பாட்டு 154
யெகோவா, நம் சிருஷ்டிகர்
1. யெகோவா இப்பூமியை வடிவமைத்தார்.
மனிதன் குடியிருக்கக் கொடுத்தார்.
படைப்பைக் கண்டு திரளான தூதர்கள்
மிகவும் மகிழ்ந்து ஆர்ப்பரித்தார்கள்.
2. பூமி அழகிய பரதீஸாகுமே.
யெகோவாவின் ஆணையிட்ட நோக்கமே.
தவறான தெரிவால் பாவம் வந்ததே.
இது முடிவடையும். மகிழ்வோமே.
3. தேவராஜ்யம் காரியங்களை
சீர் செய்யும் காத்திருப்போமே, அக்காலம் வரும்.
நற்செய்தி அறிவிப்பதில் மகிழ்கிறோம்.
சத்திய ஒளியால் இருள் போக்குகிறோம்.
4. யெகோவாவை அன்பால் நோக்கியிருக்கிறோம்.
எங்கள் சிருஷ்டிகர் நாங்கள் துதிக்கிறோம்.
எல்லாவற்றையும் ஞானமாய்ப் படைத்தாரே!
அவரை முழுமையாய் சேவிப்போமே.