்படி’ அனுமதித்த சுயாதீனத்தைத் துறந்துவிடுகிறார் என்பதாகும். (1 கொரிந்தியர் 7:35) தேவாவியால் ஏவப்பட்ட பவுலுடைய வார்த்தைகளின்பேரில் நியாய விவாதம் செய்வதில் மணமாகிய சில மூப்பர்கள் எப்பொழுதும் சமநிலையுள்ளவர்களாக இல்லை என்று அறிக்கைகள் காட்டுகின்றன. நல்ல மூப்பர்கள் தாங்கள் செய்ய வேண்டும் என்று உணருகிற காரியத்தை நிறைவேற்றுவதற்கான தங்கள் ஆவலில், கணவருக்குரிய தங்கள் கடமைகள் சிலவற்றை கவனியாமல் விட்டுவிடக்கூடும். சபை சம்பந்தப்பட்ட ஒரு சிலாக்கியத்தை ஏற்றுக்கொள்வது தங்கள் மனைவிமாருக்கு ஆவிக்குரியப்பிரகாரம் கெடுதலாக இருக்குமென்று தெளிவாக இருந்தாலும், சிலர் அதை மறுப்பதை கடினமாக காண்பார்கள். மணவாழ்க்கையோடு இணைந்துள்ள சிலாக்கியங்களை அவர்கள் அனுபவிக்கின்றனர், ஆனால் அதோடு வருகிற பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு மனமுள்ளவர்களாக இருக்கிறார்களா?
17. கண்காணிகளின் மனைவிகள் சிலருக்கு என்ன நடந்திருக்கிறது, இதை எவ்வாறு தவிர்த்திருக்கலாம்?
17 நிச்சயமாகவே, மூப்பராகக் கொண்டுள்ள ஆர்வம் போற்றத்தக்கது. இருப்பினும், ஒரு கிறிஸ்தவர், சபையில் தன் கடமைகளை நிறைவேற்றுவதில், தன் மனைவியினிடமாகத் தன் வேதப்பூர்வ பொறுப்புகளை கவனியாது விட்டால், அவர் சமநிலையான ஒரு மூப்பராக இருக்கிறாரா? சபையிலுள்ளவர்களை ஆதரிப்பதற்கு விரும்புகிற அதே சமயத்தில், சமநிலையுள்ள ஒரு மூப்பர் தன் மனைவியினுடைய ஆவிக்குரிய தன்மையைக் குறித்தும் அக்கறையுள்ளவராக இருப்பார். சில மூப்பர்களுடைய மனைவிகள் ஆவிக்குரிய பிரகாரமாக பலவீனமாகியிருக்கின்றனர், மேலும் சிலர் ஆவிக்குரிய ‘கப்பற்சேதத்தை’ அனுபவித்திருக்கின்றனர். (1 தீமோத்தேயு 1:19) மனைவியானவள் தன் சொந்த இரட்சிப்புக்காக உழைக்க வேண்டிய உத்திரவாதம் இருக்கிறபோதிலும், “கர்த்தர் [கிறிஸ்து] சபையைப் போஷித்துக்காப்பாற்றுகிறதுபோல” மூப்பர் தன் மனைவியைப் ‘போஷித்துக் காப்பாற்றி’ இருந்திருந்தால், சிலருடைய காரியங்களில் இது தவிர்க்கப்பட்டிருக்கலாம். (எபேசியர் 5:28, 29) சந்தேகமில்லாமல், மூப்பர்கள் ‘தங்களைக்குறித்தும், மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருக்க’ வேண்டும். (அப்போஸ்தலர் 20:28) அவர்கள் மணமாகியவர்களானால், அவர்களுடைய மனைவியரையும் இது உட்படுத்துகிறது.
‘சரீரத்தில் உபத்திரவம்’
18. மணமாகிய கிறிஸ்தவர்கள் அனுபவிக்கும் ‘உபத்திரவத்தின்’ சில அம்சங்கள் யாவை, மூப்பரின் நடவடிக்கைகளை இது எவ்வாறு பாதிக்கக்கூடும்?
18 இந்த அப்போஸ்தலன் இவ்வாறும் எழுதினார்: “கன்னிகை விவாகம்பண்ணினாலும் பாவமல்ல. ஆகிலும் அப்படிப்பட்டவர்கள் சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள்; அதற்கு நீங்கள் தப்பவேண்டுமென்றிருக்கிறேன்.” (1 கொரிந்தியர் 7:28) மணமாகாதிருக்கும் தன் முன்மாதிரியைப் பின்பற்ற இயலுவோரை, மணவாழ்க்கையோடு தவிர்க்கமுடியாதபடி வருகிற கவலைகளிலிருந்து காத்துவைக்க பவுல் விரும்பினார். பிள்ளைகளில்லாத தம்பதிகளுக்குங்கூட, இந்தக் கவலைகள், உடல்நலப் பிரச்சினைகள் அல்லது பண சம்பந்த இக்கட்டுகளும் அவற்றோடுகூட மணத்துணைவரின் வயதான பெற்றோரிடமான வேதப்பூர்வ பொறுப்புகளும் உட்பட்டவையாக இருக்கலாம். (1 தீமோத்தேயு 5:4, 8) ஒரு மூப்பர், முன்மாதிரியான ஒரு முறையில், இந்தப் பொறுப்புகளை ஏற்க வேண்டும். இவ்வாறு செய்வது, கிறிஸ்தவ கண்காணியாக அவருடைய நடவடிக்கைகளை சில சமயங்களில் பாதிக்கலாம். சந்தோஷகரமாக, மூப்பர்கள் பலர், தங்கள் குடும்ப மற்றும் சபை பொறுப்புகள் ஆகிய இரண்டையும் நிறைவேற்றி சிறந்த முறையில் செயல்படுகிறார்கள்.
