-
பயனியர்களுக்காக என்னென்ன பள்ளிகள் நடத்தப்படுகிறது?இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்?
-
-
பாடம் 14
பயனியர்களுக்காக என்னென்ன பள்ளிகள் நடத்தப்படுகிறது?
அமெரிக்கா
கிலியட் பள்ளி, பேட்டர்சன், நியு யார்க்
பனாமா
கடவுள் சொல்வதை நன்றாக கற்றுக்கொள்வதற்கு யெகோவாவின் சாட்சிகள் நிறைய ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள். முழுநேரமாக ஊழியம் செய்பவர்களுக்கு விசேஷ பயிற்சி பள்ளிகளை நடத்துகிறார்கள். ‘ஊழியத்தை முழுமையாகச் செய்ய’ இந்தப் பள்ளிகள் அவர்களுக்கு உதவியாக இருக்கின்றன.—2 தீமோத்தேயு 4:5.
பயனியர் ஊழியப் பள்ளி. ஒழுங்கான பயனியர் ஊழியத்தை, ஒரு வருடத்திற்கும் அதிகமாக செய்கிறவர்கள் இந்தப் பள்ளியில் கலந்துகொள்ளலாம். ஏதாவது ஒரு ராஜ்ய மன்றத்தில் இந்தப் பள்ளி ஆறு நாட்களுக்கு நடக்கும். வீட்டுக்கு வீடு ஊழியம், மறுசந்திப்பு, பைபிள் படிப்பு... இதையெல்லாம் இன்னும் நன்றாகச் செய்வதற்கு இந்தப் பள்ளி பயனியர்களுக்கு உதவுகிறது. யெகோவாவிடம் உள்ள நட்பை பலப்படுத்துவதற்கும் ஊழியத்தை தொடர்ந்து செய்வதற்கும் இந்தப் பள்ளி அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளி. இது இரண்டு மாதத்துக்கு நடக்கும். சொந்த ஊரை விட்டுவிட்டு வேறு இடத்துக்கு போய் ஊழியம் செய்ய தயாராக இருக்கிற பயனியர்களுக்காக இந்தப் பள்ளி நடத்தப்படுகிறது. 23 முதல் 65 வயது வரை உள்ள தம்பதிகளும் கல்யாணம் ஆகாத ஆண்களும் பெண்களும் இதில் கலந்துகொள்ளலாம். பிரசங்க வேலையை செய்ய அதிகமான ஆட்கள் தேவைப்படுகிற இடத்திற்குப் போக இவர்கள் தயாராக இருக்க வேண்டும். இதுவரை பூமியில் வாழ்ந்தவர்களில் தலைசிறந்த நற்செய்தியாளர் இயேசு கிறிஸ்துவைப் போலவே “இதோ, நான் இருக்கிறேன்! என்னை அனுப்புங்கள்!” என்று சொல்கிறார்கள். (ஏசாயா 6:8; யோவான் 7:29) அவர்கள் போகிற இடத்தில் வசதி குறைவாக இருக்கலாம். அங்கே இருக்கிற ஜனங்களுடைய பழக்கவழக்கம், சீதோஷ்ணம், சாப்பாடு... எல்லாமே வித்தியாசமாக இருக்கலாம். ஒருவேளை புதிய மொழியை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கலாம். புது இடத்தில் போய் ஊழியம் செய்வதற்கு நிறைய நல்ல குணங்கள் தேவைப்படும். அதையெல்லாம் வளர்த்துக்கொள்ள இந்தப் பள்ளி உதவியாக இருக்கும். இன்னும் நிறையப் பொறுப்புகளை எடுத்து செய்வதற்கு யெகோவா அவர்களுக்குப் பயிற்சி கொடுக்கிறார்.
உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளி. “கிலியட்” என்ற எபிரெய வார்த்தைக்கு ‘சாட்சிக் குவியல்’ என்று அர்த்தம். 1943-ல் இந்தப் பள்ளி ஆரம்பித்ததிலிருந்து இது வரைக்கும் கிட்டத்தட்ட 8,000 பேர் மிஷனரிகளாகப் பயிற்சி எடுத்திருக்கிறார்கள். இவர்கள் “பூமியெங்கும்” சென்று பெரியளவில் சாட்சி கொடுத்திருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 13:47) உதாரணத்துக்கு, மிஷனரிகள் முதல் தடவையாக பெரு நாட்டிற்கு வந்தபோது, அங்கே ஒரு சபைகூட இல்லை. ஆனால், இன்று அந்த நாட்டில் ஆயிரத்துக்கும் அதிகமான சபைகள் இருக்கின்றன. அதேபோல், மிஷனரிகள் முதல் முதலில் ஜப்பானுக்கு வந்தபோது அங்கே 10 சாட்சிகள்கூட இல்லை. ஆனால் இன்று இரண்டு லட்சம் சாட்சிகள் அங்கு இருக்கிறார்கள். இந்தப் பள்ளியில் கலந்துகொள்கிறவர்கள் 5 மாதத்திற்கு பைபிளைப் பற்றி ஆழமாக படிக்கிறார்கள். விசேஷ பயனியர்கள், மிஷனரிகள், கிளை அலுவலகத்தில் வேலை செய்கிறவர்கள், வட்டார கண்காணியாக சேவை செய்கிறவர்கள் இந்தப் பள்ளியில் கலந்துகொள்வதற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். உலகம் முழுவதும் நடக்கிற பிரசங்க வேலையை இன்னும் முழுமையாக செய்வதற்கு இவர்களுக்கு பயிற்சி கிடைக்கிறது.
