-
நியாயாசனத்திற்கு முன்பு நீங்கள் எவ்வாறு நிற்பீர்கள்?காவற்கோபுரம்—1995 | அக்டோபர் 15
-
-
நியாயாசனத்திற்கு முன்பு நீங்கள் எவ்வாறு நிற்பீர்கள்?
“அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார்.”—மத்தேயு 25:31.
1-3. நீதி சம்பந்தமாக நல்நம்பிக்கை கொண்டிருப்பதற்கு நாம் என்ன காரணத்தைக் கொண்டிருக்கிறோம்?
‘குற்றவாளியா அல்லது நிரபராதியா?’ ஏதாவது ஒரு நீதிமன்ற வழக்கைப் பற்றிய அறிக்கைகளை கேள்விப்படுகையில் அநேகர் இதைத் தெரிந்துகொள்ள விரும்புகின்றனர். நீதிபதிகளும் விசாரணைக் குழு அங்கத்தினர்களும் நேர்மையாக இருக்க முயற்சி செய்யலாம், ஆனால் நீதி பொதுவாக வெற்றியடைகிறதா? நீதிமன்ற நடவடிக்கைகளில் அநீதியைப் பற்றியும் நியாயமற்றத் தன்மையைப் பற்றியும் நீங்கள் கேள்விப்பட்டதில்லையா? லூக்கா 18:1-8-ல் உள்ள இயேசுவின் உவமையில் நாம் காண்கிறபடி அப்படிப்பட்ட அநீதி நன்றாக தெரிந்த விஷயமே.
2 மனித நீதி சம்பந்தமாக உங்களுடைய அனுபவம் என்னவாக இருந்தாலும், இயேசு கூறிய முடிவை கவனியுங்கள்: “அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் . . . அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.”
3 ஆம், யெகோவா தம்முடைய ஊழியர்களுக்கு இறுதியில் நீதி கிடைக்கும்படி பார்த்துக்கொள்வார். விசேஷமாக இயேசுவும்கூட இப்போது இதில் உட்பட்டிருக்கிறார், ஏனென்றால் தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறையின் “கடைசி நாட்களில்” நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பூமியிலிருந்து துன்மார்க்கத்தை முற்றிலுமாக நீக்குவதற்கு யெகோவா விரைவில் தம்முடைய வல்லமைவாய்ந்த குமாரனை உபயோகிப்பார். (2 தீமோத்தேயு 3:1; 2 தெசலோனிக்கேயர் 1:7, 8; வெளிப்படுத்துதல் 19:11-16) இயேசு கொடுத்த கடைசி உவமைகள் ஒன்றிலிருந்து நாம் அவருடைய பங்கைக் குறித்து உட்பார்வையைப் பெற்றுக்கொள்ளலாம், அது செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள் பற்றிய உவமை என்று பெரும்பாலும் அழைக்கப்படுகிறது.
4. செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள் பற்றிய உவமையைக் குறித்த காலத்தை நாம் எவ்வாறு புரிந்துகொண்டு இருந்திருக்கிறோம், ஆனால் இப்போது நாம் ஏன் இந்த உவமைக்கு கவனம் செலுத்துவோம்? (நீதிமொழிகள் 4:18)
4 இயேசு ராஜாவாக 1914-ல் வீற்றிருப்பதையும் அது முதற்கொண்டு நியாயத்தீர்ப்பு செய்வதையும் அந்த உவமை விளக்கிக்காட்டியது என்று நாம் நீண்ட காலமாக புரிந்துகொண்டிருந்தோம்—செம்மறியாடுகளைப் போல் நிரூபிக்கும் ஜனங்களுக்கு நித்திய ஜீவன், வெள்ளாடுகளுக்கு நித்திய மரணம். ஆனால் அந்த உவமையை மறுபடியும் சிந்தித்துப் பார்ப்பது, அதன் காலப்பகுதியையும் அது எதை தெளிவாக விளக்கிக்காட்டுகிறது என்பதையும் குறித்து திருத்தப்பட்ட சரியான புரிந்துகொள்ளுதலை சுட்டிக்காண்பிக்கிறது. இந்த தெளிவான விளக்கம் நம்முடைய பிரசங்க வேலையின் முக்கியத்துவத்தையும் ஜனங்களுடைய பிரதிபலிப்பின் முக்கியத்துவத்தையும் மீண்டும் வலுப்படுத்துகிறது. இந்த உவமையின் ஆழமான தன்மையை புரிந்துகொள்வதற்கான அடிப்படையைக் காண்பதற்கு, யெகோவாவும் இயேசுவும் ராஜாக்களாகவும் நியாயாதிபதிகளாகவும் இருப்பதைக் குறித்து பைபிள் என்ன காண்பிக்கிறது என்பதை நாம் சிந்திப்போம்.
யெகோவா உன்னத நியாயாதிபதியாக
5, 6. யெகோவாவை ராஜாவாகவும் நியாயாதிபதியாகவும் நோக்குவது ஏன் பொருத்தமானது?
5 யெகோவா எல்லா சிருஷ்டிப்புகள் மீதும் வல்லமை செலுத்தி இந்த பிரபஞ்சத்தை அரசாளுகிறார். ஆரம்பமும் முடிவும் இல்லாத அவரே ‘நித்தியத்தின் ராஜா.’ (1 தீமோத்தேயு 1:17; சங்கீதம் 90:2, 4; வெளிப்படுத்துதல் 15:3) நியாயங்களை அல்லது சட்டங்களை ஏற்படுத்தி அவற்றை செயல்படுத்துவதற்கு அவர் அதிகாரம் உடையவராயிருக்கிறார். ஆனால் அவருடைய அதிகாரம் நியாயாதிபதியாய் இருப்பதை உட்படுத்துகிறது. ஏசாயா 33:22 சொல்கிறது: “கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி, கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர், கர்த்தர் நம்முடைய ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார்.”
6 யெகோவா வழக்குகளையும் பிரச்சினைகளையும் நியாயந்தீர்ப்பவர் என்று நீண்டகாலமாக கடவுளுடைய ஊழியர்கள் மதித்துணர்ந்து இருக்கின்றனர். உதாரணமாக, சோதோம் கொமோரா பட்டணங்களின் துன்மார்க்கத்தைப் பற்றிய அத்தாட்சியை “சர்வலோக நியாயாதிபதி” மதிப்பிட்ட பிறகு, அவர் அதன் குடிமக்கள் அழிவுக்கு தகுதியுள்ளவர்கள் என்று நியாயந்தீர்த்து அந்த நீதியான நியாயத்தீர்ப்பை செயல்படுத்தவும் செய்தார். (ஆதியாகமம் 18:20-33; யோபு 34:10-12) யெகோவா எப்போதும் தம்முடைய நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றக்கூடிய நீதியான நியாயாதிபதி என்பதை அறிந்துகொள்ள அது நிச்சயமாக நமக்கு திரும்பவும் உறுதி செய்ய வேண்டும்!
7. இஸ்ரவேலரைக் கையாண்ட விதத்தில் யெகோவா எவ்வாறு நியாயாதிபதியாக செயல்பட்டார்?
7 பண்டைய இஸ்ரவேலில் யெகோவா சில சமயங்களில் நியாயத்தீர்ப்பை நேரடியாக வழங்கினார். ஒரு பரிபூரண நியாயாதிபதி விஷயங்களை தீர்மானித்துக் கொண்டிருந்தார் என்பதை அப்போது அறிந்து அதனால் நீங்கள் ஆறுதல் அடைந்திருக்க மாட்டீர்களா? (லேவியராகமம் 24:10-16; எண்ணாகமம் 15:32-36; 27:1-11) கடவுள் ‘நியாயங்களையும்’ கூட கொடுத்தார், அவை நியாயத்தீர்ப்பு செய்வதற்கு தராதரங்களாக இருப்பதற்கு முழுமையாக நன்மையானவையாயிருந்தன. (லேவியராகமம் 25:18, 19; நெகேமியா 9:13; சங்கீதம் 19:9, 10; 119:7, 75, 164; 147:19, 20) அவர் ‘சர்வலோக நியாயாதிபதியாய்’ இருக்கிறார், ஆகையால் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.—எபிரெயர் 12:23.
8. தானியேல் என்ன பொருத்தமான தரிசனத்தைக் கொண்டிருந்தார்?
8 இந்த விஷயத்தைக் குறித்து நாம் ‘கண்கண்ட’ அத்தாட்சியைக் கொண்டிருக்கிறோம். அரசாங்கங்கள் அல்லது பேரரசுகளைப் பிரதிநிதித்துவம் செய்த மூர்க்க மிருகங்களைப் பற்றி தானியேல் தீர்க்கதரிசிக்கு ஒரு தரிசனம் கொடுக்கப்பட்டது. (தானியேல் 7:1-8, 17) அவர் கூடுதலாக சொன்னார்: “நான் பார்த்துக்கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்; அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப் போல இருந்தது.” (தானியேல் 7:9) தானியேல் சிங்காசனங்களைப் பார்த்தார், ‘நீண்ட ஆயுசுள்ளவர் [யெகோவா] வீற்றிருந்தார்’ என்பதை கவனியுங்கள். ‘கடவுள் ராஜாவாக ஆகிறதை இங்கே தானியேல் பார்த்துக் கொண்டிருந்தாரா?’ என்று நீங்கள் உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.
9. சிங்காசனத்தின் மீது ‘வீற்றிருப்பது’ என்பதன் ஒரு அர்த்தமென்ன? உதாரணங்களைக் கொடுங்கள்.
