-
மிகப்பெரிய மனிதரைப்பற்றி கற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உதவிசெய்யுங்கள்ராஜ்ய ஊழியம்—1993 | ஜூன்
-
-
மிகப்பெரிய மனிதரைப்பற்றி கற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உதவிசெய்யுங்கள்
1 எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர் புத்தகத்தை வாசித்திருக்கிற அநேகர், அது தங்களுடைய வாழ்க்கையின்மீது கொண்டிருந்திருக்கிற பாதிப்புக்காக உண்மையான போற்றுதலைத் தெரிவித்திருக்கின்றனர். ஒருவர் இவ்வாறு எழுதினார்: “நான் அந்தப் புத்தகத்தின் முடிவுக்கு வந்தபோது, இயேசுவோடு கூட்டுறவுகொள்வதற்கு, அவருடைய பக்கத்தில் வாழ்வதற்கு, அவருடைய பாடுகளில், அவருடைய உணர்ச்சிகளில், அவருடைய ஊழியத்தின் ஒவ்வொரு அம்சத்தில் பங்குகொள்வதற்கு அவரால் அழைக்கப்பட்டதுபோல் உணர்ந்தேன். . . . அந்தப் புத்தகத்தை வாசிப்பது, இயேசுவின் வாழ்க்கைப்பற்றிய ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது.”
2 மிகப்பெரிய மனிதர் புத்தகம் இயேசுவோடு மட்டுமல்லாமல், யெகோவாவோடும் நன்கு அறிமுகமாவதற்கு நமக்கு உதவிசெய்கிறது. (யோவா. 14:9) பன்னிரண்டு வயதுடைய ஒருவன் அந்தப் புத்தகத்தைக்குறித்து இவ்விதமாகச் சொன்னான்: “நான் அதை வாசித்த உடனேயே, ஆனந்தக் கண்ணீரோடு யெகோவாவிடம் ஜெபிக்கும் அளவுக்கு எனக்கு அதிக ஆறுதலைத் தந்தது. யெகோவாவும் இயேசுவும் நம்மைக் கவனித்துக்கொண்டிருக்கின்றனர் என்பதை அறிவதன்மூலம் நான் ஆழமாக இருதயத்திற்குள் மறு நம்பிக்கையளிக்கப்பட்டேன்.” யோவான் 17:3-ல் பதிவுசெய்யப்பட்டிருக்கிறபடி, யெகோவாவையும் அவருடைய குமாரனையும் அறிவது நமக்கு நித்திய ஜீவனை அர்த்தப்படுத்துகிறது என்று இயேசு சொன்னார். இயேசுவின் வாழ்க்கையைப்பற்றிய இந்தப் புத்தகத்தைப் படிப்பது, நமக்கு யெகோவாவின் ஆளுமைக்குள் விசேஷித்த உட்பார்வையை அளிக்கிறது, ஏனென்றால் இயேசு, “அவருடைய தன்மையின் சொரூபமாயிரு”க்கிறார்.—எபி. 1:3.
3 மிகப்பெரிய மனிதர் புத்தகத்தின் பிரதிகள் 1 கோடியே 90 லட்சத்திற்கும் அதிகமாக, 70 மொழிகளுக்கும் மேலாக அச்சிடப்பட்டிருக்கின்றன. இந்தப் புத்தகம் எவ்வளவு அதிகமாக வரவேற்கப்படுகிறது என்பதை இது காட்டுகிறது. அநேகர் அதைப் பெற்றவுடனே முழுப் புத்தகத்தையும் வாசிக்கின்றனர். அக்கறையுள்ள மனிதர் ஒருவர் அதைப் பெற்றுக்கொண்ட இரண்டு வாரங்களுக்குள் முழுவதும் வாசித்துவிட்டார். அந்தப் புத்தகத்தை ஏற்றுக்கொண்ட ஒரு பாதிரியார் இவ்விதமாகக் குறிப்பிட்டார்: “என்னால் அந்தப் புத்தகத்தைக் கீழே வைக்கமுடியவில்லை. என் மனைவியும் நானும் ஒவ்வொரு இரவும் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக அதிலுள்ள சிலவற்றைப் படிக்கிறோம்.”