பயனியர் ஊழியப் பள்ளி ஏன் நடத்தப்படுகிறது?
யாருக்காக ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளி நடத்தப்படுகிறது?
-
-
மூப்பர்கள் சபைக்கு எப்படி உதவுகிறார்கள்?இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்?
-
-
பாடம் 15
மூப்பர்கள் சபைக்கு எப்படி உதவுகிறார்கள்?
பின்லாந்து
சொல்லிக்கொடுக்கிறார்
வீட்டில் சந்தித்து பேசுகிறார்
வெளி ஊழியம் செய்கிறார்
எங்களுடைய சபையில் சம்பளத்திற்கு வேலை செய்கிற பாதிரியார்கள் யாருமே இல்லை. கிறிஸ்தவ சபையை ஆரம்பித்தபோது அதை கவனித்துக்கொள்வதற்கு மூப்பர்கள் இருந்தார்கள். அவர்கள் ‘கடவுளுடைய சபையாகிய மந்தையை’ கவனித்துக்கொண்டார்கள் என்று பைபிள் சொல்கிறது. (அப்போஸ்தலர் 20:28) அதேபோல் இன்றும் சபையை கவனித்துக்கொள்வதற்கு மூப்பர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு யெகோவாவுடன் நல்ல பந்தம் இருக்கிறது. சபை பொறுப்புகளையும் சபையில் இருக்கிறவர்களையும் இவர்கள் அக்கறையாக பார்த்துக்கொள்கிறார்கள். இந்தப் பொறுப்பை “கட்டாயத்தால் இல்லாமல் கடவுளுக்குமுன் மனப்பூர்வமாகவும், அநியாயமான ஆதாயத்துக்காக இல்லாமல் ஆர்வமாகவும்” செய்கிறார்கள். (1 பேதுரு 5:1-3) இவர்கள் சபையில் இருப்பவர்களுக்காக என்னென்ன செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா?
எங்களை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்கிறார்கள். யெகோவாவோடு எங்களுக்கு இருக்கிற நட்பை பலப்படுத்த மூப்பர்கள் பைபிளிலிருந்து நிறைய ஆலோசனைகளை கொடுக்கிறார்கள். சபையில் இருப்பவர்களை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை கடவுள் கொடுத்திருப்பதால் எங்களை அதிகாரம் பண்ணுவதற்கு பதிலாக நாங்கள் சந்தோஷமாக இருக்க உதவி செய்கிறார்கள். (2 கொரிந்தியர் 1:24) ஒரு மேய்ப்பர் அவருடைய ஒவ்வொரு ஆட்டையும் அக்கறையாக கவனித்துக்கொள்வார். அதேபோல், மூப்பர்களும் சபையில் இருக்கிற ஒவ்வொருவரையும் அக்கறையாக கவனித்துக்கொள்கிறார்கள்.—நீதிமொழிகள் 27:23.
கடவுளுக்குப் பிடித்த மாதிரி வாழ சொல்லிக்கொடுக்கிறார்கள். நாங்கள் கடவுள்மீது இன்னும் அதிகமாக நம்பிக்கை வைப்பதற்கு ஒவ்வொரு வாரமும் சபைக் கூட்டங்களை மூப்பர்கள் நடத்துகிறார்கள். (அப்போஸ்தலர் 15:32) வித்தியாசமான விதங்களில் ஊழியம் செய்வதற்கு எங்களுக்கு சொல்லிக்கொடுக்கிறார்கள். அதோடு, ஊழியம் செய்வதில் எங்களுக்கு நல்ல உதாரணமாகவும் இருக்கிறார்கள்.
ஒவ்வொருவரையும் உற்சாகப்படுத்துகிறார்கள். கடவுளோடு எங்களுக்கு இருக்கும் பந்தத்தை பலப்படுத்த உதவி செய்கிறார்கள். வீடுகளிலோ ராஜ்ய மன்றத்திலோ எங்களை சந்தித்து தேவையான உதவியையும் உற்சாகத்தையும் பைபிளிலிருந்து கொடுக்கிறார்கள்.—யாக்கோபு 5:14, 15.