9 யாரோ ஒருவர் சிங்காசனத்தின் மேல் ‘வீற்றிருந்தார்’ என்று நாம் வாசிக்கும்போது, அவர் ராஜாவாக ஆகப்போகிறதைக் குறித்து நாம் ஒருவேளை யோசிக்கலாம், ஏனென்றால் பைபிள் சில சமயங்களில் அப்படிப்பட்ட மொழிநடையை உபயோகிக்கிறது. உதாரணமாக: “ [சிம்ரி] ராஜாவாகி, சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்தபோது, அவன் . . .” (1 இராஜாக்கள் 16:11; 2 இராஜாக்கள் 10:30; 15:12; எரேமியா 33:17) ஒரு மேசியானிய தீர்க்கதரிசனம் சொன்னது: ‘அவர் . . . தம்முடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார்.’ எனவே, ‘சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பது’ என்பது ராஜாவாக ஆகிறதை அர்த்தப்படுத்தக்கூடும். (சகரியா 6:12, 13) யெகோவா ஒரு சிங்காசனத்தின் மீது உட்கார்ந்திருக்கிற ராஜாவாக விவரிக்கப்பட்டிருக்கிறார். (1 இராஜாக்கள் 22:19; ஏசாயா 6:1; வெளிப்படுத்துதல் 4:1-3) அவர் “நித்தியத்தின் ராஜா.” இருப்பினும், உன்னத அரசாதிகாரத்தின் ஒரு புதிய அம்சத்தில் செயலாற்ற ஆரம்பித்தபோது, அவர் ராஜாவாக ஆகியிருக்கிறார் என்று சொல்லக்கூடும், அவருடைய சிங்காசனத்தில் புதிதாக மறுபடியும் வீற்றிருப்பது போல என்று சொல்லப்படலாம்.—1 நாளாகமம் 16:1, 31; ஏசாயா 52:7; வெளிப்படுத்துதல் 11:15-17; 15:3; 19:1, 2, 6.
10. இஸ்ரவேல ராஜாக்களின் ஒரு முக்கியமான வேலை என்னவாக இருந்தது? விளக்குங்கள்.
10 ஆனால் இங்கே ஒரு முக்கியமான குறிப்பு: பண்டையகால ராஜாக்களின் ஒரு முக்கியமான வேலை, வழக்குகளைக் கேட்டு நியாயத்தீர்ப்புகளை வழங்குவதாகும். (நீதிமொழிகள் 29:14) இரண்டு பெண்கள் ஒரே குழந்தையை வைத்துக்கொண்டு தங்களுடையது என உரிமைபாராட்டிக்கொண்டபோது, சாலொமோன் வழங்கிய ஞானமான நியாயத்தீர்ப்பை நினைவுபடுத்திப் பாருங்கள். (1 இராஜாக்கள் 3:16-28; 2 நாளாகமம் 9:8) “அவர் இருந்து நியாயம் தீர்க்கிறதற்கு நியாயாசனம் போட்டிருக்கும்” இடம் அவருடைய அரசாங்க கட்டடங்களில் ஒன்றாக இருந்தது, அது ‘நியாயவிசாரணை மண்டபம்’ என்றும்கூட அழைக்கப்பட்டது. (1 இராஜாக்கள் 7:7) “சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள்” வைக்கப்பட்டிருந்த இடமாக எருசலேம் விவரிக்கப்பட்டிருந்தது. (சங்கீதம் 122:5) ‘நியாயாசனத்தில் வீற்றிருத்தல்’ என்பது தீர்ப்புக்குரிய அதிகாரத்தை பிரயோகிப்பதையும்கூட அர்த்தப்படுத்தும் என்பது தெளிவாயிருக்கிறது.—யாத்திராகமம் 18:13; நீதிமொழிகள் 20:8.
11, 12. (அ) யெகோவா வீற்றிருக்கிறார் என்று தானியேல் 7-ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதன் உட்பொருள் என்னவாக இருந்தது? (ஆ) யெகோவா நியாயந்தீர்ப்பதற்கு வீற்றிருக்கிறார் என்பதை மற்ற வசனங்கள் எவ்வாறு உறுதிசெய்கின்றன?
11 தானியேல் ‘நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருப்பதை’ பார்த்த காட்சிக்கு நாம் இப்போது செல்வோம். தானியேல் 7:10 கூடுதலாக சொல்கிறது: “நியாயசங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது.” ஆம், உலக ஆதிக்கத்தைக் குறித்து நியாயத்தீர்ப்பு வழங்குவதற்கும் மனுஷகுமாரன் ஆட்சிசெய்வதற்கு தகுதியுள்ளவர் என்று நியாயந்தீர்ப்பதற்கும் நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார். (தானியேல் 7:13, 14) பின்பு ‘நீண்ட ஆயுசுள்ளவர் வந்தார், நியாயவிசாரிப்பு உன்னதமானவருடைய பரிசுத்தவான்களுக்குக் கொடுக்கப்பட்டது,’ என்று நாம் வாசிக்கிறோம். அந்த பரிசுத்தவான்கள் மனுஷகுமாரனோடு ஆட்சி செய்வதற்கு தகுதியானவர்களாக நியாயந்தீர்க்கப்பட்டவர்கள். (தானியேல் 7:21) இறுதியில் கடைசி உலக வல்லரசின் மீது எதிரிடையான நியாயத்தீர்ப்பு வழங்குவதற்கு ‘நியாயசங்கம் உட்கார்ந்தது.’—தானியேல் 7:26.a
12 அதன் காரணமாக, கடவுள் ‘சிங்காசனத்தில் வீற்றிருப்பதை’ தானியேல் பார்த்தது, நியாயத்தீர்ப்பு வழங்குவதற்காக அவர் வருவதை அர்த்தப்படுத்தியது. அதற்கு முன்பு தாவீது பாடினார்: “[“யெகோவாவாகிய,” NW] நீர் என் நியாயத்தையும் என் வழக்கையும் தீர்த்து, நீதியுள்ள நியாயாதிபதியாய்ச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறீர்.” (சங்கீதம் 9:4, 7) யோவேல் எழுதினார்: “ஜாதிகள் எழும்பி யோசபாத்தின் பள்ளத்தாக்குக்கு வருவார்களாக; சுற்றிலுமுள்ள ஜாதிகளை நியாயந்தீர்க்க அங்கே நான் [யெகோவா] வீற்றிருப்பேன்.” (யோவேல் 3:12; ஒப்பிடுக: ஏசாயா 16:5.) இயேசுவும் பவுலும் நியாயம் விசாரிக்கப்படும் சூழ்நிலையில் இருந்தனர், அதில் ஒரு மனிதன் வழக்கைக் கேட்டு தீர்ப்பை வழங்குவதற்கு உட்கார்ந்தார்.b—யோவான் 19:12-16; அப்போஸ்தலர் 23:3; 25:6.
இயேசுவின் ஸ்தானம்
13, 14. (அ) இயேசு ராஜாவாக ஆவார் என்பதைக் குறித்து கடவுளுடைய ஜனங்களுக்கு என்ன உறுதி இருந்தது? (ஆ) இயேசு எப்போது தம்முடைய சிங்காசனத்தில் வீற்றிருந்தார், பொ.ச. 33-லிருந்து அவர் என்ன கருத்தில் ஆட்சிசெய்து வந்தார்?
13 யெகோவா ராஜாவாகவும் நியாயாதிபதியாகவும் இருக்கிறார். இயேசுவைப் பற்றியென்ன? அவருடைய பிறப்பை அறிவித்த தேவதூதன் சொன்னார்: “கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். . . . அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது.” (லூக்கா 1:32, 33) இயேசு தாவீதிய ராஜரீகத்துவத்திற்கு நிரந்தரமான வாரிசாக இருப்பார். (2 சாமுவேல் 7:12-16) அவர் பரலோகத்திலிருந்து ஆட்சி செய்வார், ஏனென்றால் தாவீது சொன்னார்: “யெகோவா என் ஆண்டவரை [இயேசுவை] நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார். யெகோவா சீயோனிலிருந்து உமது வல்லமையின் செங்கோலை அனுப்புவார்; நீர் உம்முடைய சத்துருக்களின் நடுவே ஆளுகைசெய்யும்.”—சங்கீதம் 110:1-4, NW.
14 அது எப்போது இருக்கும்? இயேசு ஒரு மனிதனாக இருந்தபோது ராஜாவாக ஆட்சி செய்யவில்லை. (யோவான் 18:33-37) பொ.ச. 33-ல் அவர் மரித்தார், உயிர்த்தெழுப்பப்பட்டார், பரலோகத்திற்கு ஏறிச்சென்றார். எபிரெயர் 10:12 சொல்கிறது: “இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார்.” இயேசு என்ன அதிகாரத்தை உடையவராய் இருந்தார்? “எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும் . . . மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக அவரை உன்னதங்களில் [கடவுள்] தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து, . . . சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.” (எபேசியர் 1:20, 21, 23) ஏனென்றால் இயேசு அப்போது கிறிஸ்தவர்கள் மீது ராஜரீக அதிகாரத்தைக் கொண்டிருந்ததால், யெகோவா ‘இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினார்’ என்று பவுலால் எழுத முடிந்தது.—கொலோசெயர் 1:13; 3:1.
15, 16. (அ) பொ.ச. 33-ல் இயேசு கடவுளுடைய ராஜ்யத்தின் ராஜாவாக ஆகவில்லை என்று நாம் ஏன் சொல்கிறோம்? (ஆ) கடவுளுடைய ராஜ்யத்தில் இயேசு எப்போதிருந்து ஆட்சிசெய்ய ஆரம்பித்தார்?
