-
எங்களுடைய கூட்டங்களுக்கு வருவதால் என்ன நன்மை?இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்?
-
-
பாடம் 5
எங்களுடைய கூட்டங்களுக்கு வருவதால் என்ன நன்மை?
அர்ஜென்டினா
சியர்ரா லியோன்
பெல்ஜியம்
மலேசியா
வாழ்க்கையின் முக்கியமான கேள்விகளுக்கு பதில் கிடைக்காததாலும் தேவையான ஆறுதல் கிடைக்காததாலும் நிறையப் பேர் மதக் கூட்டங்களுக்குப் போவதையே நிறுத்திவிட்டார்கள். அப்படியிருக்கும்போது, நாங்கள் நடத்துகிற கூட்டங்களுக்கு நீங்கள் ஏன் வர வேண்டும்? எங்களுடைய கூட்டங்களுக்கு வருவதால் உங்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்?
அன்பும் பாசமும் காட்டுகிற ஜனங்கள் அங்கே இருக்கிறார்கள். ஆரம்ப காலத்திலிருந்த கிறிஸ்தவர்கள் கடவுளை வணங்குவதற்கும் பைபிளைப் பற்றி தெரிந்துகொள்வதற்கும் சபைகளுக்கு வந்தார்கள். ஒருவருக்கொருவர் அன்பாக ஆறுதலாக பேசுவதற்காகவும் கூடிவந்தார்கள். (எபிரெயர் 10:24, 25) அங்கே வந்தவர்கள் எல்லாரும் ஒரே குடும்பம் போல் பழகினார்கள், உயிருக்கு உயிரான நண்பர்களைப் போல் இருந்தார்கள். (2 தெசலோனிக்கேயர் 1:3; 3 யோவான் 14) நாங்களும் அவர்களைப் போலவே எங்கள் கூட்டங்களை நடத்துகிறோம். அதேபோன்ற அன்பையும் பாசத்தையும் நாங்களும் அனுபவிக்கிறோம்.
பைபிளில் இருக்கும் விஷயங்களை கடைப்பிடிப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம். பைபிள் காலங்களில் இருந்ததுபோலவே இன்றும், ஆண்கள், பெண்கள், பிள்ளைகள் என எல்லாரும் ஒன்றாக கூடி வருகிறோம். பைபிளில் இருக்கும் விஷயங்களை வாழ்க்கையில் எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்று தகுதியுள்ள ஆண்கள் சொல்லிக்கொடுக்கிறார்கள். (உபாகமம் 31:12; நெகேமியா 8:8) கூட்டங்களில் கேள்விகள் கேட்கும்போது, யார் வேண்டுமானாலும் பதில் சொல்லலாம். யெகோவாவைப் புகழ்ந்து எல்லாரும் பாடும்போது நீங்களும் சேர்ந்து பாடலாம். இப்படி, நீங்கள் கடவுள்மீது நம்பிக்கை வைத்திருப்பதை காட்டலாம்.—எபிரெயர் 10:23.
கடவுள்மீது நம்பிக்கை அதிகமாகும். அப்போஸ்தலன் பவுல் ஒரு சபைக்கு இப்படி எழுதினார்: “உங்களைப் பார்ப்பதற்கு . . . ஏங்குகிறேன். சொல்லப்போனால், உங்களுடைய விசுவாசத்தால் நானும் என்னுடைய விசுவாசத்தால் நீங்களும், ஒருவருக்கொருவர் உற்சாகம் பெற வேண்டும் என்று ஏங்குகிறேன்.” (ரோமர் 1:11, 12) கூட்டங்களுக்கு வந்து மற்றவர்களோடு பழகும்போது கடவுள்மீது நமக்கு இருக்கிற நம்பிக்கை அதிகமாகும், எப்போதுமே கடவுளுக்குப் பிரியமாக வாழ வேண்டும் என்ற ஆசையும் அதிகமாகும்.