மூப்பர்கள் சபை பொறுப்புகளை பார்த்துக்கொள்கிறார்கள், வேலைக்கும் போகிறார்கள், குடும்பத்தையும் கவனித்துக்கொள்கிறார்கள். சபையில் இருப்பவர்களுக்காக அவர்களுடைய நேரத்தையும் சக்தியையும் செலவிடுகிறார்கள். இப்படிக் கடினமாக உழைக்கும் மூப்பர்களுக்கு மதிப்பும் மரியாதையும் காட்ட வேண்டும்.—1 தெசலோனிக்கேயர் 5:12, 13.
சபையில் என்னென்ன பொறுப்புகளை மூப்பர்கள் கவனித்துக்கொள்கிறார்கள்?
சபையில் இருக்கிற ஒவ்வொருவரையும் எப்படி அன்பாக பார்த்துக்கொள்கிறார்கள்?
-
-
உதவி ஊழியர்கள் என்னென்ன வேலைகளை செய்கிறார்கள்?இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்?
-
-
பாடம் 16
உதவி ஊழியர்கள் என்னென்ன வேலைகளை செய்கிறார்கள்?
மயன்மார்
சபைக் கூட்டம்
ஊழிய தொகுதி
ராஜ்ய மன்றத்தை பராமரிக்கிறார்கள்
சபையில் இருக்கிற வேலைகளை கவனிப்பதற்கு ‘கண்காணிகளும் உதவி ஊழியர்களும்’ இருப்பார்கள் என்று பைபிள் சொல்கிறது. (பிலிப்பியர் 1:1) அதேபோல், இன்று ஒவ்வொரு சபையிலும் சிலர் கண்காணிகளாகவும் அதாவது மூப்பர்களாகவும், சிலர் உதவி ஊழியர்களாகவும் இருக்கிறார்கள். இப்போது, உதவி ஊழியர்கள் நமக்காக என்னென்ன வேலைகளைச் செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.
மூப்பர் குழுவுக்கு உதவியாக இருக்கிறார்கள். உதவி ஊழியர்கள் யெகோவாவுடைய சேவைக்கு முதலிடம் கொடுக்கிறார்கள், நம்பகமானவர்களாக, பொறுப்பாக வேலை செய்கிறவர்களாக இருக்கிறார்கள். சபையில் அடிக்கடி செய்ய வேண்டிய சில முக்கியமான வேலைகளையும் செய்கிறார்கள். அதனால், சபைக் கூட்டங்களை நடத்துவதற்கும் சபையில் இருப்பவர்களை உற்சாகப்படுத்துவதற்கும் மூப்பர்களால் நிறைய நேரம் செலவழிக்க முடிகிறது.
சபைக்காக நிறைய உதவிகளைச் செய்கிறார்கள். கூட்டத்துக்கு வருகிறவர்களை அன்பாக வரவேற்று உட்கார வைக்கிறார்கள், மைக்-ஐ ரெடி செய்வது, இசையை போடுவது போன்ற வேலைகளை செய்கிறார்கள். மற்றவர்களுக்கு தேவையான புத்தகங்களை எடுத்துக் கொடுக்கிறார்கள், சபையின் கணக்குவழக்கைப் பார்த்துக்கொள்கிறார்கள், எங்கே ஊழியம் செய்ய வேண்டும் என்று சபையில் இருக்கிறவர்களுக்கு சொல்கிறார்கள். ராஜ்ய மன்றத்தை சுத்தமாக வைப்பதற்கு, பழுது பார்ப்பதற்கு உதவியாக இருக்கிறார்கள். வயதானவர்கள் யாருக்காவது உதவி செய்யச் சொல்லி மூப்பர்கள் சொன்னால் உடனே செய்கிறார்கள். கொடுத்த வேலையை சந்தோஷமாக செய்வதால் எல்லாருடைய மதிப்பையும் பெறுகிறார்கள்.—1 தீமோத்தேயு 3:13.
மற்றவர்களுக்கு நல்ல உதாரணமாக இருக்கிறார்கள். பைபிளில் சொல்லியிருக்கிற நல்ல குணங்களை இவர்கள் காட்டுகிறார்கள். அதனால்தான், உதவி ஊழியர்களாக சேவை செய்கிறார்கள். கடவுள்மீது எங்களுக்கு இருக்கும் நம்பிக்கையைப் பலப்படுத்தும் விதத்தில் சபைக் கூட்டங்களில் சில பகுதிகளை நடத்துகிறார்கள். இவர்கள் ஊழியத்தை சுறுசுறுப்பாக செய்வதைப் பார்த்து, நாங்களும் சுறுசுறுப்பாக ஊழியம் செய்கிறோம். மூப்பர்களோடு சேர்ந்து இவர்கள் சேவை செய்வதால் சபையில் எல்லாரும் சந்தோஷமாகவும் ஒற்றுமையாகவும் இருக்க முடிகிறது. (எபேசியர் 4:16) காலப்போக்கில் இவர்களும் மூப்பர்களாக ஆக முடியும்.
எப்படிப்பட்டவர்கள் உதவி ஊழியர்களாக இருக்க முடியும்?
உதவி ஊழியர்கள் எப்படி சபைக்கு உதவியாக இருக்கிறார்கள்?
-