பாட்டு 161
யெகோவாவிடம் நாள்தோறும் ஜெபிப்பீரே
1. யெகோவாவிடம் ஜெபம் செய்வீரே.
ஜெபம்கேட்கிறார், இது சிலாக்கியமே.
அவரிடம் பேசதயங்கோமே.
அவர் நம்தந்தை, மன்றாடுவோமே.
நாள்தோறும் ஜெபிப்பீரே.
2. ஒவ்வொரு நாளும் ஜெபம் செய்வீரே.
மன்னிப்பு கேட்பீர், நீர் மன்னிப்பீரே.
சோதனையில் உதவிநாடுவோம்.
அவர் பாதுகாப்பில் நாம் அஞ்சிடோம்.
நாள்தோறும் ஜெபிப்பீரே.
3. இன்னல் வேளையில் ஜெபம் செய்வீரே.
பாரத்தை அவர்மேல் வைக்கலாமே.
கவலைகளையும் தெரிவிப்போம்.
இவ்வாசீர்வாதத்தையும் நாம் பெற்றோம்.
நாள்தோறும் ஜெபிப்பீரே.
4. யெகோவாவுக்கு நன்றி சொல்வீரே.
ஸ்தோத்திரங்களும் சேர்த்துக்கொள்வீரே.
உண்மை மனதோடு பேசுவீரே.
அவர் நற்குணத்தையும் காண்போமே.
நாள்தோறும் ஜெபிப்பீரே.