உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நாங்கள் எதற்காக மாநாடுகளுக்குப் போகிறோம்?
    இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்?
    • பாடம் 11

      நாங்கள் எதற்காக மாநாடுகளுக்குப் போகிறோம்?

      மெக்சிகோவில் நடந்த யெகோவாவின் சாட்சிகளுடைய மண்டல மாநாடு

      மெக்சிகோ

      ஜெர்மனியில் நடந்த மண்டல மாநாட்டில் புத்தகத்தை ஒரு சகோதரர் வெளியிடுகிறார்

      ஜெர்மனி

      போட்ஸ்வானாவில் நடந்த மண்டல மாநாட்டில் யெகோவாவின் சாட்சிகள்

      போட்ஸ்வானா

      நிகாராகுவாவில் நடந்த மாநாட்டில் ஒரு இளைஞர் ஞானஸ்நானம் எடுக்கிறார்

      நிகாராகுவா

      இத்தாலியில் நடந்த மண்டல மாநாட்டில் பைபிள் நாடகத்தை நடிக்கிறார்கள்

      இத்தாலி

      இந்தப் படத்தில் இருக்கிறவர்கள் ஏன் இவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள்? ஏனென்றால், இவர்கள் எல்லாரும் ஒரு மாநாட்டுக்கு வந்திருக்கிறார்கள். இஸ்ரவேலர்கள் வருடத்திற்கு மூன்று தடவை ஒன்றுகூடி வர வேண்டும் என்று கடவுள் சொல்லியிருந்தார். (உபாகமம் 16:16) அவர்களைப் போலவே நாங்களும் வருடத்திற்கு மூன்று தடவை இதேபோல் பெரிய மாநாடுகளில் சந்தோஷமாக கலந்துகொள்கிறோம். வட்டார மாநாடு வருடத்திற்கு இரண்டு தடவை நடக்கும், மண்டல மாநாடு வருடத்திற்கு ஒரு தடவை நடக்கும். வட்டார மாநாடு ஒரு நாள் மட்டும் நடக்கும், மண்டல மாநாடு மூன்று நாட்கள் நடக்கும். இந்த மாநாடுகளுக்குப் போவது எங்களுக்கு எப்படி உதவியாக இருக்கிறது?

      எங்கள் மத்தியில் அன்பு அதிகமாகிறது. இஸ்ரவேல் ஜனங்களைப் போலவே நாங்களும் மாநாடுகளில் ஒன்றாகக் கூடிவந்து யெகோவாவை சந்தோஷமாக வணங்குகிறோம். (சங்கீதம் 26:12, அடிக்குறிப்பு; 111:1) இதுபோன்ற மாநாடுகளுக்கு மற்ற இடங்களில் இருந்தும் மற்ற நாடுகளில் இருந்தும் யெகோவாவின் சாட்சிகள் வருவார்கள். மத்தியான நேரத்தில் நாங்கள் எல்லாரும் மாநாடு நடக்கிற இடத்திலேயே சேர்ந்து சாப்பிடுவோம். அந்த சமயத்தில் எல்லாரிடமும் நன்றாகப் பேசிப் பழகுவதற்கு வாய்ப்பு கிடைக்கும், புதுப்புது நண்பர்களும் கிடைப்பார்கள். (அப்போஸ்தலர் 2:42) ‘சகோதரர்கள் எல்லாரும்’ ஒருவர்மீது ஒருவர் அன்பு காட்டுவதை நேரடியாக பார்க்க முடியும்.—1 பேதுரு 2:17.

      கடவுளுக்குப் பிடித்த விதத்தில் வாழ்வதற்குக் கற்றுக்கொள்கிறோம். இஸ்ரவேல் ஜனங்கள் ஒன்றாகக் கூடிவந்த சமயத்தில் “தங்களுக்கு விளக்கிச் சொல்லப்பட்ட விஷயங்களைப் புரிந்துகொண்டார்கள்.” அது அவர்களுக்கு ரொம்ப பிரயோஜனமாக இருந்தது. (நெகேமியா 8:8, 12) நாங்களும் மாநாட்டிலிருந்து நிறைய பைபிள் விஷயங்களைத் தெரிந்துகொள்கிறோம். பைபிள் சம்பந்தமாகத்தான் எல்லா நிகழ்ச்சிகளும் இருக்கும். பேச்சுகள், நடிப்புகள் மூலம் கடவுள் சொல்வதுபோல் நடப்பது எப்படி என்று கற்றுக்கொள்கிறோம். இந்தக் கஷ்டமான காலத்திலும் கடவுளுக்கு உண்மையாக வாழ்கிறவர்களுடைய அனுபவங்களை மாநாட்டில் கேட்போம். அது எங்களுக்கு உற்சாகத்தைத் தருகிறது. மண்டல மாநாடுகளில் பைபிள் நாடகங்கள் இருக்கும். வாழ்க்கைக்குத் தேவையான நிறைய விஷயங்களை அந்த நாடகங்களைப் பார்த்து கற்றுக்கொள்கிறோம். கடவுளுக்கு தங்களுடைய வாழ்க்கையை அர்ப்பணம் செய்தவர்கள், ஞானஸ்நானம் எடுக்க ஒவ்வொரு மாநாட்டிலும் ஏற்பாடுகள் செய்யப்படும்.

      • மாநாடுகளுக்குப் போவது ஏன் சந்தோஷமாக இருக்கிறது?

      • மாநாடுகளுக்கு போவது உங்களுக்கு எப்படி பிரயோஜனமாக இருக்கும்?

      இன்னும் தெரிந்துகொள்ள...

