உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யெகோவாவைப்போல் மற்றவர்கள்மீது அக்கறை காட்டுகிறீர்களா?
    காவற்கோபுரம்—2007 | ஜூன் 15
    • யெகோவா காட்டும் அக்கறை கிறிஸ்தவ சபையில் பளிச்சிடுகிறது. சபைக்குத் தலைவரான இயேசு கிறிஸ்து, தமது மந்தையைப் பராமரிக்கும் பொறுப்பை மூப்பர்களிடம் ஒப்படைத்திருக்கிறார். (யோவான் 21:15-17) கண்காணி என்பதற்கான கிரேக்க வார்த்தை, “கவனமாகப் பார்த்துக்கொள்” என்ற வினைச்சொல்லுடன் தொடர்புடையது. இதைச் செய்ய வேண்டிய விதத்தை வலியுறுத்துகையில், பேதுரு பின்வருமாறு மூப்பர்களை அறிவுறுத்துகிறார்: “உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்.”​—⁠1 பேதுரு 5:2, 3.

  • யெகோவாவைப்போல் மற்றவர்கள்மீது அக்கறை காட்டுகிறீர்களா?
    காவற்கோபுரம்—2007 | ஜூன் 15
    • என்றாலும், மேற்கூறப்பட்ட பேதுருவின் வார்த்தைகள், ஓர் ஆபத்தைக் குறித்தும், அதாவது, சபையை மூப்பர்கள் ‘இறுமாப்பாய் ஆளும்’ ஆபத்தைக் குறித்தும் எச்சரிக்கின்றன. ஒரு மூப்பர் தேவையற்ற சட்டங்களைப் போடுகிறாரென்றால், அவர் சபையை ‘இறுமாப்பாய் ஆளுகிறார்’ என்பதை ஒருவிதத்தில் காட்டுகிறார். மந்தையைக் காக்கும் கடமையுணர்வு மேலோங்கும்போது ஒரு மூப்பர் மிதமிஞ்சிப் போய்விடலாம். கிழக்கத்திய நாடுகளைச் சேர்ந்த யெகோவாவின் சாட்சிகளது சபை ஒன்றில், கூட்டங்களுக்கு வருவோர் ஒருவரையொருவர் எப்படி வரவேற்க வேண்டும், அதாவது யார் முதலில் பேச வேண்டும் என்று மூப்பர்கள் சட்டங்களை இயற்றினார்கள்; சபையில் சமாதானம் நிலவ இச்சட்டங்கள் உதவுமென்பதே அவர்களது நம்பிக்கை. நல்ல உள்ளெண்ணங்களோடுதான் சட்டங்களை அவர்கள் உருவாக்கினார்கள்; ஆனாலும், யெகோவா அக்கறை காட்டுகிறபடியே சபையார்மீது அந்த மூப்பர்கள் அக்கறை காட்டினார்களா? இதுசம்பந்தமாக, அப்போஸ்தலன் பவுலின் மனோபாவத்தை பின்வரும் வார்த்தைகளிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்: “உங்கள் விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளாயிராமல், உங்கள் சந்தோஷத்திற்குச் சகாயராயிருக்கிறோம்; விசுவாசத்தினாலே நிலைநிற்கிறீர்களே.” (2 கொரிந்தியர் 1:24) ஆம், யெகோவா தம் ஜனங்களை நம்புகிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்