உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நம் பத்திரிகைகளை மிக நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்
    ராஜ்ய ஊழியம்—1996 | ஜனவரி
    • 16 பத்திரிகைகளுக்கான போற்றுதலைக் காண்பியுங்கள்: ஜூலை 1993 நம் ராஜ்ய ஊழிய இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள “காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு!-வை நன்றாய் பயன்படுத்துதல்” என்ற கட்டுரை இந்த முக்கியமான குறிப்பைக் கொடுத்தது: “காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு-வை அவற்றின் இதழ் தேதியின் ஓரிரண்டு மாதத்திற்குள் அவை அனைத்தும் அளிக்கப்படாவிட்டாலுங்கூட, அவற்றினுடைய மதிப்பை இழந்துவிடுவதில்லை என்பதை நினைவிற்கொள்ளுங்கள். அவற்றில் அடங்கியிருக்கிற தகவல் காலவோட்டத்தினால் குறைந்த முக்கியத்துவமுடையதாக ஆகிறதில்லை, . . . பழைய பத்திரிகைகளைக் குவித்துவைக்க அனுமதித்து அவற்றை ஒருபோதும் பயன்படுத்தாமல் இருப்பது, இந்த மதிப்புவாய்ந்த கருவிகளுக்கான போற்றுதல் குறைவுபடுவதைக் காட்டுகிறது. . . . பழைய இதழ்களை புறம்பாக ஒதுக்கி வைத்துவிட்டு அவற்றைக் குறித்து மறந்துவிடுவதற்குப் பதிலாக, அக்கறையுள்ள மக்களின் கைகளில் அவற்றைக் கொடுப்பதற்கு ஒரு விசேஷித்த முயற்சி செய்வது அல்லது குறைந்தபட்சம் மக்கள் வீட்டில் இல்லாதபோது ஓர் ஒதுக்கமான இடத்தில் விட்டுவருவது சிறந்ததாக இருக்குமல்லவா?”

      17 சத்தியத்திற்காக தேடுகிற நேர்மை இருதயமுள்ள ஆட்கள் இன்றைக்கு அநேகர் இருக்கிறார்கள். ஒரு பத்திரிகையில் அடங்கியுள்ள தகவல், அவர்களை சத்தியத்திற்கு வழிநடத்த அவசியமானது எதுவோ சரியாக அதுவாகவே இருக்கக்கூடும்! அறிவிப்பதற்கு யெகோவா நமக்கு கிளர்ச்சியூட்டும் செய்தியைக் கொடுத்திருக்கிறார், மற்றவர்களுக்கு செய்தியைக் கொண்டுசெல்வதில் நம்முடைய பத்திரிகைகள் ஓர் இன்றியமையா பங்கை வகிக்கின்றன. எதிர்காலத்தில் பத்திரிகையை விநியோகிப்பதில் நீங்கள் அதிக அக்கறையுடையவராய் இருப்பீர்களா? இந்த வார இறுதியிலேயே இந்த ஆலோசனைகள் சிலவற்றை நீங்கள் பொருத்திப் பயன்படுத்துவீர்களா? நீங்கள் செய்வீர்களானால் அபரிமிதமாக ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.

      நடைமுறையான ஆலோசனைகள்:

      ◼ பத்திரிகைகளை முன்கூட்டியே வாசியுங்கள், கட்டுரைகளை நன்கு தெரிந்துவைத்திருங்கள்.

      ◼ உங்களுடைய சமுதாயத்திலுள்ளவர்களுக்கு பொதுவாக அக்கறையூட்டும் ஒன்றைக் கலந்தாராய்கிற கட்டுரையை தெரிந்தெடுங்கள்.

      ◼ ஆண்களாக இருந்தாலும்சரி, பெண்களாக இருந்தாலும்சரி, இளைஞர்களாக இருந்தாலும்சரி, பலதரப்பட்ட ஆட்களுக்கு பொருத்தமாயிருக்கும் பிரசங்கம் ஒன்றை தயார்செய்யுங்கள். பத்திரிகை வீட்டுக்காரருக்கு எவ்வாறு பொருந்துகிறது, அந்த முழுக் குடும்பமும் எவ்வாறு அதை அனுபவித்து மகிழும் என்பதை காண்பியுங்கள்.