15 இருப்பினும், அந்த சமயத்தில் இயேசு தேசங்களின் மீது ராஜாவாகவும் நியாயாதிபதியாகவும் செயல்படவில்லை. அவர் கடவுளுக்கு அடுத்ததாக உட்கார்ந்திருந்தார், கடவுளுடைய ராஜ்யத்தின் ராஜாவாக செயல்படுவதற்கான காலத்துக்காக காத்துக்கொண்டிருந்தார். பவுல் அவரைக் குறித்து எழுதினார்: “நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப்போடும் வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா?”—எபிரெயர் 1:13.
16 இயேசு காத்திருந்த காலப்பகுதி 1914-ல், அவர் காணக்கூடாத பரலோகங்களில் கடவுளுடைய ராஜ்யத்தின் ராஜாவாக ஆனபோது முடிவடைந்தது என்பதைப் பற்றி யெகோவாவின் சாட்சிகள் மிகுதியான அத்தாட்சியை பிரசுரித்திருக்கின்றனர். வெளிப்படுத்துதல் 11:15, 18 சொல்கிறது: “உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார்.” “ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது.” ஆம், முதல் உலக யுத்தத்தின்போது தேசங்கள் ஒன்றன் மீது ஒன்று கோபத்தை வெளிக்காட்டின. (லூக்கா 21:24) 1914 முதற்கொண்டு நாம் பார்த்திருக்கும் போர்கள், பூகம்பங்கள், நோய்கள், உணவு பற்றாக்குறைகள், இதைப் போன்ற மற்ற காரியங்கள், இயேசு இப்போது கடவுளுடைய ராஜ்யத்தில் ஆட்சிசெய்து கொண்டிருக்கிறார் என்பதையும் உலகின் கடைசி முடிவு சமீபத்தில் இருக்கிறது என்பதையும் உறுதிப்படுத்துகின்றன.—மத்தேயு 24:3-14, NW.
17. என்ன முக்கியமான குறிப்புகளை நாம் இதுவரை நிலைநாட்டியிருக்கிறோம்?
17 ஒரு சுருக்கமான மறுபார்வை பின்வருமாறு: கடவுள் சிங்காசனத்தில் ராஜாவாய் வீற்றிருப்பதாக சொல்லப்படலாம், ஆனால் மற்றொரு கருத்தில் அவர் தம்முடைய சிங்காசனத்தில் நியாயந்தீர்ப்பதற்கு வீற்றிருப்பதாக சொல்லப்படலாம். பொ.ச. 33-ல், கடவுளுடைய வலதுபாரிசத்தில் இயேசு வீற்றிருந்தார், அவர் இப்போது ராஜ்யத்தின் ராஜாவாக இருக்கிறார். ஆனால் இப்போது ராஜாவாக ஆட்சிசெய்து கொண்டிருக்கும் இயேசு நியாயாதிபதியாகவும்கூட சேவித்துக் கொண்டிருக்கிறாரா? இது ஏன் நமக்கு விசேஷமாய் இந்தக் காலத்தில் அக்கறைக்குரியதாய் இருக்க வேண்டும்?
18. இயேசுவும் ஒரு நியாயாதிபதியாக இருப்பார் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது?
18 நியாயாதிபதிகளை நியமிப்பதற்கு உரிமையுடையவராயிருக்கும் யெகோவா, தம்முடைய தராதரங்களை பூர்த்திசெய்த இயேசுவை ஒரு நியாயாதிபதியாக தேர்ந்தெடுத்தார். ஜனங்கள் ஆவிக்குரிய பிரகாரமாய் முழு ஊக்கத்துடன் ஆவதைக் குறித்து பேசிக்கொண்டிருக்கையில் இயேசு இதைக் காண்பித்தார்: “பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.” (யோவான் 5:22) இருப்பினும், இயேசுவின் நியாயத்தீர்ப்பு வழங்கும் பங்கு அந்த வகையான நியாயத்தீர்ப்புக்கும் அப்பால் செல்கிறது, ஏனென்றால் அவர் உயிரோடிருப்பவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் நியாயாதிபதியாய் இருக்கிறார். (அப்போஸ்தலர் 10:42; 2 தீமோத்தேயு 4:1) பவுல் ஒரு சமயம் இவ்வாறு அறிவித்தார்: “கடவுள் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு [இயேசு], பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார்.”—அப்போஸ்தலர் 17:31; சங்கீதம் 72:2-7.
19. இயேசு ஒரு நியாயாதிபதியாக வீற்றிருக்கிறார் என்று சொல்வது ஏன் சரியானது?
19 நியாயாதிபதி என்ற திட்டவட்டமான பங்கில் இயேசு ஒரு மகிமையான சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார் என்று நாம் முடிவுசெய்வது நியாயமானதா? ஆம். இயேசு அப்போஸ்தலரிடம் கூறினார்: “மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள்.” (நேரெழுத்துக்கள் எங்களுடையவை) (மத்தேயு 19:28) இயேசு இப்போது அந்த ராஜ்யத்துக்கு ராஜாவாக இருக்கிறபோதிலும், அவர் செய்யப்போகும் கூடுதலான வேலை மத்தேயு 19:28-ல் குறிப்பிடப்பட்டிருக்கிறது, அது அவர் ஆயிரவருட ஆட்சியின்போது ஒரு சிங்காசனத்தில் வீற்றிருந்து நியாயந்தீர்ப்பதை உட்படுத்தும். அந்த சமயத்தில் அவர் நீதிமான்கள் மற்றும் அநீதிமான்கள் உட்பட எல்லா மனிதவர்க்கத்தையும் நியாயந்தீர்ப்பார். (அப்போஸ்தலர் 24:15) நம்முடைய காலத்துக்கும் நம்முடைய வாழ்க்கைக்கும் சம்பந்தப்பட்ட இயேசுவின் உவமைகளில் ஒன்றுக்கு நாம் நம்முடைய கவனத்தைத் திருப்புகையில் இதை மனதில் வைப்பது உதவியாயிருக்கிறது.
உவமை சொல்வது என்ன?
20, 21. நம்முடைய காலத்துக்கு சம்பந்தப்பட்ட என்ன காரியத்தை இயேசுவின் அப்போஸ்தலர் கேட்டனர், அது என்ன கேள்விக்கு வழிநடத்தியது?
20 இயேசு மரிப்பதற்கு சற்று முன்பு, அவருடைய அப்போஸ்தலர் அவரைக் கேட்டனர்: “இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன?” (மத்தேயு 24:3) ‘முடிவு வருவதற்கு’ முன்பு பூமியின் மீது குறிப்பிடத்தக்க சம்பவங்கள் நடைபெறும் என்று இயேசு முன்னறிவித்தார். அந்த முடிவுக்கு சிறிது காலத்துக்கு முன்பு, “மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை” தேசங்கள் காண்பார்கள்.—மத்தேயு 24:14, 29, 30.
21 மனுஷகுமாரன் தம்முடைய வல்லமையில் வரும்போது அந்த தேசங்களில் இருக்கும் ஜனங்கள் எவ்வாறு இருப்பர்? செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள் பற்றிய உவமையிலிருந்து நாம் அதைக் கண்டுபிடிக்கலாம், அது பின்வரும் வார்த்தைகளோடு ஆரம்பிக்கிறது: “மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பார். அப்பொழுது சகல ஜனங்களும் [“எல்லா தேசத்தாரும்,” NW] அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள்.”—மத்தேயு 25:31, 32.
22, 23. செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளைப் பற்றிய உவமை அதன் நிறைவேற்றத்தை 1914-ல் ஆரம்பிக்கவில்லை என்பதை என்ன குறிப்புகள் சுட்டிக்காண்பிக்கின்றன?
22 நாம் வெகுகாலமாக புரிந்துகொண்டிருந்தபடி, 1914-ல் இயேசு ராஜ்ய வல்லமையில் வீற்றிருந்தபோது இந்த உவமை பொருந்துகிறதா? மத்தேயு 25:34 அவரை ராஜாவாக பேசுவது உண்மைதான், ஆகையால் இயேசு 1914 முதற்கொண்டு ராஜாவாக ஆன சமயத்திலிருந்து அந்த உவமை நியாயமாகவே பொருந்துகிறது. ஆனால் அதற்குப் பிறகு விரைவில் அவர் என்ன நியாயத்தீர்ப்பை செய்தார்? அது ‘எல்லா தேசத்தாரையும்’ நியாயந்தீர்ப்பது அல்ல. மாறாக, ‘தேவனுடைய வீட்டை’ உண்டுபண்ணுகிறோம் என்று உரிமைபாராட்டிக் கொண்டவர்கள் மீது அவர் தம் கவனத்தைத் திருப்பினார். (1 பேதுரு 4:17) மல்கியா 3:1-3 வரை உள்ள வசனங்களுக்கு இசைவாக, இயேசு யெகோவாவின் தூதனாக, பூமியில் மீந்திருக்கும் அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களை நியாயத்தீர்ப்பு செய்வதற்கென்று மேற்பார்வை செய்தார். ‘தேவனுடைய வீட்டார்’ என்று பொய்யாக உரிமைபாராட்டிக்கொண்ட கிறிஸ்தவமண்டலத்தின் மீதும்கூட தீர்ப்புக்குரிய தண்டனையை நிறைவேற்றுவதற்கான காலமாக இருந்தது.c (வெளிப்படுத்துதல் 17:1, 2; 18:4-8) இருந்தபோதிலும், அந்த சமயத்திலோ அல்லது 1914 முதற்கொண்டோ எல்லா தேசத்து ஜனங்களையும் இறுதியில் வெள்ளாடுகளாகவோ செம்மறியாடுகளாகவோ இயேசு நியாயந்தீர்க்க வீற்றிருந்தார் என்று எதுவும் குறிப்பிட்டுக் காட்டுவதில்லை.
