உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w87 6/1 பக். 4-7
  • பைபிள் கடவுளுடைய வார்த்தைதான்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பைபிள் கடவுளுடைய வார்த்தைதான்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பைபிளும் வரலாற்றுமுறை ஆய்வும்
  • பைபிளும் விஞ்ஞானமும்
  • வல்லமையுள்ள ஒரு நூல்
  • பைபிள்—வெறுமென மனிதனுடைய வார்த்தையா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
  • குறைகூறப்படுவதை ஏற்பது உங்களுக்கு வெறுப்பாயுள்ளதா?
    விழித்தெழு!—1992
  • அறிவியல் என் மதமாக இருந்தது
    விழித்தெழு!—2003
  • மேலான ஞானத்தின்ஓர் ஒப்பற்ற ஊற்றுமூலம்
    வாழ்க்கையின் நோக்கமென்ன? அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
w87 6/1 பக். 4-7

பைபிள் கடவுளுடைய வார்த்தைதான்

விஞ்ஞானம் பைபிள் பேரிலான வரலாற்றுமுறை ஆய்வும், பைபிள் கடவுளுடைய வார்த்தை என்ற அதன் முன்னாள் அந்தஸ்திலிருந்து அதை தள்ளிவிட்டது என்பது உண்மைதானா? அப்படித்தான் என்று ஒருவேளை அநேகர் நினைக்கக்கூடும். பைபிள் விஞ்ஞானப்பூர்வமற்றது என்று மதத்தலைவர்கள்கூட வெளிப்படையாக தெரிவிக்கின்றனர். பைபிளின் பேரிலான வரலாற்றுமுறை ஆராய்ச்சிகள் உயர்வாக மதிக்கப்படுவதால், அது இறையியல் போதனா பள்ளிகளிலும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. ஆனால் உண்மைகள் காண்பிப்பது என்ன?

பைபிளும் வரலாற்றுமுறை ஆய்வும்

பைபிள் வரலாற்றுமுறை ஆய்வைக் குறித்த உண்மை என்னவெனில், அதன் கருத்துகளுக்கு எவ்வித பலமான ஆதாரமும் இன்னும் அளிக்கப்படவில்லை, என்பதே. முதல் ஐந்து ஆகமங்களுக்கும் அல்லது ஏசாயா புத்தகத்துக்கும் மூலங்களாகக் கருதப்பட்ட எதுவும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. தானியேல் புத்தகத்தின் பூர்வீக எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதானது, அது அப்படியாக எழுதப்பட்டது என்ற பைபிள் வரலாற்றுமுறை ஆய்வாளர்களால் உரிமைபாராட்டியதற்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பே அது உயர்வாக மதிக்கப்பட்டது!

இறையியல் பேராசிரியர் ஒருவர் பின்வருமாறு அறிக்கையிடுகிறார்: “இந்தப் பைபிள் வரலாற்றுமுறை ஆய்வாளர்கள் விவரிப்பதுபடி பைபிளின் புத்தகங்கள் திருட்டுத்தனமாக வந்தவை என்று எந்த ஒரு விஷயத்திலும் நிரூபிக்க முடியாது. இந்த மதப்பள்ளி அப்படிப்பட்ட கருத்தைக் கொண்டிருப்பது ஒன்று, அதை நிரூபிப்பது முற்றிலும் வேறொன்று,” (பைபிள் வரலாற்றுமுறை ஆய்வில் விக் புரூமல்) தொல்பொருளாராய்ச்சி நிபுணர் ஒருவர் கூறுவதாவது: “பூர்வீக கிழக்குப் பகுதிகளுக்குப் பக்கத்துப் பிரதேசத்தில் எழுத்துப் பதிவுகள் மற்றும் இலக்கிய தொகுப்புகளுக்கு எந்த ஒரு அத்தாட்சியும் இல்லை என்பதை உறுதியாக அறுதியிட்டுச் சொல்ல முடியாது.” (கற்காலமுதல் கிறிஸ்தவம் வரை என்பதில் W.F. ஆல்பிரைட்) இப்படிப்பட்ட ஆய்வுகள் தொடர்ந்து செழித்து வருகிறது என்பது உண்மைதான். ஆனால் இதற்குக் காரணம், அது இன்றைய மதசார்பற்ற சிந்தனை முறைக்கு இசைவாகச் செல்வதுதான், அது நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்பதாலல்ல.