      நாங்கள் ஒருவருக்கொருவர் காட்டுகிற அன்பை நேரில் பார்க்க ஆசைப்படுகிறீர்களா? அப்படியென்றால், அடுத்த மாநாட்டுக்கு வாருங்கள். போன வருஷம் மாநாட்டில் என்னென்ன தலைப்புகளில் பேச்சுகள் கொடுக்கப்பட்டன என்பதை உங்களுக்கு படிப்பை நடத்துபவர் சொல்லுவார். அடுத்த மாநாடு எப்போது நடக்கும் என்று காலண்டரில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அந்த மாநாட்டிற்கு வர முயற்சி செய்யுங்கள்.

  • யாரைப் பயனியர் என்று சொல்கிறோம்?
    இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்?
    • பாடம் 13

      யாரைப் பயனியர் என்று சொல்கிறோம்?

      முழு நேர ஊழியர்கள் ஊழியம் செய்கிறார்கள்

      கனடா

      முழு நேர ஊழியர்கள் பிரசங்க வேலையை செய்கிறார்கள்

      வீட்டுக்கு வீடு ஊழியம்

      பயனியர் ஊழியம் செய்பவர் பைபிள் படிப்பு நடத்துகிறார்

      பைபிள் படிப்பு

      பயனியர் ஊழியம் செய்பவர் பைபிளை படித்துக் கொண்டிருக்கிறார்

      தனிப்பட்ட படிப்பு

      ஒரு வேலையை செய்வதில் எல்லாருக்கும் முன்னோடியாக இருக்கிற ஒருவரை “பயனியர்” என்று சொல்கிறோம். இயேசுவை ஒரு பயனியர் என்று சொல்லலாம். ஏனென்றால், பிரசங்க வேலையை செய்வதில் அவர் முன்னோடியாக இருந்தார். கடவுளைப் பற்றி மக்களுக்கு சொல்லவும் அவர்களுடைய உயிரைக் காப்பாற்றவும் இயேசு இந்தப் பூமிக்கு வந்தார். (மத்தேயு 20:28) அவரைப் போலவே நாங்களும் ‘சீஷராக்கும்’ வேலையில் நிறைய நேரம் செலவு செய்கிறோம். (மத்தேயு 28:19, 20) யெகோவாவின் சாட்சிகளில் சிலர் பயனியர் ஊழியம் செய்கிறார்கள். பயனியர் ஊழியம் என்றால் என்ன?

      முழு நேரமாக ஊழியம் செய்கிறவர்கள்தான் பயனியர்கள். யெகோவாவின் சாட்சிகள் எல்லாருமே கடவுளுடைய ஆட்சியைப் பற்றி மற்றவர்களிடம் சொல்கிறார்கள். அவர்களில் சிலர், ஒழுங்கான பயனியர்களாக, அதாவது, ஒவ்வொரு மாதமும் 70 மணி நேரம் ஊழியம் செய்கிறார்கள். இதை செய்வதற்காக நிறையப் பேர் பகுதி நேர வேலை செய்கிறார்கள். ஒவ்வொரு மாதமும் 130 மணி நேரம் அல்லது அதற்கும் அதிகமாகவோ ஊழியம் செய்கிறவர்களை விசேஷ பயனியர்கள் என்று சொல்கிறோம். ஊழியம் செய்வதற்கு எந்த இடத்தில் நிறையப் பேர் தேவைப்படுகிறார்களோ அங்கே போய் இவர்கள் ஊழியம் செய்கிறார்கள். இருப்பதை வைத்து திருப்தியாக வாழ்கிறார்கள். இவர்களுடைய தேவைகளை யெகோவா பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையோடு ஊழியம் செய்கிறார்கள். (மத்தேயு 6:31-33; 1 தீமோத்தேயு 6:6-8) முழுநேரமாக பயனியர் ஊழியம் செய்ய முடியாதவர்கள் துணை பயனியர் ஊழியம் செய்கிறார்கள். மாதத்திற்கு 30 அல்லது 50 மணிநேரம் ஊழியம் செய்கிறார்கள்.

      பயனியர்கள் கடவுள்மீதும் ஜனங்கள்மீதும் இருக்கிற அன்பினால் ஊழியம் செய்கிறார்கள். கடவுளைப் பற்றி ஜனங்கள் தெரிந்துகொள்ள முடியாமல் இருந்ததைப் பார்த்து இயேசு ரொம்ப பரிதாபப்பட்டார். (மாற்கு 6:34) இன்றும் ஜனங்கள் அப்படித்தான் இருக்கிறார்கள். பைபிளில் இருக்கும் விஷயங்களை சொன்னால், அவர்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும், எதிர்காலத்தைப் பற்றி பயப்படாமல் நம்பிக்கையோடு இருப்பார்கள். பயனியர் ஊழியம் செய்கிறவர்கள் ஜனங்கள்மீது நிறைய அன்பு வைத்திருப்பதால் அவர்களுடைய நேரத்தையும், சக்தியையும் பயன்படுத்தி கடவுளைப் பற்றி சொல்லிக் கொடுக்கிறார்கள். (மத்தேயு 22:39; 1 தெசலோனிக்கேயர் 2:8) இதனால், பயனியர் ஊழியம் செய்கிறவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். கடவுள்மீது அவர்களுக்கு இருக்கிற நம்பிக்கை அதிகமாகிறது, அவரோடு இருக்கிற நட்பும் பலப்படுகிறது.—அப்போஸ்தலர் 20:35.

      • பயனியர் ஊழியம் என்றால் என்ன?

      • ஏன் சிலர் முழுநேரமாக பயனியர் ஊழியம் செய்கிறார்கள்?

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்