23 உவமையில் உள்ள இயேசுவின் வேலையை ஆராய்ந்து பார்த்தோமென்றால், எல்லா தேசத்தாரையும் அவர் இறுதியில் நியாயந்தீர்ப்பதை நாம் காண்கிறோம். அப்படிப்பட்ட நியாயத்தீர்ப்பு கடந்த பத்தாண்டுகளின்போது மரித்துக்கொண்டிருந்த ஒவ்வொரு நபரும் நித்திய மரணத்துக்கோ நித்திய ஜீவனுக்கோ தகுதியானவர்களாக நியாயந்தீர்க்கப்பட்டனர் என்பதுபோல, அநேக வருடங்கள் அடங்கிய நீண்ட காலப்பகுதியாக தொடர்ந்து இருக்காது என்பதை அந்த உவமை காண்பிப்பதில்லை. சமீப பத்தாண்டுகளில் மரித்துப்போன பெரும்பாலானவர்கள் மனிதவர்க்கத்தின் பொதுவான பிரேதக்குழிக்கு சென்றிருப்பதாக தோன்றுகிறது. (வெளிப்படுத்துதல் 6:8; 20:13) ஆனால் அந்த உவமை, அப்போது உயிரோடிருந்து கொண்டும் அவருடைய தீர்ப்புக்குரிய தண்டனையின் நிறைவேற்றத்தை எதிர்ப்பட்டுக் கொண்டும் இருக்கும் ‘எல்லா தேசத்தாரை,’ இயேசு நியாயத்தீர்ப்பு செய்யும் சமயத்தை விளக்கிக் காண்பிக்கிறது.
24. செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளைப் பற்றிய உவமை எப்போது நிறைவேறும்?
24 வேறு வார்த்தைகளில் சொன்னால், மனுஷகுமாரன் தம் மகிமையில் வரும் காலத்தைக் குறித்த எதிர்காலத்தைப் பற்றி அந்த உவமை குறிப்பிட்டுக் காட்டுகிறது. அப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் ஜனங்களை நியாயந்தீர்ப்பதற்கு அவர் வீற்றிருப்பார். அவர்கள் தங்களை என்னவாக வெளிக்காட்டியிருக்கிறார்களோ அதன் அடிப்படையில் அவருடைய நியாயத்தீர்ப்பு இருக்கும். அந்த சமயத்தில் “நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும் இருக்கிற வித்தியாசம்” தெளிவாக நிரூபிக்கப்பட்டிருக்கும். (மல்கியா 3:1, 8) நியாயத்தீர்ப்பு உண்மையில் அறிவிக்கப்படுவதும் அது நிறைவேற்றப்படுவதும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குள்ளாக நிறைவேற்றப்படும். தனிப்பட்ட நபர்களைக் குறித்து என்ன தெளிவாக வெளிப்படையாக ஆகியிருக்கிறதோ, அதன் அடிப்படையில் இயேசு நீதியான தீர்மானங்களை வழங்குவார்.—2 கொரிந்தியர் 5:10-ஐயும் காண்க.
25. மனுஷகுமாரன் மகிமையான சிங்காசனத்தில் வீற்றிருப்பதைப் பற்றி பேசுகையில் மத்தேயு 25:31 எதை விளக்கிக் காட்டுகிறது?
25 அப்படியானால், மத்தேயு 25:31-ல் குறிப்பிடப்பட்டிருப்பது, இயேசு நியாயந்தீர்ப்பதற்காக ‘மகிமையுள்ள சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பது’ எதிர்காலத்தில் நடக்கப்போகிறவற்றிற்கு பொருத்தமாய் இருப்பதை இது குறிக்கிறது, அப்போது இந்த வல்லமைவாய்ந்த ராஜா தேசங்களின் மீது நியாயத்தீர்ப்பை அறிவிப்பதற்கும் அதை நிறைவேற்றுவதற்கும் வீற்றிருப்பார். ஆம், மத்தேயு 25:31-33, 46-ல் இயேசுவை உட்படுத்துகிற நியாயத்தீர்ப்புக் காட்சி தானியேல் 7-ம் அதிகாரத்தில் இருக்கும் காட்சிக்கு ஒப்பாயிருக்கிறது, அங்கு ஆட்சிசெய்து கொண்டிருக்கும் ராஜா, நீண்ட ஆயுசுள்ளவர், நியாயாதிபதியாக தம் பங்கை நிறைவேற்றி முடிப்பதற்கு வீற்றிருந்தார்.
26. உவமையைக் குறித்து என்ன புதிய விளக்கம் தெளிவாகிறது?
26 வெள்ளாடுகள் மீதும் செம்மறியாடுகள் மீதும் நியாயத்தீர்ப்பை இந்தவிதத்தில் வழங்குவதைப் பற்றிய உவமையைப் புரிந்துகொள்வது வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகள் மீது கொண்டுவரப் போகும் நியாயத்தீர்ப்பு எதிர்காலத்தில் நடக்கப்போகிறதைக் குறிக்கிறது. மத்தேயு 24:29, 30-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் “உபத்திரவம்” ஆரம்பித்தவுடனேயும் மனுஷகுமாரன் ‘மகிமையோடு வரும்போதும்’ அது நடைபெறும். (மாற்கு 13:24-26-ஐ ஒப்பிடுக.) பின்பு, முழு பொல்லாத ஒழுங்குமுறையும் அதன் முடிவுக்கு வருகையில், இயேசு நீதிவிசாரணை நடத்தி, நியாயத்தீர்ப்பை வழங்கி, அதை நிறைவேற்றுவார்.—யோவான் 5:30; 2 தெசலோனிக்கேயர் 1:7-10.
27. இயேசுவின் கடைசி உவமையைப் பற்றி எதை அறிந்துகொள்வதில் நாம் அக்கறையுடையவர்களாய் இருக்க வேண்டும்?
27 இயேசு கொடுத்த உவமையின் காலத்தைப் பற்றி நம்முடைய புரிந்துகொள்ளுதலை இது தெளிவாக்குகிறது, அது எப்போது செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் நியாயந்தீர்க்கப்படுவர் என்பதைக் காண்பிக்கிறது. ஆனால் ராஜ்ய நற்செய்தியை வைராக்கியத்தோடு பிரசங்கித்துக்கொண்டிருக்கும் நம்மை அது எவ்வாறு பாதிக்கிறது? (மத்தேயு 24:14) அது நம்முடைய வேலையை குறைந்த முக்கியத்துவமுடையதாய் ஆக்குகிறதா, அல்லது அதிக கனத்த உத்தரவாதத்தை அது கொண்டுவருகிறதா? நாம் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை அடுத்த கட்டுரையில் காணலாம்.
[அடிக்குறிப்புகள்]
a தானியேல் 7:10, 26-ல் “நியாயசங்கம்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் சொல் எஸ்றா 7:26-லும் தானியேல் 4:37; 7:21-லும்கூட காணப்படுகிறது.
b கிறிஸ்தவர்கள் ஒருவரையொருவர் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்வதைக் குறித்து பவுல் கேட்டார்: “தீர்ப்புச்செய்கிறதற்கு, சபையில் அற்பமாய் எண்ணப்பட்டவர்களை நியமித்துக்கொள்ளுங்கள் [சொல்லர்த்தமாக சொன்னால், ‘நீங்கள் அமர்த்துகிறீர்களா?’].”—1 கொரிந்தியர் 6:4.
c உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி பிரசுரித்திருக்கும் வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! என்ற புத்தகத்தில், 56, 73, 235-45, 260 பக்கங்களைக் காண்க.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ யெகோவா எவ்வாறு ராஜாவாகவும் நியாயாதிபதியாகவும் சேவிக்கிறார்?
◻ ‘சிங்காசனத்தில் வீற்றிருப்பது’ என்பதற்கு என்ன இரண்டு அர்த்தங்கள் இருக்கலாம்?
◻ மத்தேயு 25:31-ன் காலத்தைக் குறித்து நாம் முன்பு என்ன சொல்லிக் கொண்டிருந்தோம், ஆனால் திருத்தப்பட்ட கருத்துக்கு என்ன அடிப்படை இருக்கிறது?
◻ மத்தேயு 25:31-ல் குறிப்பிட்டிருக்கிறபடி, எப்போது மனுஷகுமாரன் தம் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார்?
-
-
செம்மறியாடுகளுக்கும் வெள்ளாடுகளுக்கும் என்ன எதிர்காலம் உள்ளது?காவற்கோபுரம்—1995 | அக்டோபர் 15
-
-
செம்மறியாடுகளுக்கும் வெள்ளாடுகளுக்கும் என்ன எதிர்காலம் உள்ளது?
‘மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரிப்பார்.’—மத்தேயு 25:32.
1, 2. செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள் பற்றிய உவமை நமக்கு ஏன் அக்கறையூட்டுவதாய் இருக்க வேண்டும்?
இயேசு கிறிஸ்து நிச்சயமாகவே பூமியில் மிகப்பெரிய போதகராக இருந்தார். (யோவான் 7:46) உவமைகள் அல்லது உதாரணங்களை உபயோகித்தது அவருடைய கற்பிக்கும் முறைகளில் ஒன்றாக இருந்தது. (மத்தேயு 13:34, 35) இவை எளியவையாய் இருந்தபோதிலும், ஆழமான, ஆவிக்குரிய மற்றும் தீர்க்கதரிசன சத்தியங்களை எடுத்துக்கூறுவதில் வல்லமை வாய்ந்தவையாய் இருந்தன.