4 சந்தர்ப்ப சாட்சிகொடுத்தல்: மிகப்பெரிய மனிதர் புத்தகத்தை ஒரு சகோதரர் தன்னுடைய வேலை செய்யுமிடத்திலுள்ள மக்களுக்குக் காண்பித்தார். இந்தப் புத்தகத்தை அவர் வைத்திருந்த செய்தி சுற்றிலும் பரவி, அதில் அடங்கியுள்ளதுபற்றிய கருத்துக்கள் பரவின. அவருடைய உடன் வேலையாட்கள், அதன் பிரதி தேவைப்படுகிறவர்களின் பட்டியல் ஒன்றைத் தயாரித்தனர். அவர் 461 புத்தகங்களை அளித்தார்! அதைப் பெற்றவர்களில் ஐந்து பேர் படித்துக்கொண்டிருக்கின்றனர். ஒரு சகோதரி, விமானத்தில் பிரயாணம் செய்கையில், ஒரு புதிய திருச்சபை உறுப்பினரின் பதவியளிப்பில் கலந்துகொள்ளச் சென்றுகொண்டிருந்த பாதிரியிடம் மிகப்பெரிய மனிதர் புத்தகத்தை அளித்தாள். இந்தப் பாதிரி வாடிகனில் 40 ஆண்டுகளாக இருந்துவந்திருக்கிறார். நாம் அனைவரும் மற்றவர்களுக்கு இந்தப் புத்தகத்தை சிபாரிசுசெய்வதற்கான வாய்ப்புகளை முழுமையாக அனுகூலப்படுத்திக்கொள்ளவேண்டும்.
5 இளைஞர்கள் அதைப் போற்றுகின்றனர்: வாலிபர்கள் அந்தப் புத்தகத்தில் அதிக அக்கறை காட்டிவருகின்றனர். ஒன்பது வயதான ஒருவன் இவ்விதமாக எழுதினான்: “எனக்கு விருப்பமான பிரசுரம், எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர், ஏனென்றால் நான் அதிலிருந்து அதிகத்தைக் கற்றுக்கொள்கிறேன்.” நாம் வெளி ஊழியத்தில் இளைஞர்களைச் சந்திக்கும்போது, அவர்களுடைய பெற்றோர் ஒத்துக்கொள்கிறவர்களாய் இருந்தால், இந்த இளைஞர்களுக்கு அந்தப் புத்தகத்தைக் காட்டி அதனுடைய சில முக்கியக்குறிப்புகளையும் கலைநயம்வாய்ந்தப் படங்களையும் விமர்சிப்பதற்கு நேரத்தை எடுத்துக்கொள்ளவேண்டும். நாம் இந்த வாலிபர்களுக்குப் புத்தகங்களை அளிக்கக்கூடியவர்களாய் இருக்கலாம். இயேசுவைப்பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்போது, இளைஞர்கள் இன்று அவரோடு தொடர்புகொண்டவர்களாயிருக்க முடியும். இயேசு ஓர் அணுகக்கூடிய நபராக இருந்தார்.—மத். 19:14, 15.
6 மிகப்பெரிய மனிதர் புத்தகத்தை வாசிப்பது மக்களுடைய வாழ்க்கையை மாற்றமுடியும். அதன் பொருளடக்கத்தோடு அநேகர் அறிமுகமாவதற்கு உங்களால் முடிந்த அளவுக்கு முயற்சிசெய்யுங்கள். அந்தப் புத்தகத்தினுடைய முகவுரையின் கடைசி பக்கத்தில், “அவரைப் பற்றிக் கற்றறிவதன் மூலம் பயனடையுங்கள்” என்ற உபதலைப்பின்கீழுள்ள பொருளைப் பயன்படுத்துங்கள். இந்தப் புத்தகத்தை வாசிப்பதிலிருந்து மக்கள் எதைப் பெறமுடியும் என்பதன்பேரில் ஒருமுகப்படுத்துவதற்கு இந்தத் தகவல் அவர்களுக்கு உதவிசெய்யும். இந்தப் புத்தகத்தை வாசித்த பிறகு ஒரு நபர் வியந்ததுபோன்று, உங்கள் பிராந்தியத்திலுள்ள அநேகர் இவ்விதமாக வியந்துரைக்கலாம்: “நான் வாசித்த புத்தகங்களிலேயே மிகச்சிறந்த புத்தகம் இதுதான்! அது என்னுடைய வாழ்க்கையை மாற்றியது.”