நீங்களும் எங்கள் கூட்டங்களுக்கு வந்து இதையெல்லாம் நேரில் பார்க்க ஆசைப்படுகிறீர்களா? நீங்கள் வந்தால் நாங்கள் ரொம்ப சந்தோஷப்படுவோம். நாங்கள் யாரிடமும் காணிக்கை வசூல் செய்வதில்லை. அனுமதி இலவசம்!
யாரைப் போலவே எங்கள் கூட்டங்களை நடத்துகிறோம்?
கூட்டத்தில் கலந்துகொள்வதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
-
-
நாம் ஏன் கூட்டங்களுக்குப் போக வேண்டும்?இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்?
-
-
பாடம் 6
நாம் ஏன் கூட்டங்களுக்குப் போக வேண்டும்?
மடகாஸ்கர்
நார்வே
லெபனான்
இத்தாலி
எவ்வளவு தூரமாக இருந்தாலும் சரி, எவ்வளவு வெயில் அடித்தாலும் சரி, மழை கொட்டினாலும் சரி, நாங்கள் சபைக் கூட்டங்களுக்குத் தவறாமல் போவோம். என்னதான் கஷ்டம் இருந்தாலும், நாள் முழுவதும் வேலை செய்தாலும், களைப்பாக இருந்தாலும், அதையெல்லாம் பார்க்காமல் கூட்டங்களுக்குப் போய்விடுவோம். கூட்டங்களுக்குத் தவறாமல் போவதற்கு நாங்கள் ஏன் இவ்வளவு முயற்சி செய்கிறோம்?
பிரச்சினைகளை சமாளிக்க கூட்டங்கள் ரொம்ப உதவியாக இருக்கின்றன. கூட்டங்களுக்கு வரும் எல்லாரும் “ஒருவர்மீது ஒருவர் ஆழ்ந்த அக்கறை காட்ட வேண்டும்” என்று பவுல் சொன்னார். (எபிரெயர் 10:24) அதாவது, அவர்களைப் பற்றி நன்றாக தெரிந்திருக்க வேண்டும் என்று சொன்னார். அப்போது அவர்களுக்கு வந்த பிரச்சினைகளை எப்படி சமாளித்தார்கள் என்று தெரிந்துகொள்வோம். அந்த மாதிரி பிரச்சினைகள் நமக்கு வரும்போது அதை சமாளிக்க அவர்கள் உதவி செய்வார்கள்.
அங்கே நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். கூட்டங்களுக்கு வருகிறவர்களோடு நாங்கள் ஏதோ பெயருக்கென்று பழகாமல், உயிர் நண்பர்களைப் போல் பழகுகிறோம். கூட்டங்களுக்குப் போகும்போது மட்டுமல்ல மற்ற சமயங்களிலும் அவர்களோடு நேரம் செலவழிக்கிறோம். அதனால், அவர்கள் மேல் அன்பும் பாசமும் இன்னும் அதிகமாகிறது, அவர்களை மதித்து நடக்கவும் முடிகிறது. அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் உடனே போய் உதவி செய்கிறோம். (நீதிமொழிகள் 17:17) கூட்டங்களுக்கு வருகிற எல்லாரிடமும் உண்மையான அக்கறையை காட்டுகிறோம்.—1 கொரிந்தியர் 12:25, 26.
கடவுள் சொல்வதுபோல் நடக்கிறவர்களை உங்கள் நண்பர்களாகத் தேர்ந்தெடுங்கள். எங்களுடைய கூட்டங்களுக்கு வந்தால் உங்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். அதனால், யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களுக்கு வருவதை நிறுத்திவிடாதீர்கள்.
கூட்டங்களுக்குப் போவது நமக்கு எப்படி உதவியாக இருக்கும்?
எங்கள் கூட்டங்களுக்கு நீங்கள் எப்போது வரப்போகிறீர்கள்?
-
-
கூட்டங்களில் என்ன கற்றுக்கொள்கிறோம்?இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்?
-
-
பாடம் 7
கூட்டங்களில் என்ன கற்றுக்கொள்கிறோம்?