2 இயேசு ஒரு விசேஷ ஸ்தானத்தில் தாம் செயல்படப்போகும் ஒரு காலத்தைப் பற்றி செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளைப் பற்றிய உவமையில் குறிப்பிட்டார்: “அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய் வரும்போது . . .” (மத்தேயு 25:31) இது நமக்கு அக்கறையூட்டுவதாய் இருக்க வேண்டும், ஏனென்றால், “உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன?” என்ற கேள்விக்கு தம்முடைய பதிலைக் கொடுத்து முடிக்கையில் இந்த உவமையைத் தான் இயேசு கொடுக்கிறார். (மத்தேயு 24:3) ஆனால் இது நமக்கு எதை அர்த்தப்படுத்துகிறது?
3. மிகுந்த உபத்திரவம் ஆரம்பித்த “உடனே” என்ன சம்பவிக்கும் என்று இயேசு தம்முடைய உரையாடலின் ஆரம்பத்தில் சொன்னார்?
3 மிகுந்த உபத்திரவம் ஆரம்பித்த “உடனே” ஆச்சரியப்படுவதற்குரிய சம்பவங்கள் நிகழும் என்று இயேசு முன்னறிவித்தார். அவை நாம் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் சம்பவங்களாக இருக்கும். அப்போது “மனுஷகுமாரனுடைய அடையாளம்” தோன்றும் என்று அவர் சொன்னார். “மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள் மேல் வருகிறதை” காணப்போகும் ‘பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரையும்’ இது மிகவும் அதிகமாக பாதிக்கும். மனுஷகுமாரன் ‘தமது தூதரோடு’கூட சேர்ந்து வருவார். (மத்தேயு 24:21, 29-31)a செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளைப் பற்றிய உவமையைப் பற்றியதிலென்ன? நவீனகால பைபிள்கள் அதை 25-ம் அதிகாரத்தில் கொடுத்திருக்கின்றன, ஆனால் அது இயேசு கொடுத்த பதிலின் ஒரு பாகமாயிருக்கிறது, அவர் மகிமையில் வருவதைப் பற்றி கூடுதலான விவரங்களைக் கொடுக்கிறது, மேலும் அவர் ‘எல்லா தேசத்தாரையும்’ நியாயத்தீர்ப்பு செய்வதன் பேரில் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது.—மத்தேயு 25:32.
உவமையில் உள்ள நபர்கள்
4. செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள் பற்றிய உவமையின் ஆரம்பத்தில் இயேசுவைக் குறித்து என்ன சொல்லப்பட்டிருக்கிறது, வேறு யாரும் குறிப்பிடப்பட்டிருக்கின்றனர்?
4 ‘மனுஷகுமாரன் வரும்போது’ என்று சொல்லி இயேசு அந்த உவமையை ஆரம்பிக்கிறார். “மனுஷகுமாரன்” யார் என்பதை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். சுவிசேஷ எழுத்தாளர்கள் அந்த சொற்றொடரை பெரும்பாலும் இயேசுவுக்குப் பொருத்தினார்கள். இயேசுவும்கூட அந்த சொற்றொடரை பயன்படுத்தினார், “மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர்” ‘கர்த்தத்துவத்தையும் மகிமையையும் ராஜரீகத்தையும்’ பெற்றுக்கொள்வதற்கு நீண்ட ஆயுசுள்ளவரை அணுகுவதைப் பற்றி கூறும் தானியேலின் தரிசனத்தை அவர் மனதில் கொண்டிருந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. (தானியேல் 7:13, 14; மத்தேயு 26:63, 64; மாற்கு 14:61, 62) இந்த உவமையில் இயேசு முக்கியமான நபராக இருக்கிறபோதிலும், அவர் தனிமையாய் இல்லை. மத்தேயு 24:30, 31-ல் குறிப்பிடப்பட்டிருக்கிறபடி, மனுஷகுமாரன் ‘வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வருகையில்’ அவருடைய தூதர்கள் ஒரு முக்கியமான பங்கை வகிப்பர் என்று இந்த உரையாடலின் முற்பகுதியில் அவர் சொன்னார். அதே போன்று, இயேசு நியாயந்தீர்ப்பதற்கு ‘தம்முடைய மகிமையான சிங்காசனத்தில் வீற்றிருக்கும்போது’ அவரோடு தூதர்கள் இருப்பதை செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளைப் பற்றிய உவமை காண்பிக்கிறது. (மத்தேயு 16:27-ஐ ஒப்பிடுக.) ஆனால் நியாயாதிபதியும் அவருடைய தூதர்களும் பரலோகத்தில் இருக்கின்றனர், ஆகையால், இந்த உவமையில் மனிதர்கள் கலந்தாலோசிக்கப்பட்டு இருக்கின்றனரா?
5. இயேசுவின் ‘சகோதரர்களை’ நாம் எவ்வாறு அடையாளம் கண்டுகொள்ளலாம்?
5 இந்த உவமையை ஒரு கண்ணோட்டம் விடுவது நாம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டிய மூன்று தொகுதிகளை வெளிப்படுத்திக் காண்பிக்கிறது. செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளோடுகூட, மனுஷகுமாரன் கூடுதலாக இந்த மூன்றாவது தொகுதியை சொல்கிறார், அவர்களை அடையாளம் கண்டுகொள்வது செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் அடையாளம் கண்டுகொள்வதற்கு இன்றியமையாததாய் இருக்கிறது. இயேசு இந்த மூன்றாவது தொகுதியை தம்முடைய ஆவிக்குரிய சகோதரர்கள் என்று அழைக்கிறார். (மத்தேயு 25:40, 45) அவர்கள் மெய் வணக்கத்தாராக இருக்க வேண்டும், ஏனென்றால் இயேசு சொன்னார்: “பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான்.” (மத்தேயு 12:50; யோவான் 20:17) அதிகப் பொருத்தமாக, ‘ஆபிரகாமின் வித்தின்’ பாகமாகவும் கடவுளுடைய குமாரர்களாகவும் இருக்கும் கிறிஸ்தவர்களைப் பற்றி பவுல் எழுதினார். அவர் இவர்களை இயேசுவின் ‘சகோதரர்கள்’ என்றும் ‘பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்கள்’ என்றும் அழைத்தார்.—எபிரெயர் 2:9–3:1; கலாத்தியர் 3:26, 29.
6. இயேசுவின் சகோதரர்களில் “மிகவும் சிறியவர்” யார்?
6 “மிகவும் சிறியவராகிய” தம் சகோதரர்கள் என்று இயேசு ஏன் குறிப்பிட்டார்? அப்போஸ்தலர் அவர் அதற்கு முன்பு கூறியதை கேட்டவற்றை அந்த சொற்கள் எதிரொலிக்கின்றன. இயேசுவுக்கு முன்பு மரித்ததனால் பூமிக்குரிய நம்பிக்கையைக் கொண்டிருந்த யோவான் ஸ்நானனோடு பரலோக வாழ்க்கையை அடையப்போகிறவர்களை வேறுபடுத்திக் காட்டும்போது, இயேசு சொன்னார்: “யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறான்.” (மத்தேயு 11:11) அப்போஸ்தலர்களைப் போன்று பரலோகத்துக்கு செல்லப்போகிறவர்களில் சிலர் சபையில் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருந்திருக்கலாம், மற்றவர்கள் குறைவான முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருந்திருக்கக்கூடும், ஆனால் அவர்கள் எல்லாரும் இயேசுவின் ஆவிக்குரிய சகோதரர்களாய் இருக்கின்றனர். (லூக்கா 16:10; 1 கொரிந்தியர் 15:9; எபேசியர் 3:8; எபிரெயர் 8:11) ஆகையால், பூமியில் சிலர் அற்பமானவர்களாய்த் தோன்றினபோதிலும் அவர்கள் அவருடைய சகோதரர்களாய் இருந்தனர், அவர்களையும் அதேபோல் நடத்தியிருக்க வேண்டும்.
செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள் யாவர்?
7, 8. செம்மறியாடுகளைக் குறித்து இயேசு என்ன சொன்னார், ஆகையால் அவர்களைக் குறித்து நாம் என்ன முடிவுக்கு வரலாம்?
7 செம்மறியாடுகளை நியாயந்தீர்ப்பதைக் குறித்து நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “[இயேசு] தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள். அப்பொழுது நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்கு போஜனங் கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.”—மத்தேயு 25:34-40.
8 மதிப்பும் தயவும் பெற்றவர்களாய் இயேசுவின் வலதுபக்கத்தில் இருப்பதற்கு தகுதியுள்ளவர்களாய் நியாயந்தீர்க்கப்படும் செம்மறியாடுகள், மனிதர்கள் அடங்கிய ஒரு வகுப்பாரை பிரதிநிதித்துவம் செய்கின்றன என்பது தெளிவாய் இருக்கிறது. (எபேசியர் 1:20; எபிரெயர் 1:3) அவர்கள் என்ன செய்தனர், எப்போது செய்தனர்? அவர்கள் தயவோடும் மரியாதையோடும் ஏராளமாக அவருக்கு உணவு, தண்ணீர், உடை ஆகியவற்றைக் கொடுத்து அவர் வியாதியாயிருந்தபோது அல்லது சிறையில் இருந்தபோது அவருக்கு உதவி செய்தனர் என்று இயேசு சொல்கிறார். இதை தனிப்பட்டவிதமாக இயேசுவுக்கு செய்யவில்லை என்று செம்மறியாடுகள் சொன்னபோதிலும், அவர்கள் அவருடைய அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் மீதியானோராயிருக்கும் ஆவிக்குரிய சகோதரர்களுக்கு ஆதரவு கொடுத்தார்கள் என்று அவர் குறிப்பிட்டுக் காட்டுகிறார், ஆகையால் அந்தக் கருத்தில் அவருக்கு அவர்கள் அதைச் செய்தனர்.
