தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
டிசம்பர் 27, 2010-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும். பள்ளிக் கண்காணி 20 நிமிடத்திற்கு இந்த மறுபார்வையை நடத்துவார்; இது நவம்பர் 1 முதல் டிசம்பர் 27, 2010 வரையிலான வாரங்களுக்குரிய பேச்சுகளின் அடிப்படையில் அமைந்திருக்கும்.
1. ஒன்று நாளாகமம் 16:34-ல் லேவிய பாடகர்கள் யெகோவாவைத் துதித்துப் பாடியதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? [w02 1/15 பக். 11 பாரா. 6-7]
2. ஒன்று நாளாகமம் 22:5, 9-ல் தாவீது செய்தவற்றிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? [w05 10/1 பக். 11 பாரா 7]
3. தன் மகன் சாலொமோன் யெகோவாவைப் பற்றி எப்படி உணர வேண்டும் என்று தாவீது ராஜா விரும்பினார்? (1 நா. 28:9) [w08 10/15 பக். 7 பாரா 18]
4. வெண்கலக் கடல்தொட்டியின் அடிப்பகுதியில் காளையின் உருவங்கள் வைக்கப்பட்டிருந்தது ஏன் பொருத்தமாக இருந்தது? (2 நா. 4:2-4) [w05 12/1 பக். 19 பாரா 3; w98 6/15 பக். 16 பாரா 17]
5. உடன்படிக்கைப் பெட்டியில் இரண்டு கற்பலகைகள் மட்டும் இருந்ததா, அல்லது வேறு ஏதேனும் இருந்ததா? (2 நா. 5:10) [w06 1/15 பக். 31]
6. இரண்டு நாளாகமம் 6:18-21-லுள்ள சாலொமோனின் ஜெபத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? [w05 12/1 பக். 19 பாரா 8]
7. இரண்டு நாளாகமம் 13:5 (NW)-ல் உள்ள “உப்பு உடன்படிக்கை” எதை அர்த்தப்படுத்துகிறது? [w05 12/1 பக். 20 பாரா 2]
8. இரண்டு நாளாகமம் 17:9, 10-லுள்ள நியமத்தை நம் ஊழியத்தில் எவ்வாறு பொருத்தலாம்? [w09 6/15 பக். 12 பாரா 7]
9. இரண்டு நாளாகமம் 20:17 (NW)-க்கு இசைவாக இன்றுள்ள கடவுளுடைய மக்கள் எவ்வாறு செயல்படுவார்கள்? [w03 6/1 பக். 21-22 பாரா. 14-17]
10. உசியா ராஜாவின் மனமேட்டிமையான செயலிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (2 நா. 26:15-21) [w99 12/1 பக். 26 பாரா. 1-2]