-
யெகோவாவின் பரம சிங்காசனத்தின் சிறப்புத்தன்மைவெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
-
-
மின்னல்கள், இடிமுழக்கங்கள் மற்றும் சத்தங்கள்
12. அடுத்து யோவான் என்ன பார்க்கிறார் மற்றும் கேட்கிறார், மேலும் ‘மின்னல்கள், இடிமுழக்கங்கள், சத்தங்கள்’ மனதிற்கு எதைக் கொண்டு வருகின்றன?
12 அடுத்து யோவான் என்ன பார்க்கிறார் மற்றும் கேட்கிறார்? “அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன.” (வெளிப்படுத்துதல் 4:5அ) யெகோவாவின் பரலோக வல்லமையின் மற்ற பிரமிக்கத்தக்க வெளிப்படுத்தல்களை எந்தளவு நினைப்பூட்டுவதாயிருக்கிறது! உதாரணமாக, யெகோவா சீனாய் மலையின் மீது ‘இறங்கி வந்தபோது,’ மோசே அறிக்கை செய்தார்: “மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின் மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காள சத்தமும் உண்டாயிற்று; . . . எக்காள சத்தம் வரவர மிகவும் பலமாய்த் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார்.”—யாத்திராகமம் 19:16-19.
13. யெகோவாவின் சிங்காசனத்திலிருந்து வெளிவரும் மின்னல்களினால் என்ன படமாக காட்டப்படுகின்றன?
13 கர்த்தருடைய நாளின்போது, யெகோவா அவருடைய வல்லமையையும் பிரசன்னத்தையும் ஓர் உயர்வான வழியில் வெளிப்படும்படி செய்கிறார். இல்லை, சொல்லர்த்தமான மின்னல்கள் மூலம் அல்ல, ஏனென்றால் யோவான் அடையாளங்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். அப்படியென்றால், மின்னல்கள் எதைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன? மின்னலின் திடீரொளிகள் வெளிச்சம் கொடுக்க முடியும், ஆனால் அவை ஒருவரை சாகடிக்கவும் முடியும். ஆகவே, யெகோவாவின் சிங்காசனத்திலிருந்து வெளிவரும் இந்த மின்னல்கள் அவருடைய மக்களுக்கு தொடர்ந்து அளித்துள்ள அறிவொளியூட்டுதலின் திடீரொளிகளை இன்னும் அதிகம் குறிப்பிடும் விதமாக, அவருடைய உக்கிரமான நியாயத்தீர்ப்பு செய்திகளை நன்றாக படமாகக் காட்டுகின்றன.—ஒப்பிடவும்: சங்கீதம் 18:14; 144:5, 6; மத்தேயு 4:14-17; 24:27.
14. இன்று எவ்வாறு சத்தங்கள் முழக்கப்பட்டிருக்கின்றன?
14 சத்தங்களைப் பற்றி என்ன? சீனாய் மலைக்கு யெகோவாவின் இறங்கி வருதலின்போது, மோசேயுடன் ஒரு சத்தம் பேசியது. (யாத்திராகமம் 19:19) வெளிப்படுத்துதல் புத்தகத்தில் பரலோகத்திலிருந்து வந்த சத்தங்கள் கட்டளைகள் மற்றும் அறிவிப்புகளில் பலவற்றைக் கொடுத்தன. (வெளிப்படுத்துதல் 4:1; 10:4, 8; 11:12; 12:10; 14:13; 16:1, 17; 18:4; 19:5; 21:3) இன்றுங்கூட, யெகோவா தம்முடைய மக்களுக்கு, பைபிள் தீர்க்கதரிசனங்கள் மற்றும் நியமங்கள் பற்றிய அவர்களுடைய புரிந்துகொள்ளுதலை ஒளியூட்டுவதற்கு கட்டளைகள் மற்றும் அறிவிப்புகள் கொடுத்திருக்கிறார். அறிவொளியூட்டக்கூடிய தகவல்கள் சர்வதேச மாநாடுகளில் அடிக்கடி வெளிப்படுத்தப்பட்டு, அப்படிப்பட்ட பைபிள் சத்தியங்கள், அடுத்து உலகம் முழுவதும் அறிவிக்கப்பட்டுமிருக்கிறது. அப்போஸ்தலனாகிய பவுல் நற்செய்தியின் உண்மையுள்ள பிரசங்கிமாரைப்பற்றிச் சொன்னார்: “அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறதே.”—ரோமர் 10:18.