      ◼ பெரும்பாலான மக்கள் வீட்டில் இருக்கிற சமயத்தில் உங்களுடைய வெளி ஊழிய நடவடிக்கையில் ஈடுபட திட்டமிடுங்கள். சில சபைகள் பத்திரிகைகளைக் கொண்டு மாலைநேர ஊழியம் செய்வதற்காக திட்டமிடுகின்றன.

      ◼ உங்களுடைய பிரசங்கத்தை சுருக்கமாகவும் குறிப்பாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.

      ◼ அதிக வேகமாக பேசாதீர்கள். உங்களுக்கு செவிசாய்ப்பவருக்கு விருப்பம் இல்லையென்றால், வேகமாக பேசுவது உதவியளிக்காது. தளர்ந்த நிலையிலிருக்க முயலுங்கள், வீட்டுக்காரர் பேசுவதற்கு வாய்ப்பளியுங்கள்.

      பத்திரிகைகளை வீட்டுக்கு வீடு அளித்தல்:

      ◼ சிநேகப்பான்மையான புன்முறுவலையும் அன்பான குரல் தொனியையும் கொண்டிருங்கள்.

      ◼ பத்திரிகைகளைக் குறித்து ஆர்வமுள்ளவராயிருங்கள்.

      ◼ மெதுவாகவும் தெளிவாகவும் பேசுங்கள்.

      ◼ ஒரேவொரு பொருளின்பேரில் பேசுங்கள்; வீட்டுக்காரருடைய அக்கறையைத் தூண்டி, அதன் மதிப்பை அவருக்கு சுருக்கமாக கூறுங்கள்.

      ◼ ஒரேவொரு கட்டுரையை மட்டும் சிறப்பித்துக் காட்டுங்கள்.

      ◼ ஒரேவொரு பத்திரிகையை மட்டும் முக்கியப்படுத்திக் காண்பித்து, மற்றதை துணைப்பிரதியாக அளியுங்கள்.

      ◼ பத்திரிகையை வீட்டுக்காரருடைய கையில் கொடுத்துவிடுங்கள்.

      ◼ நீங்கள் மறுபடியும் வருவதற்கு திட்டமிட்டிருக்கிறீர்கள் என்பதை வீட்டுக்காரருக்குத் தெரியப்படுத்துங்கள்.

      ◼ பத்திரிகைகள் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டால், சிநேகப்பான்மையான, சாதகமான முடிவுரையைக் கொண்டிருங்கள்.

      ◼ அக்கறைகாட்டிய அனைவரையும் அளிப்புகள் அனைத்தையும் வீட்டுக்கு வீடு பதிவுச் சீட்டில் குறித்துக்கொள்ளுங்கள்.

      பத்திரிகைகளை அளிப்பதற்கு வாய்ப்புகள்:

      ◼ வீட்டுக்கு வீடு சாட்சிகொடுத்தல்

      ◼ தெரு ஊழியம்

      ◼ கடைக்குக் கடை ஊழியம்

      ◼ பத்திரிகை மார்க்கம்

      ◼ மாலைநேர சாட்சிகொடுத்தல்

      ◼ மறுசந்திப்புகள் செய்கையில்

      ◼ முன்னாள் பைபிள் மாணாக்கர்களை சந்தித்தல்

      ◼ பயணம் செய்யும்போது, கடையில் பொருட்களை வாங்கும்போது

      ◼ உறவினர், உடன் பணிபுரிவோர், அயலகத்தார், பள்ளித் தோழர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடத்தில் பேசும்போது

      ◼ பொது மக்கள் போக்குவரத்தில், ஓய்வறைகளில்

  • கம்ப்யூட்டர் தொழிற்நுட்பத்தைக் குறித்து சமநிலையான ஓர் நோக்கை காத்துக்கொள்ளுதல்
    ராஜ்ய ஊழியம்—1996 | ஜனவரி
    • கம்ப்யூட்டர் தொழிற்நுட்பத்தைக் குறித்து சமநிலையான ஓர் நோக்கை காத்துக்கொள்ளுதல்

