உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • பைபிள் புத்தக எண் 48—கலாத்தியர்
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
    • 16 கோட்பாட்டுக்குரிய பல குறிப்புகளின்பேரில் பவுலின் நிருபம் கலாத்தியருக்கு உதவியாக இருந்தது. உந்துவிக்கும் உதாரணங்களை எபிரெய வேதாகமத்திலிருந்து எடுத்துக் குறிப்பிட்டது. ஏசாயா 54:​1-6-⁠க்கு அது ஏவப்பட்ட விளக்கத்தைக் கொடுத்து, ‘மேலான எருசலேமை’ யெகோவாவின் ஸ்திரீ என அடையாளம் காட்டியது. ஆகாரையும் சாராளையும் பற்றிய ‘அடையாளக் குறிப்பான அர்த்தத்தை’ விளக்கி, கடவுளுடைய வாக்குறுதிகளின் சுதந்தரவாளிகள் கிறிஸ்துவால் சுயாதீனராக்கப்பட்டவர்கள், நியாயப்பிரமாணத்தின் அடிமைத்தனத்தில் நிலைத்திருப்போர் அல்ல என காட்டினது. (கலா. 4:​21-26; ஆதி. 16:​1-4, 15; 21:​1-3, 8-13) ஆபிரகாமிய உடன்படிக்கையை, நியாயப்பிரமாண உடன்படிக்கை ரத்துசெய்யாமல், அதோடு சேர்த்துக்கொள்ளப்பட்டதை இது தெளிவாக விளக்கினது. மேலும் இந்த இரண்டு உடன்படிக்கைகளும் ஏற்படுத்தப்பட்டதற்கு இடையே உள்ள காலப்பகுதி 430 ஆண்டுகள் எனவும் இது குறிப்பிட்டது. இது பைபிள் காலக்கணக்கில் முக்கியமாயுள்ளது. (கலா. 3:​17, 18, 23, 24) இந்தக் காரியங்களின் பதிவு இன்று கிறிஸ்தவ விசுவாசத்தைக் கட்டியெழுப்புவதற்கு பாதுகாக்கப்பட்டிருக்கிறது.

      17. (அ) கலாத்தியர் எதை முக்கியமாய் அடையாளம் காட்டுகிறது? (ஆ) ராஜ்ய சுதந்தரவாளிகளுக்கும் அவர்களோடு சேர்ந்து உழைப்போருக்கும் என்ன சிறந்த அறிவுரை கொடுக்கப்படுகிறது?

      17 அதிமுக்கியமாக, தீர்க்கதரிசிகள் அனைவரும் எதிர்நோக்கியிருந்த ராஜ்ய வித்தை கலாத்தியர் புத்தகம் வெகு தெளிவாக அடையாளம் காட்டுகிறது. ‘ஆபிரகாமுக்கும் அவருடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; . . . அந்தச் சந்ததி கிறிஸ்துவே.’ கிறிஸ்து இயேசுவில் விசுவாசம் வைப்பதன்மூலம் கடவுளுடைய குமாரராகிறவர்கள் இந்த வித்துக்குள் புத்திரசுவிகாரம் பெற்றவர்களாய் காட்டப்படுகின்றனர். “நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்.” (3:​16, 29) கலாத்தியரில் காணப்படும் இந்தச் சிறந்த அறிவுரைக்கு ராஜ்ய சுதந்தரவாளிகளும் அவர்களோடு சேர்ந்து உழைப்போரும் கவனம் செலுத்த வேண்டும்: ‘கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்.’ ‘நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருங்கள்; தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.’ ‘யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தாருக்கும், நன்மைசெய்யுங்கள்.’​—⁠5:1; 6:⁠9, 10.

      18. எந்த உறுதியான எச்சரிக்கையும் அறிவுரையும் கலாத்தியரில் கொடுக்கப்பட்டுள்ளன?

      18 கடைசியாக, மாம்சத்தின் கிரியைகளில் பழக்கமாய் ஈடுபடுபவர்கள், “தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை” என்ற உறுதியான எச்சரிக்கை கொடுக்கப்படுகிறது. அவ்வாறெனில், எல்லாரும், உலகப்பிரகாரமான அசுத்தத்தையும் சண்டை சச்சரவுகளையும் விட்டு முற்றிலும் விலகி, “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” ஆகிய ஆவியின் கனிகளைப் பிறப்பிப்பதில் தங்கள் இருதயத்தை ஊன்ற வைப்பார்களாக.​—⁠5:​19-23.

  • பைபிள் புத்தக எண் 49—எபேசியர்
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
    • பைபிள் புத்தக எண் 49—எபேசியர்

      எழுத்தாளர்: பவுல்

      எழுதப்பட்ட இடம்: ரோம்

      எழுதி முடிக்கப்பட்டது: ஏ. பொ.ச. 60-61

      1. எப்போது, எந்தச் சூழ்நிலைமையில் எபேசியருக்கு இந்த நிருபத்தை பவுல் எழுதினார்?