பைபிளும் விஞ்ஞானமும்

விஞ்ஞானம் பைபிளை எந்த விதத்திலாவது நிரூபணமற்றதாக்கிவிட்டிருக்கிறதா? சரி, சில சமயங்களில் அது அவ்வாறு காணப்பட்டிருக்கலாம். உதாரணமாக, 18-ம் நூற்றாண்டில் நம்முடைய பூமியின் அமைப்பைப் பற்றிய ஆழ்ந்த தெளிவு, நம்முடைய பூகோளம் அதிக பழமையானது என்பதை தெளிவுபடுத்தியது. அந்தச் சமயத்திலிருந்த அநேக மதவாதிகள், பைபிள் பிரகாரம் பூமியின் வயது 6,000 ஆண்டுகள் மட்டுமே என்று வற்புறுத்தினர். பைபிள் கற்பிக்கும் காரியம் தவறானது என்று காண்பிப்பதாயிருந்தது. ஆனால், உண்மை என்னவெனில், பூமியின் வயது என்ன என்பதைக் குறித்து பைபிள் எங்கேயும் குறிப்பிடவில்லை. அந்த மதவாதிகளின் தவறான புரிந்துகொள்ளுதலே இந்தப் பிரச்னைக்குக் காரணமாயிருந்தது.

பைபிளின் முதல் வார்த்தைகள் யாதெனில்: “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.” (ஆதியாகமம் 1:1) ஆதி அல்லது ஆரம்பம் ஒன்று இருந்தது என்ற இந்தக் கூற்று நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு இசைவாக இருக்கிறது. பைபிள் பிரகாரம், பூமி “ஒழுங்கின்மையும் வெறுமையுமாய்” இருந்தது, குடியிருப்பின்றியும் குடியிருப்புக்குத் தகுதியற்றதாயுமிருந்தது. (ஆதியாகமம் 1:2) பூமியின் ஆரம்ப சரித்திரத்தை அமைக்க முயலும் புவியியல் ஆராய்ச்சியாளர்களின்படி ஒரு சமயத்தில் பூமியின் நிலை இப்படியாக இருந்தது. அதைத் தொடர்ந்து கடல்களும் நிலப்பரப்பும் எப்படி ஏற்பட்டது என்று பைபிள் விவரிக்கிறது. தாவரங்களும் கடல் பிராணிகளும், பறவைகளும், பின்பு மிருகங்களும் உண்டாயின. கடைசியில் மனிதன்தானே காட்சியில் வந்தான். மொத்தத்தில் பார்க்கும்போது, பூமியின் புவியமைப்பை ஆராய்ந்த விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளில் உயிர் தோற்றத்தின் வரிசை முறைக்கு இது ஒத்திருக்கிறது.—ஆதியாகமம் 1:1-28.

விஞ்ஞான பாட புத்தகங்களிலுள்ளவற்றிற்கெல்லாம் பைபிள் முழுவதுமாக ஒத்திருக்கிறது என்று சொல்லுவதற்கில்லை. ஆனால் ஒத்திருக்கும் அநேக குறிப்புகள் அதில் காணப்படுவதால், ‘அந்தப் பூர்வீக பைபிள் எழுத்தாளர்கள் எப்படி இவ்வளவு விஷயங்களை அறிந்திருந்தார்கள்?’ என்று நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அந்தப் பூர்வீக நாட்களிலே விஞ்ஞானத்தின் அடிப்படை ஆரம்ப அறிவு கொடுக்கப்பட்டிருப்பதுதானே, பைபிள் உண்மையிலேயே கடவுளுடைய வார்த்தை என்பதற்கு ஆதாரமாகத் திகழ்கிறது. விஞ்ஞானிகளின் கோட்பாட்டிற்கும் பைபிளுக்கும் கருத்து வித்தியாசங்கள் இருக்குமிடத்தில், பைபிள் தவறு, விஞ்ஞானிகள்தான் எப்போதுமே சரி என்ற முடிவுக்கு வர வேண்டுமா? விஞ்ஞானிகள் அவ்வப்போது தவறான பாதையில் செல்லக்கூடும் என்பதற்கு அநேக எடுத்துக்காட்டுகள் உள்ளன.

