உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எந்தச் சோதனையையும் நம்மால் சமாளிக்க முடியும்!
    காவற்கோபுரம்—2005 | ஜூன் 15
    • கடவுளுடைய ஊழியர்கள் ‘பலவிதமான சோதனைகளில் அகப்படுவார்கள்’ என பைபிள் ஒப்புக்கொள்கிறது. (யாக்கோபு 1:2) “பலவிதமான” (கிரேக்கில் பிக்கிலோஸ்) என்ற வார்த்தையை கவனியுங்கள். பண்டைக்கால வழக்கின்படி, இந்த மூல வார்த்தையின் அர்த்தம், “பன்மடங்கு” அல்லது “பலவித நிறம்” என்பதாகும்; இது “சோதனைகளின் பல்வேறு வகைகளை” வலியுறுத்திக் காட்டுகிறது. ஆகவே, ‘பலவிதமான சோதனைகள்’ என்பது, அடையாள அர்த்தத்தில் சொன்னால், பல்வேறு நிறங்களில் வரும் சோதனைகளைக் குறிக்கிறது. என்றாலும், இவை ஒவ்வொன்றையும் சமாளிப்பதற்கு யெகோவா நமக்கு உதவுகிறார். நாம் ஏன் நிச்சயமாக இருக்கலாம்?

  • எந்தச் சோதனையையும் நம்மால் சமாளிக்க முடியும்!
    காவற்கோபுரம்—2005 | ஜூன் 15
    • ஆம், நமக்கு நேரிடும் சோதனையின் “நிறம்,” அதாவது தன்மை எப்படிப்பட்டதாக இருந்தாலும்சரி, அதற்கு ஈடுகட்டும் “நிறம்” அல்லது அதை சமாளிக்க உதவுவதற்கு கடவுளுடைய தகுதியற்ற தயவு ஏதாவது ஒரு விதத்தில் நமக்கு எப்போதும் இருக்கும். (யாக்கோபு 1:17) சோதனைகள் எந்த வகையாக இருந்தாலும்சரி அல்லது எவ்வளவு சவாலாக இருந்தாலும்சரி, யெகோவா தமது ஊழியர்களுக்குத் தரும் காலத்திற்கேற்ற தகுந்த உதவி ‘கடவுளுடைய பல்வகைப்பட்ட ஞானத்திற்கு’ ஓர் அத்தாட்சியே. (எபேசியர் 3:10, NW) நீங்கள் இதை ஒத்துக்கொள்வீர்கள், அல்லவா?

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்