9. ஆயிரவருட ஆட்சியின்போது அந்த உவமை ஏன் பொருந்துவதில்லை?
9 அந்த உவமை ஆயிரவருட ஆட்சியின்போது பொருந்துவதில்லை, ஏனென்றால் அபிஷேகம்செய்யப்பட்டோர் அப்போது பசி, தாகம், வியாதி அல்லது சிறைவாசம் போன்றவற்றின் காரணமாக துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் மனிதர்களாக இருக்கமாட்டார்கள். ஆனால் அவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த ஒழுங்குமுறையின் முடிவின்போது அப்படிப்பட்ட காரியங்களை அனுபவித்திருக்கின்றனர். சாத்தான் பூமியின் மீது விழத்தள்ளப்பட்ட காலத்திலிருந்து, அவன் மீதியானோரை அவனுடைய கோபாவேசத்துக்கு ஒரு விசேஷ இலக்காக ஆக்கியிருக்கிறான், அவர்கள் மீது பரியாசம், சித்திரவதை, மரணம் ஆகியவற்றைக் கொண்டு வந்திருக்கிறான்.—வெளிப்படுத்துதல் 12:17.
10, 11. (அ) இயேசுவின் சகோதரர்களுக்கு ஒரு தயவான செயலைச் செய்யும் ஒவ்வொருவரும் செம்மறியாடுகளாக இருக்கின்றனர் என்று யோசிப்பது ஏன் நியாயமற்றதாய் இருக்கிறது? (ஆ) செம்மறியாடுகள் யாரை பொருத்தமாகவே பிரதிநிதித்துவம் செய்கின்றன?
10 ஒரு சிறிய துண்டு ரொட்டி அல்லது ஒரு குவளை தண்ணீர் போன்ற சிறிதளவான தயவை அவருடைய சகோதரர்களில் ஒருவருக்கு காண்பிக்கும் ஒவ்வொருவரும் இப்படிப்பட்ட செம்மறியாடுகளில் ஒருவராக தகுதி பெறுகின்றனரா? அப்படிப்பட்ட தயவுகளை காண்பிப்பது மனித தயவை ஒருவேளை பிரதிபலித்தாலும்கூட, உண்மையில், இந்த உவமையில் உள்ள செம்மறியாடுகளின் விஷயத்தில் இன்னும் அதிகம் உட்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. உதாரணமாக, நாத்திகர்களோ குருமார்களோ அவருடைய சகோதரர்களில் ஒருவருக்கு ஒரு தயவான செயலை செய்வதைப் பற்றி இயேசு இங்கே நிச்சயமாகவே குறிப்பிடவில்லை. அதற்கு மாறாக, இயேசு இரண்டு முறை செம்மறியாடுகளை “நீதிமான்கள்” என்று அழைத்தார். (மத்தேயு 25:37, 46) ஆகையால் செம்மறியாடுகள் ஓரளவு காலப்பகுதி கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு ஆதரவு தருவதில் சுறுசுறுப்பாய் இருந்திருக்க வேண்டும், கடவுளுக்கு முன்பாக ஒரு நீதியான நிலைநிற்கையைப் பெற்றுக்கொள்ளும் அளவுக்கு விசுவாசத்தைக் காண்பித்திருக்க வேண்டும்.
11 பல நூற்றாண்டுகளாக ஆபிரகாம் போன்ற அநேகர் நீதியான நிலைநிற்கையை அனுபவித்திருக்கின்றனர். (யாக்கோபு 2:21-23) நோவா, ஆபிரகாம், மேலும் மற்ற உண்மையுள்ள நபர்கள் “வேறே ஆடுகள்” தொகுதியில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர், அவர்கள் கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ் பரதீஸில் வாழ்க்கையை சுதந்தரித்துக் கொள்வர். சமீப காலங்களில் இன்னும் இலட்சக்கணக்கானோர் வேறே ஆடுகளாக மெய் வணக்கத்தை ஏற்றுக்கொண்டிருக்கின்றனர், அவர்கள் அபிஷேகம்செய்யப்பட்டவர்களோடு சேர்ந்து ‘ஒரே மந்தையாக’ ஆகியிருக்கின்றனர். (யோவான் 10:16; வெளிப்படுத்துதல் 7:9) பூமிக்குரிய நம்பிக்கைகளையுடைய இவர்கள் இயேசுவின் சகோதரர்களை ராஜ்யத்தின் ஸ்தானாபதிகளாக மதித்துணர்கின்றனர், ஆகையால் அவர்களுக்கு சொல்லர்த்தமாகவும் ஆவிக்குரிய பிரகாரமாகவும் உதவி செய்திருக்கின்றனர். பூமியில் தம்முடைய சகோதரர்களுக்கு வேறே ஆடுகள் செய்பவற்றை தமக்கே செய்வதாக இயேசு கருதுகிறார். தேசங்களை நியாயந்தீர்க்க அவர் வரும்போது உயிரோடிருக்கும் அப்படிப்பட்ட நபர்கள் செம்மறியாடுகளாக நியாயந்தீர்க்கப்படுவர்.
12. இயேசுவுக்கு எவ்வாறு தயவுகள் செய்திருந்திருக்கின்றனர் என்று செம்மறியாடுகள் ஏன் கேட்கலாம்?
12 இப்போது வேறே ஆடுகள் அபிஷேகம் செய்யப்பட்டவர்களோடு சேர்ந்து நற்செய்தியை பிரசங்கித்துக்கொண்டு அவர்களுக்கு உதவி செய்துகொண்டிருந்தார்கள் என்றால், அவர்கள் ஏன் இவ்வாறு கேட்க வேண்டும்: “ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்கு போஜனங் கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்?” (மத்தேயு 25:37) அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். இது ஒரு உவமை. இதன் மூலம் இயேசு தம்முடைய ஆவிக்குரிய சகோதரர்கள் பேரில் ஆழ்ந்த அக்கறையைக் காண்பிக்கிறார்; அவர்களோடு சேர்ந்து இரக்கப்படுகிறார், அவர்களோடு சேர்ந்து துன்பப்படுகிறார். இயேசு அதற்கு முன்பு சொல்லியிருந்தார்: “உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்.” (மத்தேயு 10:40) இந்த உதாரணத்தில் இயேசு இந்த நியமத்தை விரிவாக்கினார், அதாவது, அவருடைய சகோதரர்களுக்கு செய்யப்பட்டவை (நன்மை அல்லது தீமை) பரலோகத்தையும்கூட சென்றெட்டுகிறது; அது பரலோகத்தில் அவருக்கு செய்யப்பட்டதைப் போல் இருக்கிறது. மேலும், இயேசு இங்கே நியாயத்தீர்ப்பு செய்வதற்கு யெகோவாவின் தராதரத்தை அழுத்தியுரைக்கிறார், கடவுளின் நியாயத்தீர்ப்பு சாதகமானதாக இருந்தாலும்சரி அல்லது குற்றவாளியெனத் தீர்த்தாலும்சரி, அது தகுந்ததாயும் நியாயமானதாயுமிருக்கும் என்பதை தெளிவாக்குகிறார். ‘நாங்கள் மட்டும் உம்மை நேரடியாக பார்த்திருந்தால்’ என்று வெள்ளாடுகள் சாக்குப்போக்கு சொல்ல முடியாது.
13. வெள்ளாடுகளைப் போன்றவர்கள் இயேசுவை “ஆண்டவர்” என்று ஏன் அழைக்கலாம்?
13 இந்த உவமையில் சொல்லப்பட்டிருக்கும் நியாயத்தீர்ப்பு எப்போது வழங்கப்படுகிறது என்பதை நாம் புரிந்துகொண்ட பிறகு, வெள்ளாடுகள் யார் என்பதைக் குறித்து நாம் மிகவும் தெளிவான கருத்தைப் பெறுகிறோம். ‘மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள்.’ அந்த சமயத்தில்தான் அதன் நிறைவேற்றம் இருக்கும். (மத்தேயு 24:29, 30) ராஜாவின் சகோதரர்களை இழிவாக நடத்தின மகா பாபிலோனின் மீது வரும் உபத்திரவத்தை தப்பிப்பிழைப்பவர்கள் இப்போது நம்பிக்கையிழந்த நிலையில் நியாயாதிபதியை நோக்கி “ஆண்டவரே” என்று அழைத்து தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ள எதிர்பார்ப்பர்.—மத்தேயு 7:22, 23; இதை ஒப்பிடுக: வெளிப்படுத்துதல் 6:15-17.
14. எந்த அடிப்படையில் இயேசு செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் நியாயந்தீர்ப்பார்?
14 என்றபோதிலும், முன்பு சர்ச்சுக்கு சென்று கொண்டிருந்தவர்கள், நாத்திகர்கள் அல்லது மற்றவர்கள் நம்பிக்கையிழந்த நிலையில் உரிமைபாராட்டிக்கொள்வதன் பேரில் இயேசுவின் நியாயத்தீர்ப்பு சார்ந்திருக்காது. (2 தெசலோனிக்கேயர் 1:8) அதற்கு மாறாக, ‘மிகவும் சிறியவராகிய [அவருடைய சகோதரர்களில்] ஒருவரிடமாகக்கூட’ ஜனங்கள் காண்பித்த இருதய நிலைமையும், கடந்தகால செயல்களையும் நியாயாதிபதி மறுபடியும் ஆராய்வார். பூமியில் மீதமாயிருக்கும் அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே செல்வது ஒப்புக்கொள்ளத்தக்கதே. இருப்பினும், “உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்கார” வகுப்பை உண்டுபண்ணும் அபிஷேகம்செய்யப்பட்டோர் தொடர்ந்து ஆவிக்குரிய உணவையும் வழிநடத்துதலையும் அளிக்கும்வரையில், ‘சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலுமிருந்து வந்த திரள்கூட்டத்தார்’ செய்திருப்பது போல, எதிர்காலத்தில் வரப்போகும் செம்மறியாடுகள், அடிமை வகுப்பாருக்கு நன்மை செய்வதற்கு ஒரு வாய்ப்பைக் கொண்டிருக்கின்றனர்.—வெளிப்படுத்துதல் 7:9, 14.
