-
கூட்டங்களுக்குப் போகும்போது ஏன் நன்றாக உடை உடுத்த வேண்டும்?இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்?
-
-
பாடம் 8
கூட்டங்களுக்குப் போகும்போது ஏன் நன்றாக உடை உடுத்த வேண்டும்?
ஐஸ்லாந்து
மெக்சிகோ
கினி-பிஸ்ஸாவ்
பிலிப்பைன்ஸ்
இந்தப் புத்தகத்தில் இருக்கிற படங்களைப் பார்த்தீர்களா? கூட்டத்திற்குப் போகும்போது யெகோவாவின் சாட்சிகள் நன்றாக உடை உடுத்தி, தலைவாரி இருப்பதை கவனித்தீர்களா? நாங்கள் ஏன் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம்?
கடவுளுக்கு மரியாதை காட்டுவதற்காக. கடவுள் நம் வெளித்தோற்றத்தை பார்ப்பதில்லை, நம் மனதைத்தான் பார்க்கிறார். (1 சாமுவேல் 16:7) இருந்தாலும், கூட்டத்திற்குப் போகும்போது, கடவுளுக்கும் மற்றவர்களுக்கும் மரியாதை காட்டும் விதத்தில் உடை உடுத்த வேண்டும். ஒருவேளை, முக்கியமான ஒரு அதிகாரியைப் பார்க்கப் போகும்போது அவருக்கு மரியாதை காட்டும் விதத்தில் உடுத்துவோம். அப்படியென்றால், ‘என்றென்றும் ராஜாவாக’ இருக்கும் யெகோவாவை வணங்குவதற்குப் போகும்போது நம் உடைக்கு இன்னும் எவ்வளவு கவனம் செலுத்த வேண்டும்!—1 தீமோத்தேயு 1:17.
பைபிள் சொல்வதுபோல் நடந்துகொள்வதற்காக. உடை உடுத்தும் விஷயத்தில் கிறிஸ்தவர்கள், ‘அடக்கமாகவும் தெளிந்த புத்தியுள்ளவர்களாகவும்’ இருக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (1 தீமோத்தேயு 2:9, 10) ‘அடக்கமாக’ உடை உடுத்துவது என்றால் என்ன? நாம் உடுத்துகிற உடை ஆடம்பரமாகவோ கவர்ச்சியாகவோ உடம்பு தெரிகிற மாதிரியோ இருக்கக் கூடாது. ‘தெளிந்த புத்தியோடு’ உடை உடுத்துவது என்றால் என்ன? நாம் அலங்கோலமாக ஏனோதானோவென்று உடை உடுத்தக் கூடாது. இந்த விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டால், நமக்குப் பிடித்த மாதிரி விதவிதமாக உடை உடுத்தலாம். அழகாக, அடக்கமாக உடை உடுத்தும்போது நம் “மீட்பரான கடவுளுடைய போதனைகளை . . . அலங்கரிக்க முடியும்.” ‘அவரை மகிமைப்படுத்தவும்’ முடியும். (தீத்து 2:10; 1 பேதுரு 2:12) கூட்டங்களுக்கு நாம் நன்றாக உடை உடுத்தும்போது யெகோவாவின் வணக்கத்தை மற்றவர்கள் உயர்வாக மதிப்பார்கள்.
உங்களிடம் நல்ல துணிமணி எதுவும் இல்லையே என்று நினைத்து கூட்டத்திற்கு வராமல் இருந்துவிடாதீர்கள். விலை அதிகமாக இருக்கிற துணிமணிகளைத்தான் போட்டுக்கொண்டு வர வேண்டும் என்று அவசியமில்லை. சுத்தமாக, அடக்கமாக உடை உடுத்திக்கொண்டு வந்தால் போதும்.
கடவுளை வணங்குவதற்குப் போகும்போது நாம் எப்படி உடை உடுத்த வேண்டும்?
உடை உடுத்தும்போது என்ன பைபிள் ஆலோசனைகளை மனதில் வைக்க வேண்டும்?
-
-
குடும்ப வழிபாடு என்றால் என்ன?இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்?
-
-
பாடம் 10
குடும்ப வழிபாடு என்றால் என்ன?
