-
கடவுள் யார்?இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
-
-
2. யெகோவாவைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?
மனிதர்கள் எவ்வளவோ கடவுள்களை வணங்கினாலும், யெகோவா மட்டும்தான் ஒரே உண்மையான கடவுள் என்று பைபிள் சொல்கிறது. ஏன்? அதற்கு சில முக்கியமான காரணங்களைப் பார்க்கலாம். யெகோவா மட்டும்தான் “இந்தப் பூமி முழுவதையும் ஆளுகிற உன்னதமான கடவுள்.” அதாவது, இந்தப் பிரபஞ்சத்திலேயே அதிக அதிகாரம் அவருக்கு மட்டும்தான் இருக்கிறது. (சங்கீதம் 83:18-ஐ வாசியுங்கள்.) அவர்தான் சர்வவல்லமையுள்ள கடவுள். அதாவது, அவர் என்ன செய்ய நினைத்தாலும் அதைச் செய்ய அவருக்கு சக்தி இருக்கிறது. அவர்தான் ‘எல்லாவற்றையும் படைத்தார்.’ அதாவது, இந்தப் பிரபஞ்சத்தையும் இந்தப் பூமியில் உள்ள எல்லா உயிர்களையும் படைத்தார். (வெளிப்படுத்துதல் 4:8, 11) அதோடு, யெகோவாவுக்கு மட்டும்தான் ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை.—சங்கீதம் 90:2.
-
-
கடவுள் விரும்பும் வணக்கம்இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
-
-
யெகோவாதான் நம்மைப் படைத்தவர் என்பதால் நாம் அவருக்கு முழு பக்தியைக் கொடுக்க வேண்டும். (வெளிப்படுத்துதல் 4:11) அதாவது, அவர்மேல் அன்புவைத்து அவரை மட்டும் வணங்க வேண்டும். சிலை, படம், சின்னம் போன்ற எதையும் பயன்படுத்தக் கூடாது.—ஏசாயா 42:8-ஐ வாசியுங்கள்.
நம் வணக்கம் ‘பரிசுத்தமாகவும் கடவுளுக்குப் பிரியமானதாகவும்’ இருக்க வேண்டும். (ரோமர் 12:1) அப்படியென்றால், அவர் சொல்கிறபடி நாம் வாழ வேண்டும். உதாரணமாக, யெகோவாவை நேசிப்பவர்கள் திருமணம் சம்பந்தமாக அவர் தந்திருக்கிற கட்டளைகளை மதித்து நடக்கிறார்கள். அதோடு புகையிலை, பாக்கு, போதைப்பொருள், குடிவெறி போன்ற மோசமான பழக்கங்களைத் தவிர்க்கிறார்கள்.a
-