19. “மனைவிகளுள்ளவர்கள் மனைவிகளில்லாதவர்கள்போலவும், . . . இருக்கவேண்டும்,” என்று பவுல் சொன்னபோது அவர் என்ன அர்த்தங்கொண்டார்?
19 பவுல் மேலும் சொன்னதாவது: ‘இனிவரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகளில்லாதவர்கள்போலவும் இருக்கவேண்டும்.’ (1 கொரிந்தியர் 7:29) நிச்சயமாகவே, கொரிந்தியருக்கு எழுதின இந்த அதிகாரத்தில் அவர் ஏற்கெனவே எழுதியிருந்ததைக் கருதுகையில், மணமாகிய கிறிஸ்தவர்கள் தங்கள் மனைவிகளை ஏதாவது ஒரு முறையில் அசட்டை செய்ய வேண்டும் என்று அர்த்தங்கொள்ளவில்லை என்பது தெளிவாயிருக்கிறது. (1 கொரிந்தியர் 7:2, 3, 33) அவர் பின்வருமாறு எழுதினபோது தான் கருதினதைத் தெரியப்படுத்தினார்: “இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் முழுவதுமாய் அதை அனுபவியாதவர்கள்போலவும் இருக்கவேண்டும்; இவ்வுலகத்தின் கோலம் கடந்துபோகிறதே.” (1 கொரிந்தியர் 7:31, தி.மொ.) பவுலின் நாளில் அல்லது அப்போஸ்தலன் யோவானின் நாளில் இருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அதிகமாக, ‘இந்த உலகம் ஒழிந்துபோகிறது.’ (1 யோவான் 2:15-17) ஆகையால், கிறிஸ்துவைப் பின்பற்றுவதில் சில தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று உணரும் மணமாகிய கிறிஸ்தவர்கள், மணவாழ்கையின் மகிழ்ச்சிகளிலும் சிலாக்கியங்களிலும் மாத்திரமே மூழ்கிப்போயிருக்க முடியாது.—1 கொரிந்தியர் 7:5.
தன்னலத் தியாகஞ்செய்யும் மனைவிகள்
20, 21. (அ) கிறிஸ்தவ மனைவிகள் பலர், என்ன தியாகங்கள் செய்வதற்கு மனமுள்ளோராக இருக்கின்றனர்? (ஆ) ஒரு மனைவி, தன் கணவர் மூப்பராக இருந்தாலும், நியாயப்படி அவரிடமிருந்து எதை எதிர்பார்க்கலாம்?
20 மற்றவர்கள் பிரயோஜனமடைவதற்காக மூப்பர்கள் தியாகங்கள் செய்வதுபோல, மூப்பர்களுடைய மனைவிகள் அநேகர், திருமணத்தில் தங்களுடைய உத்திரவாதங்களை இன்றியமையாத ராஜ்ய அக்கறைகளுடன் சமநிலைப்படுத்த கடினமாக முயற்சி செய்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ பெண்கள், தங்கள் கணவர்கள் கண்காணிகளாகத் தங்கள் கடமைகளை நிறைவேற்ற இயலும்படி செய்வதற்கு ஒத்துழைப்பதில் சந்தோஷப்படுகின்றனர். இதற்காக யெகோவா அவர்களை நேசித்து, அவர்கள் காட்டும் நல்ல மனப்பான்மையை ஆசீர்வதிக்கிறார். (பிலேமோன் 25) இருப்பினும், கண்காணிகளின் மனைவிகள், தங்கள் கணவர்களிடமிருந்து நியாயமானளவு நேரத்தையும் கவனத்தையும் நியாயப்படி எதிர்பார்க்கலாம் என்று பவுலின் சமநிலைப்பட்ட அறிவுரை காட்டுகிறது. மணமாகிய மூப்பர்கள், கணவர்களாகவும் கண்காணிகளாகவும் தங்கள் பொறுப்புகளை சமநிலைப்படுத்த தங்கள் மனைவிகளுக்கென போதுமான நேரத்தை ஒதுக்கிவைப்பது வேதப்பூர்வமான கடமையாக இருக்கிறது.
21 ஆனால், கிறிஸ்தவ மூப்பர் ஒருவர், கணவராக இருப்பதோடுகூட தகப்பனாகவும் இருந்தால் என்ன செய்வது? பின்வரும் கட்டுரையில் நாம் காணப்போகிற பிரகாரம், இது அவருடைய பொறுப்புகளோடு மேலும் கூட்டி, கண்காணிப்புக்குரிய கூடுதலான செயல் எல்லையை அவருக்கு முன்பாகத் திறக்கிறது.
மறுபார்வையிடுதல்
◻ கிறிஸ்தவ கண்காணி மணமாகியவராக இருக்கலாமென்று, வேதப்பூர்வ என்ன உண்மைகள் காட்டுகின்றன?
◻ மணமாகாத மூப்பர் ஒருவர் மணம் செய்தால், எதைப் பற்றி அவர் உணர்வுள்ளவராக இருக்க வேண்டும்?
◻ மணமாகிய கிறிஸ்தவர் ஒருவர் என்ன வகைகளில் ‘உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறார்’?
◻ கண்காணிகளின் மனைவிகள் பலர் எவ்வாறு சிறந்த தன்னலத் தியாக மனப்பான்மையைக் காட்டுகிறார்கள்?
[பக்கம் 17-ன் படம்]
தேவராஜ்ய நடவடிக்கைகளில் முழுமையாக ஈடுபட்டிருந்தாலும், ஒரு மூப்பர் தன் மனைவிக்கு அன்புள்ள கவனிப்பு கொடுக்க வேண்டும்