15. (அ) எவ்வாறு அநேகர் தங்களை வெள்ளாடுகளாக காண்பித்திருக்கின்றனர்? (ஆ) ஒருவர் செம்மறியாடா வெள்ளாடா என்று குறிப்பிடுவதை நாம் ஏன் தவிர்க்க வேண்டும்?
15 கிறிஸ்துவின் சகோதரர்களும் அவர்களோடு ஐக்கியப்படுத்தப்பட்டிருக்கும் இலட்சக்கணக்கான வேறே ஆடுகளும் சேர்ந்து ஒரே மந்தையாக எவ்வாறு நடத்தப்பட்டிருக்கின்றனர்? பெரும்பாலான மக்கள் கிறிஸ்துவின் பிரதிநிதிகளை தனிப்பட்டவிதமாய் தாக்கியிருக்க மாட்டார்கள், அதே சமயத்தில் அவருடைய ஜனங்களை அன்பாகவும் அவர்கள் நடத்தியிருக்க மாட்டார்கள். துன்மார்க்க உலகை விரும்பித் தேர்ந்தெடுத்து வெள்ளாடுகளைப் போன்ற ஜனங்கள் ராஜ்ய செய்தியை நேரடியாகவோ மறைமுகமாகவோ கேட்டிருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். (1 யோவான் 2:15-17) இறுதியில் நியாயத்தீர்ப்பு வழங்குவதற்கு இயேசுவே நியமிக்கப்பட்டிருக்கிறார். யார் செம்மறியாடுகள் அல்லது யார் வெள்ளாடுகள் என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் நாம் அல்லர்.—மாற்கு 2:8; லூக்கா 5:22; யோவான் 2:24, 25; ரோமர் 14:10-12; 1 கொரிந்தியர் 4:5.
ஒவ்வொரு தொகுதிக்கும் என்ன எதிர்காலம் உள்ளது?
16, 17. செம்மறியாடுகள் என்ன எதிர்காலத்தைக் கொண்டிருப்பர்?
16 செம்மறியாடுகளுக்கு இயேசு தம்முடைய நியாயத்தீர்ப்பைக் கொடுத்தார்: “வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.” என்னே ஒரு அனலான அழைப்பு—“வாருங்கள்”! எதற்கு? நித்திய ஜீவனுக்கு என்று அவர் சுருக்கமாக கூறினார்: “நீதிமான்களோ நித்திய ஜீவனுக்குள் [பிரவேசிப்பர்].”—மத்தேயு 25:34, 46.
17 அவரோடு பரலோகத்தில் ஆளப்போகிறவர்கள் பங்கில் என்ன தேவைப்படுகிறது என்பதை தாலந்துகள் பற்றிய உவமையில் இயேசு காண்பித்தார், இந்த உவமையிலோ ராஜ்ய குடிமக்களின் பங்கில் என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்பதை அவர் காண்பிக்கிறார். (மத்தேயு 25:14-23) பொருத்தமாகவே, அவர்கள் இயேசுவின் சகோதரர்களுக்கு முழு இருதயத்தோடு ஆதரவு கொடுத்ததன் காரணமாக, அவருடைய ராஜ்யத்தின் பூமிக்குரிய எல்லையில் செம்மறியாடுகள் ஒரு இடத்தை சுதந்தரித்துக் கொள்கின்றனர். அவர்கள் ஒரு பரதீஸிய பூமியில் வாழ்க்கையை அனுபவிப்பர்—மீட்டுக்கொள்ளப்படத்தக்க மானிடர்கள் அடங்கிய “உலகத்தோற்றமுதற்கொண்டு” கடவுள் அவர்களுக்காக தயாரித்து வைத்திருக்கும் ஒரு எதிர்பார்ப்பு.—லூக்கா 11:50, 51.
18, 19. (அ) இயேசு வெள்ளாடுகளுக்கு என்ன நியாயத்தீர்ப்பை வழங்குவார்? (ஆ) வெள்ளாடுகள் நித்திய வாதனையை அடையமாட்டார்கள் என்று நாம் எவ்வாறு நிச்சயமாய் இருக்கலாம்?
18 வெள்ளாடுகள் மீது நிறைவேற்றப்படும் நியாயத்தீர்ப்பு என்னே ஒரு வித்தியாசம்! “அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னை விட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார். அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள். அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.”—மத்தேயு 25:41-45.
19 வெள்ளாடுகளைப் போன்ற நபர்களின் அழியாத ஆத்துமாக்கள் நித்திய அக்கினியில் துன்பப்படுவதை இது அர்த்தப்படுத்தாது என்பதை பைபிள் மாணாக்கர்கள் அறிந்திருக்கின்றனர். மனிதர்கள் ஆத்துமாக்களாய் இருக்கின்றனர்; அவர்கள் அழியாமையுள்ள ஆத்துமாக்களைக் கொண்டிருப்பதில்லை. (ஆதியாகமம் 2:7; பிரசங்கி 9:5, 10; எசேக்கியேல் 18:4) வெள்ளாடுகளை “நித்திய ஆக்கினைக்கு” தண்டனைத் தீர்ப்பளிப்பதன் மூலம், எதிர்கால நம்பிக்கையே முற்றிலும் இல்லாத அழிவை உண்டாக்குவதை அந்த நியாயாதிபதி அர்த்தப்படுத்துகிறார், அது பிசாசுக்கும் அவனுடைய பேய்களுக்கும்கூட நித்திய முடிவாக இருக்கும். (வெளிப்படுத்துதல் 20:10, 14) எனவே, யெகோவாவின் நியாயாதிபதி முற்றிலும் எதிரிடையான நியாயத்தீர்ப்புகளை வைக்கிறார். அவர் செம்மறியாடுகளை நோக்கி, “வாருங்கள்” என்றும் வெள்ளாடுகளை நோக்கி, ‘என்னை விட்டுப் போங்கள்,’ என்றும் சொல்கிறார். செம்மறியாடுகள் “நித்திய ஜீவனை” சுதந்தரித்துக் கொள்வார்கள். வெள்ளாடுகள் “நித்திய ஆக்கினையை” அடைவார்கள்.—மத்தேயு 25:46.b
இது நமக்கு எதைக் குறிக்கிறது?
20, 21. (அ) கிறிஸ்தவர்களுக்கு செய்வதற்கு என்ன முக்கியமான வேலை உள்ளது? (ஆ) என்ன பிரிக்கும் வேலை இப்போது நடந்துகொண்டிருக்கிறது? (இ) செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள் பற்றிய உவமை நிறைவேற ஆரம்பிக்கும்போது ஜனங்களுடைய நிலைமை என்னவாக இருக்கும்?
20 அவருடைய வந்திருத்தலைப் பற்றியும் இந்த ஒழுங்குமுறையின் முடிவைப் பற்றியும் இயேசுவின் பதிலைக் கேட்ட நான்கு அப்போஸ்தலருக்கு சிந்தித்துப் பார்ப்பதற்கு அதிகம் இருந்தது. அவர்கள் விழித்திருந்து ஆயத்தமாயிருக்க வேண்டியிருந்தது. (மத்தேயு 24:42) மாற்கு 13:10-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் பிரசங்க வேலையையும்கூட செய்ய வேண்டியிருந்தது. இன்று யெகோவாவின் சாட்சிகள் அந்த வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபட்டிருக்கின்றனர்.
21 செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகளைப் பற்றிய இந்த உவமையின் பேரில் கூடுதலான புரிந்துகொள்ளுதல் நமக்கு எதை அர்த்தப்படுத்துகிறது? ஜனங்கள் ஏற்கெனவே ஏதாவது ஒரு பக்கத்தை ஆதரிக்க ஆரம்பித்து விட்டனர். சிலர் ‘கேட்டுக்குப் போகிற விசாலமான பாதையில்’ இருக்கின்றனர், மற்றவர்கள் ‘ஜீவனுக்குப் போகிற இடுக்கமான பாதையில்’ தொடர்ந்து இருப்பதற்கு முயற்சி செய்கின்றனர். (மத்தேயு 7:13, 14) உவமையில் சித்தரித்துக் காண்பிக்கப்பட்டிருக்கும் செம்மறியாடுகள் மீதும் வெள்ளாடுகள் மீதும் இயேசு எந்த நேரத்தில் இறுதி நியாயத்தீர்ப்பை வழங்குவார் என்பது இன்னும் பின்னால் நடக்கவிருக்கிறது. மனுஷகுமாரன் நியாயாதிபதியின் பங்கில் வரும்போது, அநேக மெய்க் கிறிஸ்தவர்கள்—உண்மையில் ‘திரள்கூட்டமான’ ஒப்புக்கொடுக்கப்பட்ட செம்மறியாடுகள்—‘மிகுந்த உபத்திரவத்தின்’ கடைசி பாகத்தை தப்பிப்பிழைத்து புதிய உலகுக்குள் செல்வதற்கு தகுதி பெறுவர் என்பதை அவர் தீர்மானிப்பார். அந்த எதிர்பார்ப்பு இப்போது மகிழ்ச்சிக்கு ஊற்றுமூலமாயிருக்க வேண்டும். (வெளிப்படுத்துதல் 7:9, 14) மறுபட்சத்தில், ‘எல்லா தேசத்தாரிலுமிருந்து’ பெரும் எண்ணிக்கையான ஆட்கள் பிடிவாதமான வெள்ளாடுகள் போல் தங்களை நிரூபித்துக் காட்டியிருப்பர். அவர்கள் ‘நித்திய ஆக்கினையை அடைய புறப்படுவார்கள்.’ பூமிக்கு எப்பேர்ப்பட்ட விடுதலை!