பரிணாம கொள்கை பைபிளுக்கு ஒத்துச் செல்லாத ஒரு முக்கிய கோட்பாடாக இருக்கிறது என்பது உண்மைதான். இந்தக் கோட்பாட்டைக் குறித்து கவனிக்கப்பட வேண்டிய காரியம் என்னவெனில் டார்வின் இனங்களின் மூலம் [The Origin of Species] என்ற புத்தகத்தை வெளியிட்டது முதல்தான் அந்தக் கோட்பாடு எவ்வளவு வேகமாகப் பரவியது. அந்தப் புத்தகத்தின் உண்மைத்தன்மையைச் சோதித்துப் பார்ப்பதற்கு அல்லது புதைப்படிவப் பதிவுகளுக்கான அத்தாட்சிகளைப் பரிசோதிப்பதற்குக் காலம் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே அது ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. ஏன்? பரிணாமவாதி ஹோய்மர் V. டித்ஃபர்த் பின்வருமாறு ஒப்புக்கொள்கிறார்: “விஞ்ஞானத்திற்கு விளக்கம். அற்புதங்களின் துணையின்றி மனிதனையும் இயற்கையையும் மனிதன் எந்தளவுக்கு விளக்க முடியும் என்பதற்கான முயற்சியாம்.” (H.V.டிட்ஃபர்த் எழுதிய உயிரின் மூலங்கள்.)

அப்படியென்றால், விஞ்ஞானிகள் அந்தப் பரிணாம கோட்பாட்டை மிக ஆர்வத்துடன் பற்றிக்கொண்டு, அது எப்படி நிரூபிக்கப்பட முடியாத ஒன்று என்பதற்கு நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதிலாக அதை நிரூபிக்கப் பார்ப்பதற்கே அதிக நேரத்தையும் முயற்சியையும் செலவழித்திருக்கின்றனர் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறதா? இதற்கு ஒரே மறுவழி? சிருஷ்டிப்பு, ஓர் அற்புதம்—அவர்கள் இதை நினைத்துப் பார்க்க மறுக்கிறார்கள்.

என்றபோதிலும், அற்புதங்கள் பேரில் தப்பெண்ணம் கொள்ளாதவர்கள் எவருக்கும், விஞ்ஞானிகள் விளக்க முடியாத காரியங்களாகிய உயிர், உணர்வு, புத்திக்கூர்மை, மற்றும் மனிதனின் ஒழுக்க இயல்பு ஆகியவற்றின் ஊற்றுமூலத்தை நியாயமான விதத்தில் புரிந்துகொள்ள சிருஷ்டிப்பு மட்டுமே சரியான வழியாக இருக்கிறது.

வல்லமையுள்ள ஒரு நூல்

உலகம் பெற்றிருக்கும் ஞானத்திற்கும் பைபிளின் சொந்த போதனைகளுக்கும் இடையே ஒரு போராட்டம் இருக்கும் என்று பைபிள் தானே எச்சரிக்கிறது. (1 கொரிந்தியர் 1:22, 23; 3:19) மனித ஆராய்ச்சி மற்றும் தத்துவத்தின் பேரில் சார்ந்த அறிவு நிச்சயமற்றதாயிருப்பதால் இந்தப் போராட்டம் அல்லது முரண்பாடு நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதற்கில்லை. பிரசித்திபெற்ற சில கோட்பாடுகள் பைபிளுக்கு முரண்பட்டதாயிருப்பதைக் கண்டு நம் மன அமைதியை இழந்துவிடக்கூடாது. அது உண்மையிலேயே கடவுளுடைய வார்த்தை என்ற அதன் உரிமை பாராட்டுதலுக்கு அத்தாட்சிகளுக்காக வேறு திசைகளிலும் பார்க்கும்படியாக பைபிள்தானே நம்மை ஊக்குவிக்கிறது.

உதாரணமாக, பைபிள் ஒரு தீர்க்கதரிசன புத்தகமாக நிரூபிக்கிறது. (2 பேதுரு 1:19-21) இந்தச் சம்பவங்கள், இவை நிகழ்ந்ததற்குப் பின்புதான் தீர்க்கதரிசனங்கள்போன்று எழுதப்பட்டவை என்று வரலாற்று முறை ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இயேசு பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள் வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறின. (உதாரணத்திற்கு ஏசாயா 53:1-12; தானியேல் 9:24-27-ஐ பார்க்கவும்) எருசலேமைப்பற்றி இயேசு நேரடியாக சொன்ன தீர்க்கதரிசனம்தானே சரியாக நிறைவேறினது. அவரும் அவருடைய அப்போஸ்தலனாக இருந்த பவுலும் சொன்ன கடைசி நாட்களைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் இன்றைய காலை தினசரியைப் படிப்பது போன்றிருந்தது. (மத்தேயு 24; மாற்கு 13; லூக்கா 21; 2 தீமோத்தேயு 3:1-5) எதிர்காலத்தை முன்னறிவிக்க முயற்சிக்கும் மனிதர்கள் திருத்தமாக முன்னறிவிப்பதில்லை. படுதோல்வியைக் கண்டிருக்க, பைபிள் உயர்ந்த ஓர் ஊற்றுமூலத்தையுடையது என்பதற்கு அதன் தீர்ச்சதரிசனங்கள் தானே பலமான அத்தாட்சியை அளிக்கிறது.