      1 கவனம் சிதறடிக்கப்படாதவாறு பார்த்துக்கொள்ளும்படிக்கு முதல் நூற்றாண்டிலிருந்த கிறிஸ்தவர்களை அப்போஸ்தலன் பவுல் உந்துவித்தார், ஏனென்றால் ‘இனிவரும் காலம் குறுகியது.’ (1 கொ. 7:29) இந்தப் பழைய காரிய ஒழுங்குமுறையின் முடிவு நெருங்கிவருகிறபடியால், ‘முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுவதும்,’ ‘வாய்ப்பான நேரத்தை வாங்குவதும்’ நமக்கு எவ்வளவு அவசரமானதாயிருக்கிறது! காலம் பொன்போன்றது.—மத். 6:33; எபே. 5:15, 16, NW.

      2 தொழிற்நுட்பம் ஓர் மகத்தான நேர சேமிப்பாளனாக வாழ்த்தி வரவேற்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஒரு கம்ப்யூட்டர் பட்டனைத் தட்டினாலே போதும், பயன்படுத்துபவர் திரளான தகவலை உடனடியாகப் பெறமுடியும். மற்ற முறைகளில் மணிக்கணக்காக அல்லது வாரக்கணக்காக செய்யக்கூடிய வேலையை பெரும்பாலும் ஒருசில வினாடிகளில் கம்ப்யூட்டர் செய்துவிட முடியும். சரியான முறையில் பயன்படுத்தப்படும்போது, அவை ஓர் பயனுள்ள கருவி.

      3 அது உண்மையிலேயே நேரத்தை சேமிக்குமா?: மறுபட்சத்தில், கணிசமானளவு பணமும் நேரமும் செலவழிக்காமல் இத்தகைய தொழிற்நுட்பம் பயன்படுத்துபவர் கைக்கு வராது. சில வேலைகளைக் கம்ப்யூட்டரில் எவ்வாறு செய்வது என்பதைக் கற்றுக்கொள்வது அநேக மணிநேரங்களை எடுக்கலாம். மேலுமாக, அந்தத் தொழிற்நுட்பத்தையே அறிய ஆவல்கொண்டவராய் மாறுகிற ஒரு நபர், மேம்பட்ட விதத்தில் செலவழித்திருக்கக்கூடிய நேரத்தை இதற்காக செலவழித்துவிடக்கூடும். ‘உங்களுக்காக வாய்ப்பான நேரத்தை வாங்கி, ஞானமுள்ளவர்களாக’ நடக்கும்படி அப்போஸ்தலன் பவுல் கொடுத்த அறிவுரையில் உட்பட்டுள்ள நியமத்தை மனதிற்கொண்டு, நாம் சமநிலையான ஒரு நோக்கை காத்துக்கொள்ள வேண்டும்.—1 கொரிந்தியர் 7:31-ஐக் காண்க.

      4 நல்லெண்ணமுள்ள தனிநபர்கள் அநேகர், சபையின் பதிவுகளைப் பாதுகாத்து வைப்பதற்காக கம்ப்யூட்டர் புரோகிராம்களை வடிவமைத்திருக்கிறார்கள். ஒருவர் எவ்வாறு தன்னுடைய கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகிறார் என்பது தனிப்பட்ட ஒரு தீர்மானம்தான். என்றபோதிலும், சபை பதிவுகளுக்காக கொடுக்கப்பட்டுள்ள நமூனாக்களை கம்ப்யூட்டர்களில் பதிவுசெய்து வைக்கக்கூடாது, ஏனெனில் பிள்ளைகள் அல்லது அதிகாரமளிக்கப்படாத நபர்கள் அவற்றைப் பார்க்கமுடியும். சபையின் பதிவுகள் அனைத்தும்—கணக்குப் பதிவுகள், சபையின் பிரஸ்தாபி பதிவு அட்டைகள், இதுபோன்றவை அனைத்தும்—சங்கத்தால் கொடுக்கப்பட்டுள்ள நமூனாக்களில் பதிவுசெய்யப்பட வேண்டும்; சபை நமூனாக்களில் உள்ள இந்தத் தகவல் கம்ப்யூட்டர்களில் பதிவுசெய்து வைக்கப்படக்கூடாது. இந்த முறையில், இரகசியமாக வைக்கப்படவேண்டிய சபை பதிவுகள் பாதுகாக்கப்படும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்