      நீங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக சற்று கற்பனை செய்து கொள்ளுங்கள். கிறிஸ்தவ மிஷனரியாக உங்கள் அயராத ஊழியத்தின் காரணமாகவே துன்புறுத்துதலை அங்கு அனுபவிக்கிறீர்கள். சபைகளைச் சந்தித்துப் பலப்படுத்துவதற்காக இனிமேலும் நீங்கள் பயணம் செய்ய முடியாது. இப்படிப்பட்ட நிலையில் நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்? உங்கள் பிரசங்க ஊழியத்தின் பலனாய் கிறிஸ்தவர்கள் ஆனவர்களுக்குக் கடிதங்கள் எழுதுவீர்கள் அல்லவா? உங்கள் நிலை குறித்து அவர்கள் ஒருவேளை கவலைப்படலாம்; ஆகவே அவர்களுக்கு ஊக்குவித்தல் ஒருவேளை தேவைப்படலாம். நிச்சயமாகவே அவர்களுக்கு அது தேவைதான். ஆகவே நீங்கள் எழுத ஆரம்பிக்கிறீர்கள். ஏறக்குறைய பொ.ச. 59-61-⁠ல், அப்போஸ்தலன் பவுல் ரோமில் முதல் தடவை சிறைப்பட்டிருக்கையில் செய்ததையே நீங்கள் இப்போது செய்கிறீர்கள். அவர் இராயனுக்கு மனு செய்திருந்தார். விசாரணையை எதிர்நோக்கி காவலிலிருந்தபோதிலும், சில காரியங்களைச் செய்ய அவருக்குச் சுதந்திரம் அளிக்கப்பட்டிருந்தது. பெரும்பாலும் பொ.ச. 60-⁠ல் அல்லது 61-⁠ல் பவுல், ரோமிலிருந்து “எபேசியருக்கு” தன் நிருபத்தை எழுதினார்; அதை தீகிக்குவின் மூலம் அனுப்புகையில், ஒநேசிமுவும் அவரோடுகூட சென்றார்.​—⁠எபே. 6:21; கொலோ. 4:​7-9.

      2, 3. எபேசியர் நிருபத்தை பவுல் எழுதினார் என்பதையும், அதே சமயத்தில், இது பைபிளின் அதிகாரப்பூர்வ பட்டியலை சேர்ந்தது என்பதையும் எது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கிறது?

      2 முதல் வாக்கியத்திலேயே தன்னை எழுத்தாளராக பவுல் அடையாளம் காட்டுகிறார். மேலும், நேரடியாகவோ மறைமுகமாகவோ தன்னை ‘ஆண்டவருக்குள் கைதி’ என்பதாக நான்கு தடவை குறிப்பிடுகிறார். (எபே. 1:1; 3:​1, 13; 4:1; 6:​19; தி.மொ.) பவுல் எழுத்தாளர் அல்ல என்பதற்கான விவாதங்கள் பயனற்று போயிருக்கின்றன. பவுலின் நிருபங்கள் அடங்கிய ஒரு கையெழுத்துச் சுவடியின் 86 தாள்கள், சுமார் பொ.ச. 200-⁠ஐச் சேர்ந்ததாக கருதப்படும் செஸ்டர் பியட்டி பப்பைரஸ் எண் 2 (P46)-⁠ல் உள்ளன. இத்தாள்களுள் எபேசியருக்கு எழுதின இந்த நிருபமும் உள்ளது. இவ்வாறு, அவருடைய நிருபங்களில் ஒன்றாக அது அந்தச் சமயத்தில் வகைப்படுத்தப்பட்டது தெரிகிறது.

      3 இந்த நிருபத்தைப் பவுல் எழுதினார் என்றும் இது “எபேசியருக்கு” எழுதப்பட்டதென்றும் ஆரம்ப கால திருச்சபை எழுத்தாளர்கள் உறுதிசெய்கின்றனர். உதாரணமாக, பொ.ச. இரண்டாம் நூற்றாண்டின் ஐரீனியஸ், எபேசியர் 5:​30-ஐ இவ்வாறு மேற்கோள் காட்டினார்: “ஆசீர்வதிக்கப்பட்ட பவுல் எபேசியருக்கு எழுதின நிருபத்தில் நாம் அவருடைய சரீரத்தின் உறுப்பினரென்று சொல்லுகிறபடி.” அதே சமயத்தில் வாழ்ந்த அலெக்ஸாண்டிரியாவின் கிளெமென்ட் பின்வருமாறு அறிவிக்கையில் எபேசியர் 5:​

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்