மற்றொரு பலமான அத்தாட்சியை அதன் சொந்த வார்த்தைகளிலேயே காண்கிறோம்: “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும் . . . இருக்கிறது.” (எபிரெயர் 4:12) பைபிளை வாசிப்பதற்கு அல்லது அதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கான உரிமைக்காக ஏராளமான மக்கள் துன்பத்திற்குள்ளாகி மரித்திருக்கின்றனர்; இப்படியாக அந்த வல்லமை சரித்திர முழுவதும் விளங்கியிருக்கிறது. தாழ்மையான ஆவியோடும் நிதானத்தோடும் வாசிக்கப்படும்போது, வேறு எந்த ஒரு பிரசுரமும் மக்களை இந்தளவுக்கு நல்லவிதத்தில் பாதித்ததில்லை. சண்டை அல்லது போர் மனம் கொண்ட மக்களைச் சமாதானம் நாடுகிற மக்களாக மாற்றுகிறது, ஒரு நபரின் சுபவாத்தன்மை முழுவதையும் மாற்றக்கூடியது. (மீகா 4:3, 4; எபேசியர் 4:24) உதாரணமாக, லூயிஸுக்கு பைபிள் என்ன செய்தது என்பதைக் கவனியுங்கள்.

பிரேஸில் சிறைச்சாலையில் கைதியாக இருந்த லூயிஸ் பயங்கரமானவனாக இருந்தான். அந்தச் சமயத்தில் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் லூயிஸின் உடன் கைதிகளிடம் ஊழியம் செய்து கொண்டிருக்கும்போது, லூயிஸிடம் பேச வாய்ப்பு கிடைத்தது. பைபிளின் வார்த்தைகள் அவனை அதிகமாக பாதித்ததால் அவன் விரைவில் ஒரு வித்தியாசமான மனிதனாக மாறினான். (கொலோசெயர் 3:9, 10) அதற்கு முன்பாக, அவனிடம் பேசும் தைரியம் எவருக்கும் இருக்கவில்லை, ஆனால் இப்பொழுதோ அவன் எல்லோரையும் தயவாக நடத்துகிறான், சிறை அதிகாரிகளுக்குக் கொடுக்கவேண்டிய மரியாதையையும் கொடுக்கிறான். பைபிளைப் படிக்க ஆரம்பித்து ஐந்து வருடங்கள் கழிந்தன. தான் கற்றுக் கொண்ட காரியங்களை மற்ற கைதிகளுடன் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தான். மற்றும் சிறை மதில்களுக்கு வெளியேயும் சென்று பிரசங்கிப்பதற்கு அவன் அனுமதி பெற்றான்.

வேய்னை கவனியுங்கள். ஐக்கிய மாகாணங்களில் வேய்ன் ஒரு தன்னல வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தான். தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியில் ஒழுக்கங்கெட்ட செயல்களுக்கும் போதை மருந்துகளுக்குமே தன்னை அடிமைப்படுத்தினான். அவன் விவாகமானபோதோ, அவனுடைய மனைவி ஒழுங்கந்தவறும் அளவுக்கு ஒழுக்கங்கெட்டவனாயிருந்தான். அவர்களுடைய குடும்ப வாழ்க்கை பயங்கரமாக இருந்தது. அவர்கள் விவாக ரத்து செய்யும் நிலையில் இருந்த சமயம் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் வேய்னை சந்தித்து, குடும்ப வட்டாரத்தில் உத்தரவாதத்தையும் அன்பையும் குறித்து பைபிள் என்ன சொல்லுகிறது என்பதை அவனுக்கு எடுத்துக் காண்பிக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. (எபேசியர் 4:22-24; 5:22-28) அவனுக்கிருந்த சில பிரச்னைகளின் அடிப்படைக் காரணத்தைக் காண உதவப்பட்டான். (1 கொரிந்தியர் 15:33-ஐ பார்க்கவும்) கடைசியில் அவன் தனது யோசனையை மாற்றிக்கொள்ள முடிந்தது. இது அவனுடைய மனைவி மாறுவதற்கும் உதவியது. இப்பொழுது அந்த இளம் குடும்பம் திருப்திக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறது—பைபிளுக்கு நன்றி.

