உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • தம்பதியருக்கு ஞானமான அறிவுரை
    காவற்கோபுரம்—2005 | மார்ச் 1
    • 15, 16. கிறிஸ்தவ மனைவியின் எத்தகைய நடத்தை அவிசுவாசியான கணவருடைய நன்மதிப்பைப் பெற்றுத்தரும்?

      15 எத்தகைய நடத்தை கணவனுடைய நன்மதிப்பை பெற்றுத்தரும்? கிறிஸ்தவ பெண்கள் வளர்த்துக்கொள்ளும் நடத்தையே கணவருடைய நன்மதிப்பைப் பெற்றுத்தரும். பேதுரு கூறுகிறார்: “மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக் கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப் பெற்றது. இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள். அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மை செய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள்.”​—⁠1 பேதுரு 3:3-6.

  • தம்பதியருக்கு ஞானமான அறிவுரை
    காவற்கோபுரம்—2005 | மார்ச் 1
    • 17. கிறிஸ்தவ மனைவிமாருக்கு சாராள் எப்படி சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறாள்?

      17 சாராள் சிறந்த முன்மாதிரியாக குறிப்பிடப்படுகிறாள்; கணவன்மார்கள் விசுவாசிகளாக இருந்தாலும்சரி இல்லாவிட்டாலும்சரி, கிறிஸ்தவ மனைவிமார் பின்பற்றுவதற்குச் சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறாள். ஆபிரகாமை தனது தலைவராக சாராள் கருதினாள் என்பதில் சந்தேகமில்லை. அவள் தனது இருதயத்திலும்கூட, அவரை “ஆண்டவன்” என அழைத்தாள். (ஆதியாகமம் 18:12) அது அவளுடைய கண்ணியத்தைக் குறைத்துவிடவில்லை. உறுதியான விசுவாசத்துடன் ஆன்மீக ரீதியில் அவள் பலமிக்க பெண்மணியாக விளங்கினாள் என்பது தெளிவாகத் தெரிகிறது. சொல்லப்போனால், ‘மேகம் போன்ற திரளான சாட்சிகளில்’ அவளும் ஒருத்தியாக இருக்கிறாள்; விசுவாசத்தில் அந்த சாட்சிகள் வைத்திருக்கும் சிறந்த முன்மாதிரி ‘நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடுவதற்கு’ நம்மை உந்துவிக்க வேண்டும். (எபிரெயர் 11:11; 12:1) ஆகவே, ஒரு கிறிஸ்தவ மனைவி சாராளைப் போல இருப்பது எவ்விதத்திலும் மதிப்புக் குறைவானதல்ல.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்