பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 102-105
நாம் மண்ணென்று யெகோவா நினைவுகூருகிறார்
யெகோவாவின் இரக்கத்தைப் பற்றி விளக்குவதற்கு தாவீது உதாரணங்களை பயன்படுத்தினார்.
வானத்துக்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரத்தை அளவிட முடியாதது போல யெகோவா நம்மீது காட்டுகிற உண்மையான அன்பையும் அளவிட முடியாது
கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரத்துக்கு யெகோவா நம் பாவங்களை தூக்கி எறிகிறார்
அடிபட்ட பிள்ளைமீது அப்பா அனுதாபம் காட்டுவது போல பாவம் செய்தவர்கள் மனம் திரும்பும்போது யெகோவாவும் இரக்கம் காட்டுகிறார்