கடைசியாக, எலினாவின் விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவள் அர்ஜன்டீனாவைச் சேர்ந்த ஓர் இளம் பெண், சோர்வுக்கு இறையானவள். அவள் உதவிக்கு ஒரு உளநூல் மருத்துவரிடம் சென்றபோது, அவள் தனது பிரச்னைகளுக்குத் தீர்வு காண முறைகெட்ட பாலுறவுகளில் ஈடுபடவேண்டும் என்று சொல்லப்பட்டாள். ஒழுக்கங்கெட்ட, ஆவியுலகத் தொடர்புள்ள, மிகுதியாக புகைபிடிக்கும் ஒரு வாழ்க்கையில் அமிழ்ந்தாள். இருமுறை கருச்சிதைவு செய்துகொண்டாள். ஆனால் யெகோவாவின் சாட்சிகள் எலினா மீது அக்கறை காண்பித்தனர். தனது வாழ்க்கையில் பைபிளைப் பொருத்திட உதவப்பட்டாள். மெதுமெதுவாக, பைபிளின் வார்த்தைகள் அவளுடைய கெட்ட பழக்கவழக்கங்களை விட்டுவிடச் செய்தது, மற்றும் சிருஷ்டிகராகிய யெகோவா தேவனையும், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் அறிய உதவியது. இப்பொழுது எலினா இவ்விருவரையும் குறித்து சொல்லுகிறாள்: “அவர்களிடமிருந்து பெற்றுவரும் எந்த ஒரு நன்மைக்கும் நான் பாத்திரமாயில்லை, இதினிமித்தமாகவே அவர்களுடைய அன்பையும் இரக்கத்தையும் குறித்து அதிகமாகப் பேச விரும்புகிறேன்.”

இந்த ஒருசில அனுபவங்கள் காண்பிப்பதுபோல், நம்முடைய வாழ்க்கையில் பைபிள் ஒரு பலமான நன்மைதரத்தக்க வல்லமையை செலுத்தக்கூடும். லூயிஸ், வேய்ன் மற்றும் எலினா ஆகியவர்கள் பைபிளோடு தொடர்பு கொள்ளும்படியும் அதில் சொல்லப்பட்டதை வாழ்க்கையில் எப்படி பொருத்துவது என்பதை காட்டும்படியும் யெகோவாவின் சாட்சிகளால் உதவப்பட்டனர்.

இன்று உலகில் முப்பது லட்சம் சாட்சிகளுக்கு மேல் இருக்கிறார்கள். இவர்களில் பலர் இதைப்போன்ற அனுபவத்தையுடையவர்களும் இவர்களெல்லாருமே பைபிள் தங்களுடைய வாழ்க்கையில் கடினமான மாற்றங்களையும் ஏற்படுத்த அனுமதித்தவர்கள். பலன் என்ன?

இந்த முப்பது லட்ச மக்களும் சேர்ந்து ஒரு சமுதாயத்தை உருவாக்குகின்றனர். மனிதவர்க்கத்தின் எதிர்காலத்தை இப்பொழுது பாதித்திடும் பெரும் பிரச்னைகள் இவர்கள் மத்தியில் தீர்க்கப்படுகிறது. இவர்கள் தேசத்தாலும் அல்லது கோத்திரத்தாலும் பிரிக்கப்பட்டில்லை. மாறாக, பைபிளின் உதவியால் இவர்கள் இனம் மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மேற்கொள்ள பைபிளால் உதவப்பட்டிருக்கின்றனர். ஒன்றாக சமாதானமாக வாழவும் கற்றுக்கொண்டனர். இதுதானே பைபிளின் மிகக் குறிப்பிடத்தக்க தீர்க்கதரிசனங்களின் அடிப்படை நிறைவேற்றமாகவும் இருக்கிறது.—ஏசாயா 11:6-9.

இப்படிப்பட்ட ஒரு மக்கள் தொகுதிதானே, பைபிள் உண்மையிலேயே கடவுளுடைய வார்த்தை என்பதற்கு பலமான அத்தாட்சியாக இருக்கிறது. இந்தக் கிறிஸ்தவர்களை நீங்கள் அறிந்து, அந்த அத்தாட்சியைக் காண உங்களை வரவேற்கிறோம். உங்களுக்கு உதவி செய்ய யெகோவாவின் சாட்சிகள் அதிக ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள். (w86 4/1)

[பக்கம் 5-ன் சிறு குறிப்பு]

பைபிள் வரலாற்றுமுறை ஆய்வுக்கு எந்தவித பலமான நிரூபணமும் கிடையாது

[பக்கம் 6-ன் சிறு குறிப்பு]

பைபிள் கடவுளுடைய வார்த்தை என்பதை நிரூபிப்பதற்கு அது நவீன விஞ்ஞானத்தையோ அல்லது தத்துவ ஞானத்தையோ சார்ந்ததாயில்லை

[பக்கம் 7-ன் சிறு குறிப்பு]

பைபிள் மக்களை மாற்றுகிறது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்