-
-
இன்று நம்முடைய ஊழியத்தில் துண்டுப்பிரதிகள்ஏன் அவ்வளவு மதிப்புவாய்ந்தவையாய் இருக்கின்றனராஜ்ய ஊழியம்—1993 | ஜூன்
-
-
இன்று நம்முடைய ஊழியத்தில் துண்டுப்பிரதிகள்ஏன் அவ்வளவு மதிப்புவாய்ந்தவையாய் இருக்கின்றன
1 ஜனவரி 1, 1991, காவற்கோபுரம் இதழ் (ஆங்கிலம்) பக்கம் 30-ல், “இருப்புப்பாதையில் அவர் ஒரு துண்டுப்பிரதியைக் கண்டுபிடித்தார்” என்று தலைப்பிடப்பட்ட ஓர் அனுபவம் இருந்தது. நம்முடைய துண்டுப்பிரதிகளில் ஒன்று தண்டவாளத்தின்கீழ் செருகிவைக்கப்பட்டிருந்ததைக் கண்ட ஒரு ரெயில்பாதை பராமரிப்பு மேற்பார்வையாளரைப்பற்றி அது சொன்னது. அவர் உடனடியாக அந்தத் துண்டுப்பிரதியை வாசித்தார், பிறகு தன்னுடைய மருமகனிடம் இவ்வாறு சொன்னார்: “இன்று நான் சத்தியத்தைக் கண்டுபிடித்துவிட்டேன்!” இரண்டு மனிதரும் அதிகமான புத்தகத்தை ஆர்டர்செய்து அதைப் படித்தனர். இப்பொழுது, நூற்றுக்கும் மேலான அவர்களுடைய வம்சத்தினர்கள் சத்தியத்தில் சுறுசுறுப்பாக இருக்கின்றனர். வெறுமனே ஒரு துண்டுப்பிரதியை வாசிப்பதிலிருந்து என்ன விளைவடையக்கூடும் என்பதை இது காட்டுகிறது.
2 வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுதல்: எல்லா இடங்களிலுமுள்ள சகோதரர்கள் துண்டுப்பிரதிகளை அளிப்பதற்கு வாய்ப்புகளைப் பயன்படுத்திவருகின்றனர். தன்னுடைய பள்ளி ஆசிரியை அவருடைய மாமியாரின் மரணத்தின் காரணமாக வருத்தமாக இருந்தார் என்று ஓர் இளம் சாட்சி கவனித்தாள். இந்த இளம் சகோதரி தன்னுடைய ஆசிரியைக்கு ஆறுதலான ஒரு கடிதம் எழுதி, மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை? என்ற துண்டுப்பிரதியை உறையிலடைத்து அனுப்பினாள். அந்த ஆசிரியை ஒரு நன்றி கடிதத்தை எழுதினார், பிறகு நம்முடைய இளம் சகோதரியோடு பேசினார். இப்பொழுது இந்த ஆசிரியை அவளிடமிருந்து ஒழுங்காகப் பத்திரிகைகளைப் பெற்றுக்கொள்கிறார்.
3 கல்லறைக்குச் செல்லும் வழியிலிருந்து ஒரு தெருவில் சாட்சிகொடுத்துக்கொண்டிருந்த சில பிரஸ்தாபிகள், கல்லறைகளுக்கு ஆட்கள் வெள்ளையடிப்பதைப் பார்த்தனர். அவர்களுக்குத் துண்டுப்பிரதிகளை அளிப்பதற்கு அந்தப் பிரஸ்தாபிகள் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டனர். அடுத்த நாள் விடுமுறையாக இருந்தது, அதனால் அநேக மக்கள் கல்லறையைப் பார்வையிட வருவார்கள், ஆகவே அந்தப் பிரஸ்தாபிகள் கல்லறையின் நுழைவாயிலில் நின்றுகொண்டு துண்டுப்பிரதிகளை அளிப்பதற்குத் தீர்மானித்தனர். ஐந்நூறுக்கும் மேற்பட்ட துண்டுப்பிரதிகள் அளிக்கப்பட்டன, மூன்று நபர்கள் மட்டுமே அவற்றை மறுத்தனர். அடுத்த ஆண்டில், பிரஸ்தாபிகள் திரும்பவும்சென்று ஆயிரத்திற்கும் மேலான துண்டுப்பிரதிகளை வழங்கினர், ஆறு மறுப்புகள் மட்டுமே. பெரும்பாலான தனிப்பட்ட ஆட்கள் ஆழ்ந்த போற்றுதலை வெளிப்படுத்தினர். ஒரு மனிதன் சென்றுகொண்டிருந்தபோது துண்டுப்பிரதியை வாசித்தார், அதைத் தனக்குக் கொடுத்த சகோதரியிடம் பேசுவதற்குச் சீக்கிரத்தில் திரும்பிவந்தார். அவர் சொன்னார்: “இந்தச் செய்தியை வாசிக்கும்படி நான் விரும்புகிற ஒருவர் இருக்கிறார். எனக்கு இன்னொன்று தருவீர்களா?”