தென் கொரியா
பிரேசில்
ஆஸ்திரேலியா
கினி
இஸ்ரவேலில் இருந்த குடும்பத் தலைவர்களுக்கு ஒரு முக்கியமான பொறுப்பை யெகோவா கொடுத்தார். அவர் சொல்லித்தந்த எல்லா விஷயங்களையும் குடும்பமாக அவர்கள் பேச வேண்டும் என்று சொல்லியிருந்தார். இப்படி செய்ததால் குடும்பத்தில் இருப்பவர்கள் யெகோவாவோடு பலமான நட்பை வளர்க்க முடிந்தது. அதோடு, குடும்பத்திலும் ஒருவருக்கொருவர் அன்பாக பாசமாக இருந்தார்கள். (உபாகமம் 6:6, 7) அதனால்தான், இன்றும் நாங்கள் ஒவ்வொரு வாரமும் குடும்பமாக ஒன்றுசேர்ந்து கடவுளைப் பற்றி படிக்கிறோம். எங்களுக்கு வசதியான நேரத்தில், ஆற அமர உட்கார்ந்து பைபிள் விஷயங்களைப் பேசுகிறோம். குடும்பத்தில் இருக்கிறவர்களுக்கு பிரயோஜனமான விஷயங்களைப் படிக்கிறோம். ஒருவேளை, குடும்பத்தோடு இல்லாமல் தனியாக இருந்தாலும் நேரம் ஒதுக்கி கடவுளைப் பற்றி படிக்கிறோம்.
யெகோவாவிடம் நெருங்கி வருவதற்கு அந்த நேரத்தைப் பயன்படுத்துகிறோம். “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என்று பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 4:8) பைபிளைப் படித்தால் யெகோவா எப்படிப்பட்டவர், அவர் என்னென்ன செய்திருக்கிறார் என்று நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும். குடும்ப வழிபாட்டின்போது முதலில் ஒவ்வொருவரும் பைபிளை சத்தமாக வாசிக்கலாம். அந்த வார வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தின் அட்டவணையில் கொடுத்திருக்கிற பைபிள் அதிகாரங்களை வாசிக்கலாம். ஒருவரே வாசிக்காமல், வீட்டில் இருக்கிற எல்லாரும் மாறிமாறி வாசிக்கலாம். படித்து முடித்ததும், அதிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களைப் பற்றி எல்லாரும் சேர்ந்து பேசலாம்.
குடும்பத்தில் இருக்கிறவர்களோடு நெருங்கி வருவதற்கு அந்த நேரத்தைப் பயன்படுத்துங்கள். குடும்பமாக சேர்ந்து பைபிளைப் படிக்கும்போது, கணவனுக்கும் மனைவிக்கும் இடையில், அப்பா-அம்மாவுக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் பாசம் அதிகமாகும். எல்லாரும் சந்தோஷப்படுகிற விதத்தில் குடும்ப வழிபாடு இருக்க வேண்டும். அந்த நாள் எப்போது வரும் என்று எல்லாரும் ஆசையாக காத்திருப்பது போல் இருக்க வேண்டும். எதை படிக்கலாம் என்பதை பிள்ளைகளுடைய வயதிற்கு ஏற்ற விதத்தில் தேர்ந்தெடுக்கலாம். காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகையில் வருகிற கட்டுரைகளையோ jw.org வெப்சைட்டில் இருக்கிற விஷயங்களையோ பயன்படுத்தலாம். உங்கள் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடத்தில் ஏதாவது பிரச்சினை வந்திருந்தால், அதை எப்படி சமாளிப்பது என்று சொல்லிக்கொடுக்கலாம். JW பிராட்காஸ்டிங் வெப்சைட்டில் (tv.jw.org) இருக்கும் ஒரு வீடியோவை பார்த்து, அதைப் பற்றி குடும்பமாக கலந்து பேசலாம். அந்த வார கூட்டத்தில் பாடப்போகிற பாடல்களை பழகிப் பார்க்கலாம். குடும்ப வழிபாடு முடிந்ததும் எல்லாரும் சேர்ந்து ஏதாவது சாப்பிடலாம்.
வாராவாரம் குடும்ப வழிபாடு நடக்கும்போது உங்கள் வீட்டில் இருக்கிற எல்லாருமே பைபிளைப் படிப்பதில் சந்தோஷத்தைப் பெற முடியும். தவறாமல் நடத்துவதற்கு நீங்கள் எடுக்கிற எல்லா முயற்சிகளையும் யெகோவா ஆசீர்வதிப்பார்.—சங்கீதம் 1:1-3.
குடும்ப வழிபாட்டுக்காக ஏன் நேரம் ஒதுக்குகிறோம்?
குடும்ப வழிபாடு சந்தோஷமாக நடப்பதற்கு அப்பா-அம்மா என்ன செய்யலாம்?
-