15. கர்த்தருடைய நாளின் இந்தக் காலப்பகுதியின்போது சிங்காசனத்திலிருந்து என்ன இடிமுழக்கங்கள் வெளிவந்திருக்கின்றன?
15 இடிமுழக்கம் பொதுவாக மின்னலைப் பின்தொடருகிறது. தாவீது சொல்லர்த்தமான இடிமுழக்கத்தை “யெகோவாவுடைய சத்தம்” என்பதாகக் குறிப்பிடுகிறார். (சங்கீதம் 29:3, 4, NW) யெகோவா தாவீதுக்காக அவருடைய எதிரிகளுடன் யுத்தம் செய்தபோது, அவரிடமிருந்து இடிமுழக்கம் வந்ததாக சொல்கிறது. (2 சாமுவேல் 22:14; சங்கீதம் 18:13) எலிகூ யோபுவிடம் யெகோவா “நாம் கிரகிக்கக்கூடாத பெரிய காரியங்களை” செய்கிறபடியால் அவர் சத்தம் இடிமுழக்கத்தைப் போன்றிருக்கிறது என்பதாக சொன்னார். (யோபு 37:4, 5) கர்த்தருடைய நாளின் இந்தக் காலப்பகுதியிலே, யெகோவா அவருடைய எதிரிகளுக்கு எதிராக நடப்பிக்கப் போகிற பெரிய செயல்களைப் பற்றிய எச்சரிக்கையை ‘இடிமுழக்கம் செய்திருக்கிறார்,’ இந்த அடையாள அர்த்தமான இடிமுழக்கங்கள் பூமி முழுவதும் எதிரொலிக்கப்பட்டும் மீண்டும் எதிரொலிக்கப்பட்டும் இருக்கின்றன. நீங்கள் இந்த இடிமுழக்க அறிவிப்புகளுக்கு கவனம் செலுத்தி, அவற்றினுடைய சத்தத்தோடு உங்களுடையதையும் சேர்த்துக்கொள்வதில் உங்களுடைய நாவை ஞானமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்களென்றால் சந்தோஷமுள்ளவர்கள்!—ஏசாயா 50:4, 5; 61:1, 2.
அக்கினி தீபங்களும் கண்ணாடிக் கடலும்
16. ஏழு ‘அக்கினி தீபங்களால்’ குறிப்பிடப்பட்டிருப்பது என்ன?
16 மேலுமாக யோவான் என்ன பார்க்கிறார்? இது: “தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்து கொண்டிருந்தன. அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக்கொப்பான கண்ணாடிக் கடலிருந்தது.” (வெளிப்படுத்துதல் 4:5ஆ, 6அ) யோவான்தானேயும் ஏழு தீபங்களின் உட்கருத்தை நமக்குச் சொல்கிறார்: ‘தேவனுடைய ஏழு ஆவிகள்.’ எண் 7 ஒரு தெய்வீக முழுமைத்தன்மையைக் குறிக்கிறது, எனவே, ஏழு தீபங்கள் பரிசுத்த ஆவியின் அறிவொளியூட்டும் சக்தியின் நிறைவானத்தன்மையைப் பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும். இன்று, யோவான் வகுப்பார் இந்த அறிவொளியூட்டுதலுடன், ஆவிக்குரிய பசியுள்ள பூமியின் மக்களுக்கு இதைக் கடத்தும் உத்தரவாதத்துடன் பொறுப்பளிக்கப்பட்டிருப்பதற்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள்! இந்த ஒளியைப் பிரகாசிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் காவற்கோபுர பத்திரிகை, சுமார் 150 மொழிகளில் கோடிக்கணக்கான பிரதிகள் வெளிவருவது குறித்து நாம் எவ்வளவு மகிழ்ச்சியுள்ளவர்களாக இருக்கிறோம்!—சங்கீதம் 43:3.
-