நியுசிலாந்து
ஜப்பான்
உகாண்டா
லிதுவேனியா
ஆரம்ப காலத்தில் நடந்த கிறிஸ்தவ கூட்டங்களில் பாட்டு பாடினார்கள், ஜெபம் செய்தார்கள், பைபிளை வாசித்து அதற்கு விளக்கம் கொடுத்தார்கள். ஆனால், எந்த சடங்கு சம்பிரதாயமும் செய்யவில்லை. (1 கொரிந்தியர் 14:26) அதேபோல்தான் இன்றும் எங்களுடைய கூட்டங்கள் நடக்கின்றன.
வாழ்க்கைக்குத் தேவையான பைபிள் ஆலோசனைகளைக் கற்றுக்கொள்கிறோம். பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமையில் ஒரு கூட்டம் நடக்கும். முதலில் 30 நிமிடங்களுக்கு பைபிள் பேச்சு இருக்கும். அதில், வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களையும் உலக நிலைமைகளையும் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். பேச்சு கொடுக்கிறவர் வசனங்களை வாசிக்கும்போது நாமும் பைபிளை திறந்து பார்க்கலாம். அதற்குப் பிறகு, ஒரு மணி நேரத்திற்கு “காவற்கோபுர” படிப்பு இருக்கும். காவற்கோபுர படிப்பு இதழில் இருக்கிற ஒரு கட்டுரையை படிப்போம். கூட்டத்திற்கு வந்திருக்கிற எல்லாரும் பதில் சொல்லலாம். இப்படி படிப்பதால் பைபிள் சொல்கிறபடி வாழ்வதற்குக் கற்றுக்கொள்கிறோம். உலகம் முழுவதும் இருக்கிற 1,10,000-க்கும் அதிகமான சபைகளிலும் அதே கட்டுரையைத்தான் படிப்பார்கள்.
மற்றவர்களுக்கு நன்றாக சொல்லிக்கொடுப்பது எப்படி என்று கற்றுக்கொள்கிறோம். ஞாயிற்றுக்கிழமை தவிர இன்னொரு நாள் சாயங்காலம் நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும் என்ற கூட்டம் நடக்கும். வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகத்தில் இருக்கும் குறிப்புகளை பயன்படுத்தி மூன்று பகுதிகளாக இந்தக் கூட்டம் நடக்கும். முதல் பகுதியின் தலைப்பு, பைபிளில் இருக்கும் புதையல்கள். இந்தப் பகுதியில், அந்தந்த வாரத்துக்கான பைபிள் வாசிப்பு பகுதியில் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்வோம். இரண்டாவது பகுதியின் தலைப்பு, ஊழியத்தை நன்றாக செய்யுங்கள். இந்தப் பகுதியில், பைபிளில் இருக்கும் விஷயங்களை ஊழியத்தில் எப்படி நன்றாக பேசலாம் என்பதை நடிப்புகள் மூலமாக கற்றுக்கொள்வோம். கூட்டத்தை நடத்தும் சகோதரர், பைபிளை நன்றாக வாசிப்பதற்கும் ஊழியத்தில் நன்றாக பேசுவதற்கும் ஆலோசனைகளை கொடுப்பார். (1 தீமோத்தேயு 4:13) மூன்றாவது பகுதியின் தலைப்பு, கிறிஸ்தவர்களாக வாழுங்கள். இந்தப் பகுதியில், பைபிள் தரும் ஆலோசனைகளை வாழ்க்கையில் எப்படி கடைப்பிடிக்கலாம் என்பதை கற்றுக்கொள்வோம். பைபிளில் இருக்கும் விஷயங்களை இன்னும் நன்றாக புரிந்துகொள்ள கேள்வி-பதில் முறையில் சில கட்டுரைகள் இருக்கும்.
எங்கள் கூட்டங்களுக்கு வந்தால், பைபிளிலிருந்து நிறைய நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள், அதற்காக ரொம்ப சந்தோஷப்படுவீர்கள்.—ஏசாயா 54:13.
யெகோவாவின் சாட்சிகள் நடத்தும் கூட்டத்தில் நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
நீங்கள் எந்தக் கூட்டத்திற்கு வர ஆசைப்படுகிறீர்கள்?
-