4 துண்டுப்பிரதிகள் கையடக்கமான அளவிலும் நாம் எங்குச் சென்றாலும் நம்மோடு எடுத்துச்செல்வதற்கு எளிதாகவும் இருக்கின்றன. மற்றவர்களுடன் சந்தர்ப்ப சம்பாஷணைகளைக் கொண்டிருக்கும்பொழுது, அந்நியர்களாக இருந்தாலுஞ்சரி, அறிமுகமானவர்களாக இருந்தாலுஞ்சரி, நமக்கு இப்பொழுது கிடைக்கக்கூடிய எட்டுத் துண்டுப்பிரதிகளில் ஒன்றுக்கு வழிநடத்தக்கூடிய சுருக்கமான ஒரு செய்தியைக் கொடுப்பதற்கு நாம் முயற்சிசெய்யவேண்டும். அயலகத்தாருடன் பேசும்போது, கடைக்குச் செல்லும்போது அல்லது ஒரு சந்திப்புத் திட்டத்திற்காக காத்துக்கொண்டிருக்கும்போது, உறவினர்களைச் சந்திக்கும்போது, அல்லது மற்ற அநேக சூழ்நிலைகளில் இது செய்யப்படலாம்.
5 ஏன் பயனளிக்கக்கூடியது: துண்டுப்பிரதிகள் கவர்ந்திழுக்கும் விதமாக அக்கறையூட்டுபவையாய் இருக்கின்றன. அவை சுருக்கமாய் இருக்கின்றன. வீட்டுக்காரர்களும் நாம் சந்தர்ப்பச் சூழ்நிலைமைகளில் சந்திக்கிறவர்களும், விரிவான வாசிப்பைச் செய்வதற்குக் கடமைப்பட்டு, உணர்ச்சியினால் மேற்கொள்ளப்படுகிறதில்லை. என்றபோதிலும், செய்தியானது கிரகித்துக்கொள்ளத்தக்கதாகவும் தகவலளிக்கக்கூடியதாகவும் இருக்கிறது. வாசிப்பவர் துண்டுப்பிரதியில் சொல்லப்பட்டுள்ள விவாதத்தின் பலமான வேதப்பூர்வ நோக்குநிலையைப் பெறுகிறார். சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை என்ற துண்டுப்பிரதியைப் பெற்றுக்கொண்டு, அதைத் தன்னோடு விமர்சனம்செய்ததைக் கேட்ட பிறகு, ஓர் இளைஞன் இவ்விதமாக உணர்ச்சியோடு சொன்னார்: “உலக சூழ்நிலைமையைப்பற்றிய இத்தகைய உற்சாகமளிக்கும் தகவலை நான் ஒருபோதும் கேட்டதில்லை!”
6 நாம் இந்தத் துண்டுப்பிரதிகளைப் பொருத்தமான எல்லா சமயத்திலும் பயன்படுத்துவதற்கு விரும்புகிறோம். அநேக பிரஸ்தாபிகள் வீட்டுக்கு வீடு வேலையில் சம்பாஷணைகளைத் தொடங்கச்செய்வதில் அவற்றைப் பயனுள்ளவையாகக் கண்டிருக்கின்றனர். இப்பொழுது நடத்தப்படுகிற பெரும்பாலான படிப்புகள் ஒரு துண்டுப்பிரதியுடன் ஆரம்பிக்கப்பட்டவையாகும். இந்த நம் ராஜ்ய ஊழியம் பிரதியின் 4-வது பக்கத்தில், துண்டுப்பிரதிகளை எவ்வாறு பலன்தரும் விதமாக பயன்படுத்துவது என்பதன்பேரில் சில நடைமுறையான ஆலோசனைகள் இருக்கின்றன. ஆம், துண்டுப்பிரதிகள் சிறியவை, ஆனால் நம்முடைய ஊழியத்திற்கு மதிப்புவாய்ந்த கருவிகள்.
-