22, 23. உவமையின் நிறைவேற்றம் இன்னும் எதிர்காலத்தில் இருக்கப்போவதால், நம்முடைய பிரசங்க வேலை இன்று ஏன் இன்றியமையாததாய் இருக்கிறது?
22 உவமையில் விவரிக்கப்பட்டிருக்கும் நியாயத்தீர்ப்பு சமீபத்திய எதிர்காலத்தில் இருக்கப்போவதால், இப்போதும்கூட முக்கியமான ஏதோவொன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கிறிஸ்தவர்களாகிய நாம் ஜீவனைப் பாதுகாக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறோம், நாம் அறிவிக்கும் செய்தி ஜனங்கள் மத்தியில் ஒரு பிளவை ஏற்படுத்துகிறது. (மத்தேயு 10:32-39) பவுல் எழுதினார்: “ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்?” (ரோமர் 10:13, 14) நம்முடைய வெளிப்படையான ஊழியம் 230-க்கும் மேற்பட்ட தேசங்களில் உள்ள ஜனங்களை சென்றெட்டுகிறது, கடவுளுடைய பெயரும் அவருடைய இரட்சிப்பின் செய்தியும் அதில் அடங்கியுள்ளது. கிறிஸ்துவின் அபிஷேகம்செய்யப்பட்ட சகோதரர்கள் இன்றும்கூட இந்த வேலையை முன்னின்று நடத்துகின்றனர். சுமார் 50 லட்சம் வேறே ஆடுகள் இப்போது அவர்களோடு சேர்ந்துகொண்டிருக்கின்றனர். இயேசுவின் சகோதரர்கள் அறிவிக்கும் செய்திக்கு பூமி முழுவதிலுமுள்ள ஜனங்கள் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றனர்.
23 நாம் வீட்டுக்கு வீடு பிரசங்கம் செய்கையிலோ அல்லது முறைப்படியல்லாத சாட்சி கொடுக்கையிலோ அநேகர் நம்முடைய செய்தியைக் கேள்விப்படுகின்றனர். மற்றவர்கள் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றியும் நாம் எதைப் பிரதிநிதித்துவம் செய்கிறோம் என்பதைப் பற்றியும் நமக்குத் தெரியாத வழிகளில் அறிந்துகொள்ளலாம். நியாயத்தீர்ப்பு செய்யும் நேரம் வருகையில், எந்த அளவுக்கு இயேசு சமுதாய உத்தரவாதத்தையும் குடும்ப மதிப்பையும் சிந்திப்பார்? நாம் அதைச் சொல்லமுடியாது, அதைக் குறித்து ஊகம் செய்வது பிரயோஜனமற்றது. (1 கொரிந்தியர் 7:14-ஐ ஒப்பிடுக.) இன்று அநேகர் கடவுளுடைய ஜனங்களை வேண்டுமென்றே அசட்டை செய்கின்றனர், பரியாசம் செய்கின்றனர், அல்லது நேரடியாக துன்புறுத்துவதில் பங்குகொள்கின்றனர். எனவே, இதுவே முடிவைத் தீர்மானிக்கும் ஒரு காலம்; அப்படிப்பட்டவர்கள் இயேசு வெள்ளாடுகள் என நியாயந்தீர்க்கும் ஆட்களாக உருவாகிக்கொண்டிருக்கக்கூடும்.—மத்தேயு 10:22; யோவான் 15:20; 16:2, 3; ரோமர் 2:5, 6.
24. (அ) நம்முடைய பிரசங்க வேலைக்கு தனிப்பட்ட நபர்கள் சாதகமாக பிரதிபலிக்க வேண்டியது ஏன் முக்கியமானதாய் இருக்கிறது? (ஆ) உங்களுடைய ஊழியத்தின் சம்பந்தமாக என்ன மனநிலை கொண்டிருக்கும்படி இந்தப் படிப்பு உங்களுக்கு தனிப்பட்ட விதத்தில் உதவியிருக்கிறது?
24 ஆனால் சந்தோஷகரமாக அநேகர் சாதகமாக பிரதிபலிக்கின்றனர், கடவுளுடைய வார்த்தையைப் படித்து யெகோவாவுக்கு சாட்சிகளாக ஆகின்றனர். தற்போது வெள்ளாடுகளைப் போல் தோற்றமளிப்பவர்கள் ஒருவேளை மாறி செம்மறியாடுகளைப் போல் ஆகலாம். கிறிஸ்துவின் சகோதரர்களில் மீதியானோரை சுறுசுறுப்பாக ஆதரித்து அவர்களுக்கு செவிகொடுப்பவர்கள் இப்போது சான்றளிக்கின்றனர், அது இயேசு தம்முடைய நியாயத்தீர்ப்பை வழங்குவதற்கு சமீப எதிர்காலத்தில் சிங்காசனத்தில் உட்காரும்போது அவர்கள் இயேசுவின் வலது பக்கத்தில் நிற்பதற்கு ஒரு அடிப்படையை அளிக்கும் என்பதுதான் குறிப்பு. இவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டு வருகிறார்கள், தொடர்ந்து ஆசீர்வதிக்கப்படுவார்கள். ஆகையால், கிறிஸ்தவ ஊழியத்தில் அதிக வைராக்கியமாய் வேலை செய்யும்படி இந்த உவமை நம்மைத் தூண்டியெழுப்ப வேண்டும். காலம் அதிகம் கடந்து செல்வதற்கு முன்பு, ராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிப்பதற்கு நம்மால் ஆன எல்லாவற்றையும் செய்ய நாம் விரும்புவோம், அந்த விதத்தில் மற்றவர்கள் பிரதிபலிப்பதற்கு வாய்ப்பு அளிக்கிறோம். பின்பு குற்றவாளியெனத் தீர்ப்பளிப்பதா சாதகமான தீர்ப்பளிப்பதா என்று நியாயத்தீர்ப்பு வழங்குவது இயேசுவின் பேரில் சார்ந்திருக்கிறது.—மத்தேயு 25:46.
[அடிக்குறிப்புகள்]
a காவற்கோபுரம், பிப்ரவரி 15, 1994, 16-21 பக்கங்களைக் காண்க.
b எல் இவான்ஹெல்யோ டி மாட்டியோ குறிப்பிடுகிறது: “நித்திய ஜீவன் என்பது உறுதியான வாழ்க்கை; அதன் நேர் எதிர்மாறான பொருள் உறுதியான தண்டனை. எயோனியாஸ் என்ற கிரேக்க பெயரெச்சம் கால வரையறையைக் குறிக்காமல் தரத்தை அடிப்படையாகக் குறிக்கிறது. உறுதியான தண்டனை என்பது நித்திய மரணம்.”—ஓய்வுபெற்ற பேராசிரியர் க்வான் மாட்டியோஸ் (பான்டிஃபிக்கல் பிப்ளிக்கல் இன்ஸ்டிட்யூட், ரோம்) மற்றும் பேராசிரியர் ஃபெர்னான்டோ காமாச்சோ (தியலாஜிகல் சென்ட்டர், செவைல்), மாட்ரிட், ஸ்பெய்ன், 1981.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ மத்தேயு 24:29-31 மற்றும் மத்தேயு 25:31-33 ஆகிய வசனங்களுக்கு இடையே உள்ள என்ன இணைப்பொருத்தங்கள், செம்மறியாடுகள் மற்றும் வெள்ளாடுகள் பற்றிய உவமை எதிர்கால பொருத்தத்தை உடையதாயிருக்கிறது என்பதைக் காண்பிக்கின்றன? அது எப்போது?
◻ இயேசுவின் சகோதரர்களில் ‘மிகவும் சிறியவர்கள்’ யாவர்?
◻ ‘நீதிமான்கள்’ என்ற சொற்றொடரை இயேசு உபயோகித்ததானது, இவர்கள் யாரைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர், யாரைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை என்பதை அடையாளம் கண்டுகொள்ள நமக்கு எவ்வாறு உதவுகிறது?
◻ இந்த உவமை எதிர்காலத்தில் நிறைவேற இருக்கிறது என்றாலும், நம்முடைய பிரசங்க வேலை ஏன் இப்போது முக்கியமானதாயும் அவசரமானதாயும் உள்ளது?
[பக்கம் 24-ன் பெட்டி/படம்]
இணைப்பொருத்தங்களை கவனியுங்கள்
மத்தேயு 24:29-31 மத்தேயு 25:31-33
மிகுந்த உபத்திரவம் ஆரம்பித்த பிறகு மனுஷகுமாரன் வருகிறார்
மனுஷகுமாரன் வருகிறார்
மிகுந்த மகிமையோடு வருகிறார் மகிமைபொருந்தினவராய் வந்து தமது
மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல்
வீற்றிருப்பார்
தூதர்கள் அவரோடு இருக்கின்றனர் தூதர்கள் அவரோடுகூட வருகின்றனர்
பூமியிலுள்ள கோத்திரத்தார் அனைவரும் சகல ஜனங்களும் கூட்டிச் சேர்க்கப்படுகின்றனர்;
அவரைக் காண்பார்கள் இறுதியில் வெள்ளாடுகள் நியாயந்தீர்க்கப்படுகின்றனர்
(மிகுந்த உபத்திரவம் முடிவடைகிறது)
[படத்திற்கான நன்றி]
Garo Nalbandian
-